பெண்ணை கொன்றவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை கொன்றவர் கைது

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (1)

ராணிப்பேட்டை:போலீஸ் ஸ்டேஷன் எதிரிலேயே, பெண்ணை வெட்டி கொலை செய்த கள்ளக்காதலனை, போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், செங்காடு பகுதியை சேர்ந்தவர், சுகுணா, 45. இவர் கணவர் கடந்தாண்டு இறந்ததையடுத்து, சுரேந்திரன், 48 என்பவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார். இந்நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த, 11ம் தேதி மாலை, 4:30 மணிக்கு ராணிப்பேட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற சுகுணா, சுரேந்திரன் மீது புகார் செய்தார்.பின், அங்கிருந்து வெளியே வந்த அவரை, பைக்கில் வந்த ஒருவர், போலீஸ் ஸ்டேஷன் எதிரிலேயே, சரமாரியாக வெட்டி, தப்பினார். இதில் சுகுணா இறந்தார்.

ராணிப்பேட்டை போலீசார், கள்ளக்காதலன் சுரேந்திரனை நேற்று கைது செய்தனர். போலீசில் தன் மீது புகார் கொடுத்ததால், சுகுணாவை கொலை செய்தது தெரியவந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X