சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி பலியாக காரணமான பயிற்சியாளர் கைது கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை இல்லை

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (7)
Share
Advertisement
கோவை:பேரிடர் ஒத்திகையின் போது, பயிற்சியில் ஈடுபட மறுத்த கல்லுாரி மாணவியை, மாடியிலிருந்து தள்ளி, பலியாக காரணமான பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.கோவை மாவட்டம், நரசீபுரத்தில் கலைமகள், கலை அறிவியல் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில் நேற்று முன்தினம் மாலை, மாணவ - மாணவியருக்கு பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.சென்னையைச் சேர்ந்த தேசிய பேரிடர்
 மாணவி பலியாக காரணமான பயிற்சியாளர் கைது  கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை இல்லை

கோவை:பேரிடர் ஒத்திகையின் போது, பயிற்சியில் ஈடுபட மறுத்த கல்லுாரி மாணவியை, மாடியிலிருந்து தள்ளி, பலியாக காரணமான பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், நரசீபுரத்தில் கலைமகள், கலை அறிவியல் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில் நேற்று முன்தினம் மாலை, மாணவ - மாணவியருக்கு பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.சென்னையைச் சேர்ந்த தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகம், 31, தலைமையில் குழுவினர் பயிற்சி அளித்தனர். ஆபத்து காலங்களில், மாடியில் இருந்து குதித்து தப்பிப்பது குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது, இரண்டாவது மாடியில் இருந்து மாணவர்களை குதிக்க வைத்து, அவர்கள் தரையில் விழாமல் இருப்பதற்கு வலையை விரித்து பிடித்தனர். வரிசையாக, ஒவ்வொரு மாணவர்களும் குதித்தனர்.அதே கல்லுாரியில், பி.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்த, தொண்டாமுத்துார், நாதேகவுண்டன் புதுாரைச் சேர்ந்த நல்லா கவுண்டர் மகள் லோகேஸ்வரி, 19, என்பவரை மாடியில் இருந்து குதிக்குமாறு பயிற்சியாளர் அறிவுறுத்தினார்.
உடல் தகனம்
பயமாக இருப்பதாக கூறிய லோகேஸ்வரி, கீழே குதிக்க மறுத்து, பக்கவாட்டு சுவரை இறுக பிடித்துக் கொண்டார். ஆனால், பயிற்சியாளர் ஆறுமுகம், மாணவி தோள்பட்டையை பிடித்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளி விட்டார்.இதில், முதல் மாடியின், 'சன்ஷேடு' மீது தலை மோதியதில், பலத்த காயம் ஏற்பட்டு, லோகேஸ்வரி, ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். கோவை அரசு மருத்துவ மனையில், மாணவியின் உடல், பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. பின், தகனம் செய்யப்பட்டது.

கல்லுாரிக்கு நேற்று ஒரு நாள் விடுமுறை விடப்பட்டது. கல்லுாரிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.ஆலாந்துறை போலீசார் விசாரித்து, மாணவியின் இறப்புக்கு காரணமான, சென்னையைச் சேர்ந்த, பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகத்தை நேற்று கைது செய்தனர். அவர் மீது, கொலை செய்யும் நோக்கம் இல்லாமல் மரணம் விளைவித்தல் என்ற 304 - 2 சட்டப்பிரிவில், வழக்கு பதிவு செய்யப்பட்டுஉள்ளது.

கல்லுாரி நிர்வாகம் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. ஆறுமுகம் மட்டும் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார்.கல்லுாரி நிர்வாகத்தினரை வழக்கில் சேர்க்காதது ஏன் என, டி.எஸ்.பி., வேல்முருகனிடம் கேட்ட போது, ''கல்லுாரி நிர்வாகம் மீது புகார் வரவில்லை. அதனால், சேர்க்கப்படவில்லை,'' என்றார்.ஆறுமுகம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் அல்லது அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

ரூ.5 லட்சம் நிவாரணம்

மாணவி லோகேஸ்வரி குடும்பத்துக்கு, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து, ஐந்து லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, மாணவியின் தந்தை நல்லா கவுண்டரை நேற்று நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார். பின், ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

தந்தை கதறல்

மாணவியின் தந்தை நல்லா கவுண்டர், 63, கண்ணீருடன் கூறியதாவது:என் மகள் பயிற்சியில் ஈடுபட மறுத்து, பயந்து நடுங்கியும், வலுக்கட்டாயமாக தள்ளி விட்டு அநியாயமாக கொன்று விட்டனர். கல்லுாரி நிர்வாகம், சம்பவத்தை பற்றி கண்டுகொள்ளவே இல்லை. போதிய பாதுகாப்பு இல்லாமல் பயிற்சி கொடுத்து உள்ளனர்.பயிற்சி கொடுத்த ஆறுமுகம் என்பவர், இடது கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி. ஒரு மாற்று திறனாளியை வைத்து, இதுபோன்ற பயிற்சி அளித்துள்ளனர். கல்லுாரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கஷ்டப்பட்டு படிக்க வைத்த என் மகளை அநியாயமாக கொன்று விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manick - chennai,இந்தியா
15-ஜூலை-201815:31:43 IST Report Abuse
manick It is an assassination and all college administration should inform Local fire department and conduct the same withe their guidelines . Fake coordinator should be held legally .
Rate this:
Cancel
Ravi Kumar - chennai,இந்தியா
14-ஜூலை-201814:17:27 IST Report Abuse
Ravi Kumar எல்லாம் இருந்தும் என்ன பயன் பேரிடர் மேலாண்மை பயிற்சியே ஒரு பெரும் துயரை ஏற்படுத்தியது ? காரணம் சரியான திட்டமிடல் இல்லாமையே. பயிற்ச்சியே இடர் வரும்பொழுது எப்படி சமாளிக்க வேண்டும் என்பதற்காதான். It is very sad to mention that there are no basic principles of Disaster management implied though available: 1. Disaster Management for departments / institutions to be implemented ( NDRA says, but not in reality ) It has to be followed along with sanction of licenses,.. like rain water harvest ,.. 2. Protocol for Mock drill is missing 3. Coordination before Mock drill ( similar to our Tool Box Talk in Industries before commencing the activity ),. நாம் கற்றுக் கொள்வது என்ன ? மீண்டும் இது போல் ஒரு தவறு நடக்காமல் இருக்க செய்யக் கூடியவை பற்றி கண்டிப்பாக ஆலோசிக்கப் படவேண்டும்.
Rate this:
Cancel
yuva - tirupur,இந்தியா
14-ஜூலை-201813:49:42 IST Report Abuse
yuva கல்லுாரி நிர்வாகம் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.ஆறுமுகம் மட்டும் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார்.கல்லுாரி நிர்வாகத்தினரை வழக்கில் சேர்க்காதது ஏன் என, டி.எஸ்.பி., வேல்முருகனிடம் கேட்ட போது, ''கல்லுாரி நிர்வாகம் மீது புகார் வரவில்லை.போதிய பாதுகாப்பு இல்லாமல் பயிற்சி கொடுத்து உள்ளனர்.பயிற்சி கொடுத்த ஆறுமுகம் என்பவர், இடது கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி. ஒரு மாற்று திறனாளியை வைத்து, இதுபோன்ற பயிற்சி அளித்துள்ளனர்.( கல்லுாரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்). அய்யா இது என்ன ? புகார் இல்லையா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X