தமிழ்நாடு

அடுத்தடுத்த அறிவிப்புகளால் கோவைக்கு நல்ல காலம் பொறக்குது! மத்திய, மாநில அரசுகளிடையே போட்டி!

Updated : ஜூலை 14, 2018 | Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
அடுத்தடுத்த அறிவிப்புகளால் கோவைக்கு நல்ல காலம் பொறக்குது! மத்திய, மாநில அரசுகளிடையே போட்டி!

கோவை மாநகருக்கென, பல்வேறு திட்டங்களையும் அறிவித்து, நிதியை ஒதுக்கீடு செய்வதில், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே போட்டி உருவாகியுள்ளது; அதேநேரத்தில், அறிவிக்கும் திட்டங்களை விரைவாக நிறைவேற்ற வேண்டு மென்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.கோவை நகரின் வளர்ச்சிக்கேற்ப கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், போக்குவரத்து நெரிசல், பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், கோவைக்கென பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை, மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.லாலி ரோட்டிலும்...
மேற்கு புறவழிச்சாலை மற்றும் விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலமெடுக்கும் பணி துவங்கியுள்ளது; காந்திபுரம், உக்கடம் ஆகிய இடங்களில் பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம்-சின்னியம்பாளையம் வரை உயர் மட்டச்சாலை அமைப்பதற்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. திருச்சி ரோட்டில், சுங்கம், ராமநாதபுரம் மற்றும் சிங்காநல்லுார் ஆகிய சந்திப்புகளில், பாலங்கள் கட்டப்படும் என்று முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, தடாகம் ரோட்டில் லாலி ரோடு சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மருதமலை ரோட்டில், வேளாண் பல்கலை முதல் நுழைவாயிலில் இருந்து, கவுலி பிரவுன் ரோடு-சர் சண்முகம் ரோடு சந்திப்பு வரையிலுமாக பாலம் கட்ட, நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு முடிவடைந்து, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கவுள்ளது.
மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில், இத்தனை பாலங்கள் கட்டப்படும் நிலையில், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறையும் பல்வேறு பாலங்களைக் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது; மத்திய அரசின் நிதியிலேயே, பொள்ளாச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு விரிவாக்கம் நடந்துள்ளது; ஈச்சனாரியில் மேம்பாலம் கட்டப்படவுள்ளது. கரூர்-கோவை புறவழிச்சாலை, தெற்கு புறவழிச்சாலைக்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.
சுந்தராபுரம் சந்திப்பிலும் 60 கோடி ரூபாயில் பாலம் கட்டுவதற்கு, திட்டமிடப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் ரோட்டில், சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ், துடியலுார் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, பாலங்கள் கட்ட வேண்டுமென்று, கோவை வடக்கு எம்.எல்.ஏ., அருண் குமார், ராஜ்யசபா எம்.பி., செல்வராஜ் ஆகியோர், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
1.6 கி.மீ., நீளமுள்ள பாலம்...
இவர்களின் கூட்டு முயற்சியால், பெரியநாயக்கன்பாளையத்தில் 1.6 கி.மீ., துாரத்துக்கு, 85 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டுவதற்கு, மத்திய தரைவழிப்போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது; இதற்கான நிதி, விரைவில் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று, திருச்சி ரோட்டில், மாநில அரசு அறிவித்துள்ள மூன்று பாலங்களையும் மத்திய அரசே நிதி ஒதுக்கி, கட்ட வேண்டுமென்று, கோயம்புத்துார் சிட்டிசன் கவுன்சில், வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியையும் சந்திக்கவுள்ளது. ஒரு வேளை, இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால், மத்திய அரசின் நிதியிலேயே இந்த பாலங்கள் கட்டப்படும்; அதில், சுங்கம், ராமநாதபுரத்துக்கு தனித்தனியாக பாலம் கட்டாமல் இரு இடங்களையும் இணைக்கும் விதமாக பாலம் கட்ட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, மத்திய, மாநில அரசுகள், போட்டி போட்டுக் கொண்டு, கோவைக்கான திட்டங்களை அறிவித்து வருகின்றன.
இத்தனை பாலங்களும், கட்டி முடிக்கப்பட்டால், கோவை மாநகரில், போக்குவரத்து நெரிசல், ஓரளவுக்குக் கட்டுக்குள் வருமென எதிர்பார்க்கலாம். ஆனால், அறிவித்த திட்டங்களை இரு அரசுகளும் இணைந்து, விரைவாக நிறைவேற்ற வேண்டியது மிகவும் அவசியம். பாலங்கள் மட்டுமின்றி, புதிய புறவழிச்சாலைகளையும் அமைத்து, 'மெட்ரோ' ரயில் போன்ற மக்கள் போக்குவரத்து திட்டத்தையும் கொண்டு வந்தால் மட்டுமே, கோவையின் நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
என்ன செய்கிறது குழு?
கோவை நகருக்குள் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, நீலிக்கோணாம்பாளையம், தண்ணீர் பந்தல் ரோடு, ஆவாரம்பாளையம் என பல இடங்களிலும், ரயில்வே மேம்பாலங்கள் கட்டும் பணி துவங்காமலும், துவங்கி அரைகுறையாகவும் நிற்கின்றன; நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களே இதற்குக் காரணம். இத்தகைய சிக்கல்களைத் தீர்க்க, நிலம் கையகப்படுத்துவதற்கென சிறப்புக்குழு (கமிட்டி) அமைக்கப்பட்டது; அதை அமைத்த பின்னும், இப்பணிகள் வேகமெடுப்பதாகத் தெரியவில்லை.-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bosco - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஆக-201815:46:35 IST Report Abuse
Bosco Coimbatore full of Marvadies that is the reason
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
14-ஆக-201808:36:42 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> எது எப்படியோ காசுக்கு தண்ணீர் வாங்கும் நிலைமை ஒலியனும் கோவை ஈரோடு திருப்பூர் மதுரை திண்டுக்கல் etc etc இடங்களிலே , அவ்ளோ தண்ணீர் கஷ்டம் தானுங்க எப்போதும் மழைகொட்டினால் மழைநீரை சேமிச்சும் வாணச்சுண்டோம் ஆதிலேந்து என்பதுதான் உண்மை குடமலே நீர் தூக்கிதூக்கியே இடுப்பிலே பலமே இல்லாது வாழும் பொண்ணுகளே அதிகம் என்பது உண்மை
Rate this:
Share this comment
Cancel
CBE CTZN - Chennai,இந்தியா
14-ஜூலை-201813:08:56 IST Report Abuse
CBE CTZN நடக்குமா .... இல்ல... நடக்கும் ஆனா நடக்காது.... என்னமோ நடந்த செரி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X