உடுமலை:உடுமலையில், மானுபட்டி, ஜல்லிபட்டி, கொங்குரார்குட்டை, லிங்கமாவூர் உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.விவசாயிகள் கூறியதாவது: உடுமலையில், மேற்குதொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள பெரும்பாலான கிராமங்களில் மா சாகுபடியே பிரதானமாக உள்ளது. கடந்த, இரண்டாண்டுகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியால், கணிசமான மரங்கள் பட்டுப்போய் காட்சியளிக்கிறது. இதனால், மகசூலும் குறிப்பிட்டளவு குறைந்துள்ளது.
தென்னை மரங்களுக்கு மறுநடவு மானியம் வழங்குவதால், விவசாயிகளுக்கு மிகவும் உதவியாகவுள்ளது. அதேபோல், மா மரங்களுக்கும் மறுநடவு மானியம் வழங்கினால் மிகவும் உபயோகமாக இருக்கும்.மா நாற்றுகளின் விலை 300 ரூபாய்க்கு மேல் உள்ளதால், அனைத்து விவசாயிகளாலும் வாங்க முடியாத நிலை உள்ளது. அதுமட்டுமில்லாமல், உடுமலை சுற்றுப்பகுதியில் தரமான மா நாற்றுகள் கிடைப்பதில்லை. தேனி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று எடுத்துவர வேண்டியுள்ளது. இதனால், தரமான மா நாற்றுகள் கிடைக்கவும், மறுநடவு மானியம் வழங்கவும் தோட்டக்கலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE