ராணுவ மையத்தில் காட்டெருமை சிலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராணுவ மையத்தில் காட்டெருமை சிலை

Added : ஜூலை 14, 2018

குன்னுார்:குன்னுார் வெலிங்டன் பேரக்ஸ் அருகே, 'மெட்ராஸ் ரெஜிமென்ட்' சார்பில், வனவிலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, 'மெட்டல் பைபர்' காட்டெருமை சிலை, தத்ரூபமாக வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே, வெலிங்டன் ராணுவ மையம் உள்ளது. இதன் அருகிலேயே வனப்பகுதி உள்ளதால், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள், சாலைகளில் நடமாடி வருகின்றன.வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், இதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பூங்காக்களில், மான் உள்ளிட்ட பல வன விலங்குகளின் சிலைகள் வைக்கப்பட்டன.

பேரக்ஸ் மிலிட்டரி மருத்துவமனை அருகே, சாலையோரத்தில், வேலி தடுப்புகள் அமைக்கப்பட்டு, அதனுள், பைபர் மெட்டலில் ஆன காட்டெருமை சிலை, தற்போது வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X