வேலை வாய்ப்பு முகாம் 70 பேருக்கு பணி நியமனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேலை வாய்ப்பு முகாம் 70 பேருக்கு பணி நியமனம்

Added : ஜூலை 14, 2018

பெ.நா.பாளையம்:கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில், 70 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
தமிழக அரசு சார்பில், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மேட்டுப்பாளையம் நஞ்சைய்யா லிங்கம்மாள் தொழிற்பயிற்சி மையம், ராமகிருஷ்ண மிஷன் ஐ.டி.ஐ., ஆகியவற்றில் பயிலும் மாணவர்களின் சார்பில், அறிவியல் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இக்கண்காட்சியை கோவை மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணை இயக்குனர் ரவிபாஸ்கர் துவக்கி வைத்தார். கண்காட்சியையொட்டி, கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வாயிலாக வேலை அளிப்போர் மற்றும் வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. முகாமில் 169 பேர் பங்கேற்றனர். 28 நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, நேர்காணல் நடத்தி, 70 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X