பொது செய்தி

இந்தியா

நாட்டின் 3-வது திருநங்கை நீதிபதி :அசாமில் இன்று பதவியேற்பு

Updated : ஜூலை 14, 2018 | Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (9)
Share
Advertisement
கவுகாத்தி: மகாராஷ்டிரா,மே.வங்கத்தை தொடர்ந்து அசாம் மாநிலத்தில் திருநங்கை ஒருவர் நாட்டின் மூன்றாவது நீதிபதியாக இன்று பதவியேற்கிறார்.வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தில் லோக் அதாலத் நீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவராக சுவாதிபிதான் ராய் என்ற திருநங்கை ஒருவர் நீதிபதியாக இன்று பதவியேற்கிறார். இது குறித்து அவர் கூறுகையில் : என்னை நீதிபதியாக நியமனம்
திருநங்கை நீதிபதி,  லோக் அதாலத் நீதிபதி , சுவாதிபிதான் ராய் ,  ஜோயிதா மோன்தால் , வித்யா கம்ப்ளே , சத்யஸ்ரீ சர்மிளா , நாட்டின் 3-வது திருநங்கை நீதிபதி, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ,அசாம்,
transgender judge, Assam, Lok Adalat Judge, 
Swathi Python Rai, Joita Montal, Vidya Kamble, Satyasree Sharmila, Judge of the 3rd Transgender, West Bengal,Maharashtra,

கவுகாத்தி: மகாராஷ்டிரா,மே.வங்கத்தை தொடர்ந்து அசாம் மாநிலத்தில் திருநங்கை ஒருவர் நாட்டின் மூன்றாவது நீதிபதியாக இன்று பதவியேற்கிறார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தில் லோக் அதாலத் நீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவராக சுவாதிபிதான் ராய் என்ற திருநங்கை ஒருவர் நீதிபதியாக இன்று பதவியேற்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில் : என்னை நீதிபதியாக நியமனம் செய்திருப்பதுஎன்னுடைய சமுதாயத்திற்கு மிகவும் சாதகமான விசயமாகும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரான பாகுபாடுகுறித்த விழிப்புணர்வை உருவாக்க இது உதவும் என கூறினார். மூன்றாம் பாலினத்தவர்களின் திறன் அங்கீகரிக்கப்பட வேண்டும். அது அவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று உறுதி செய்ய போதுமான வாய்ப்பாக வழங்கப்பட வேண்டும்.
மேலும் பல்வேறு நீதிமன்றங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிராக பல தீர்க்கப்படாத வழக்குகள் உள்ளன. அவை விரைவில் தீர்க்கப்படும் என தான் நம்புவதாகவும்,ஒரு நீதிபதியாக இயற்கையான நீதிக்கான கொள்கையை நான் பராமரிக்க முடியும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஜோயிதா மோன்தால் நாட்டின் முதல் திருநங்கை நீதிபதியாக பதவியேற்றார். தொடர்ந்து 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வித்யா கம்ப்ளே நாக்பூரில் 2-வது திருநங்கை நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.

தமிழத்திலும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த திருநங்கை சத்ய்ஸ்ரீ சர்மிளா என்பவர் கடந்த மாதம் 30-ம் தேதி இந்தியாவிலேயே முதல் திருநங்கை வக்கீலாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜூலை-201821:45:01 IST Report Abuse
Bhaskaran நேர்மையான தீர்ப்புகள் மூலம் உங்களது பெயர் பாரதம் முழுமைக்கும் புகழ் பெறவேண்டும்
Rate this:
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
14-ஜூலை-201819:56:04 IST Report Abuse
Pasupathi Subbian பாலினம் எதுவாக இருந்தாலும் சரி, நேர்மை ,நீதி முக்கியம்.
Rate this:
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
14-ஜூலை-201812:56:39 IST Report Abuse
Jaya Ram ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமமே ஆனால் நீதிபதியாக பதவி ஏற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது எனவே நீதியும் தங்களிடமிருந்து சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X