பொது செய்தி

தமிழ்நாடு

கொப்பரை மீதான, 'செஸ்' வரிக்கு விலக்கு தேவை:அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்

Added : ஜூலை 14, 2018
Advertisement

கிணத்துக்கடவு:கொப்பரை மீது விதிக்கப்படும், ஒரு சதவீத, 'செஸ்' வரியை, ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு தென்னை விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தமிழகத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்கள் தென்னை சாகுபடிக்கு மட்டுமன்றி, கொப்பரை உற்பத்தியிலும் முதலிடத்தில் உள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள, 500க்கும் மேற்பட்ட கொப்பரை உற்பத்தி மையங்களில், பொள்ளாச்சி, நெகமம் மற்றும் ஆனைமலை பகுதியில் மட்டும், 350 மையங்கள் செயல்படுகின்றன.இம்மையங்களில் உற்பத்தியாகும் கொப்பரை, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளகோவில், முத்துார் மற்றும் ஊத்துக்குளி பகுதியில் செயல்படும், 40க்கும் மேற்பட்ட எண்ணை உற்பத்தி மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
கொப்பரை உற்பத்திக்கு மத்திய அரசு, ஐந்து சதவீத ஜி.எஸ்.டி., வரி விதித்துள்ளது. மேலும், கொப்பரைக்கு, ஒரு சதவீத, 'செஸ்' வரியும் வசூலிக்கப்படுகிறது.ஏற்கனவே, ஒரு லோடு (16 டன்) கொப்பரைக்கு, தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி, 83 ஆயிரத்து, 600 ரூபாய் ஜி.எஸ்.டி., வரியும், ஒரு சதவீத செஸ் வரியாக, 16 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக, 99 ஆயிரத்து, 600 ரூபாய் செலுத்தப்படுகிறது.
வியாபாரிகளுக்கு விதிக்கப்படும், ஒரு சதவீத, 'செஸ்' வரி, தென்னை விவசாயிகள் மீது திணிக்கப்படுகிறது. இதனால், தோப்புகளில், தேங்காய் விலையை குறைத்தே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, மழையின்றி தென்னையில் காய்ப்பு திறன் இழந்துள்ள விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க, ஒரு சதவீத, 'செஸ்' வரியையும் ரத்து செய்ய வேண்டும். அதற்கேற்ப, தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என, தென்னை விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X