தியேட்டருக்கு நொறுக்குத்தீனி எடுத்து வரலாம்: மஹாராஷ்டிரா முடிவு

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (7)
Share
Advertisement
தியேட்டருக்கு, நொறுக்குத்தீனி, எடுத்து, வரலாம், மஹாராஷ்டிரா,  முடிவு

மும்பை: மஹாராஷ்டிராவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு வருபவர்கள் இனிவீட்டிலிருந்தே நொறுக்கு தீனி அயிட்டங்களை கொண்டு வரலாம் . அம்மாநில அரசு சட்டத்தை அமல்படுத்தவுள்ளது.. மஹாராஷ்டிராவில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள், சினிமா ஹால்களில் படம் பார்க்க வரும் ரசிகர்கள் தண்ணீர் பாட்டீல் கூடகொண்டு செல்ல முடியாத நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் தியேட்டர் வளாகத்திற்குள் விற்கப்படும் நொறுக்கு தீனிகளை தான் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர். டிக்கெட் விலையைவிட நொறுக்குத்தீனி விலை அதிகம் வைத்து தியேட்டர் நிர்வாகிகள் விற்பனை செய்வதாக மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மஹாரஷ்டிரா அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, விலையை ஒழுங்குப்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து மஹாராஷ்டிரா அரசு சட்டம் திருத்தம் கொண்டு வந்துள்ளது. தற்போது மஹராஷ்டிரா சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரில் சட்ட திருத்தம் இயற்றப்பட்டது.. இனி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தியேட்டர்களின் புதிய முறை அமல்படுத்தபடஉள்ளதாகவும், அதன்படி தியேட்டர் வரும் ரசிகர்கள் தங்களது வீட்டிலிருந்தே நொறுக்குத்தீனி, ஸ்நாக்ஸ் அயிட்டங்களை கொண்டு வரலாம் என தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
14-ஜூலை-201811:31:24 IST Report Abuse
Kuppuswamykesavan நொறுக்கு தீனியில் அடிக்கப்படும் பகல் கொள்ளை தடுக்கப்படுவது, வரவேற்க்க தானுங்களே செய்யனும், நாம்.
Rate this:
Cancel
raj - ,
14-ஜூலை-201808:45:04 IST Report Abuse
raj கெட்டு போன மட்டன் பிரியாணியும்.... ஊச வாடை வெங்காயமும் ....முடியடா சாமி ....தியேட்டரே வேண்டாம்....
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூலை-201808:28:43 IST Report Abuse
Srinivasan Kannaiya திரை அரங்கில் வழங்கும் சினிமா டிக்கெட்டை விட நொறுக்குத்தீனி விலைகள் மிக மிக அதிகம்.,.. அதுவும் குழந்தைகளை அழைத்து சென்று விட்டால் கேட்கவே வேண்டாம்... இது நல்ல முடிவு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X