வெள்ளகோவில்:வெள்ளகோவில், முத்துார் - அர்ச்சுனாபுரம், ஓடையின் இடதுபுற மையப்பகுதியில் திடீரென மதியம் 12 மணியளவில் தீ பிடித்தது. காற்று பலமாக அடித்ததால் தீ மளமளவென தரைப்பகுதி, மற்றும் பனை, தென்னை மரங்களுக்கும் பரவியது. தகவலறிந்த காங்கயம், வெள்ளகோவில், தீயணைப்பு நிலையத்தினர், அர்ச்சுனாபுரம் விரைந்தனர். நான்கு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.பனை மரங்கள், செடி, கொடிகள் எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த தீ விபத்தில், காளிக்குமார் தோட்டத்தில், 500 பனைமரங்கள் எரிந்து சாம்பலானது.