பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சுங்கத்துறையின் சிறப்பு சான்று

Added : ஜூலை 14, 2018
Share
Advertisement
சென்னை:சரக்குகளை கையாளும் நடைமுறையை விரைவுபடுத்தும் நோக்கில், சென்னை மண்டல சுங்கத்துறை, 24நிறுவனங்களுக்கு, ஏ.இ.ஒ., சான்றிதழை வழங்கியுள்ளது.உலக வர்த்தகம் பாதுகாப்பான முறையில் இயங்கும் வகையில், 'சேப்' என்ற தர தகவலமைப்பை, உலக சுங்க அமைப்பு நிறுவியுள்ளது. இதன்படி, ஏ.இ.ஒ., என்ற, அனுமதிக்கப்பட்ட பொருளாதார செயல்பாட்டாளர்களை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சென்னை:சரக்குகளை கையாளும் நடைமுறையை விரைவுபடுத்தும் நோக்கில், சென்னை மண்டல சுங்கத்துறை, 24நிறுவனங்களுக்கு, ஏ.இ.ஒ., சான்றிதழை வழங்கியுள்ளது.
உலக வர்த்தகம் பாதுகாப்பான முறையில் இயங்கும் வகையில், 'சேப்' என்ற தர தகவலமைப்பை, உலக சுங்க அமைப்பு நிறுவியுள்ளது. இதன்படி, ஏ.இ.ஒ., என்ற, அனுமதிக்கப்பட்ட பொருளாதார செயல்பாட்டாளர்களை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சுங்கத்துறையின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, பன்னாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு, வர்த்தக பாதுகாப்புத் தன்மையை உறுதிப்படுத்தும் நிறுவனங்களுக்கு, ஏ.இ.ஒ., தரச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

இந்த சான்றிதழ் பெறும் நிறுவனங்களின் சரக்குகளை, சுங்க அதிகாரிகள் ஆய்வை விரைந்து முடித்து, செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைப்பர். சென்னை சுங்க மண்டலத்தில், இதுவரை, 352 நிறுவனங்களுக்கு, ஏ.இ.ஒ., தரச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளன.சென்னை சுங்க இல்லத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், சுங்கத்துறையின் தலைமை கமிஷனர் அஜித்குமார், 24 நிறுவனங்களுக்கு, ஏ.இ.ஒ., தரச் சான்றிழ்களை வழங்கினார். இந்த தரச் சான்றிதழ், இலகு வழி வர்த்தகத்திற்கு பெரிதும் உதவும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X