மருத்துவமனையில் கூடுதல் இயந்திரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் கூடுதல் இயந்திரம்

Added : ஜூலை 14, 2018

திண்டுக்கல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக 2015 ல் 4 டயாலிசிஸ் இயந்திரம் வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மேலும் இரண்டு டயாலிசிஸ் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.பழநி அரசு மருத்துவமனையிலும் ஒரு டயாலிசிஸ் இயந்திரம் செயல்பாட்டில் உள்ளது. திண்டுக்கல், பழநியை சுற்றியுள்ள ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை தேவைப்படுவோர் பயன்பெறலாம் என, கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X