பொது செய்தி

தமிழ்நாடு

பட்டாம்பூச்சியாக... பறக்கும் மனசு!

Added : ஜூலை 14, 2018
Advertisement

''கண்களை மூடி, தியானித்திருப்பதைக் காட்டிலும், 'மண்டலா' ஓவியங்களை வரையும்போது, மன அழுத்தம் குறைவதுடன், பட்டாம்பூச்சியாக மனம் பறப்பதை உணர்வீர்கள்,'' என்கிறார் கோவையை சேர்ந்த ஓவியர் வெண்ணிலா, 26.சாயிபாபா காலனியில் உள்ள தனியார் டிசைனிங் நிறுவன, 'கிரியேட்டிவ்' டைரக்டராக பணிபுரியும் இவரது மிக முக்கிய பொழுதுபோக்கு, 'மண்டலா' ஓவியங்கள் வரைவது. நெல்சன் மண்டேலா கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன, 'மண்டலா'...அவரே, நம்மிடம் விளக்குகிறார்...மண்டலா என்றால் சமஸ்கிருதத்தில், 'வட்டம்' என்று அர்த்தம். காலச்சக்கரம் என்றும் மண்டலா ஓவியங்களை அழைப்பர். இந்து மத வழிபாட்டில், இதற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. மிகுந்த பொறுமையுடன் கணித சாஸ்திரங்களையும் தியான நியமங்களையும் பின்பற்றி வரையப் படுபவை. மெல்லிய வண்ண மூங்கில் குழல்களால் துளித்துளியாக வண்ண மணல்களை தேய்த்து, நுணுக்கமான கோலமாக இவை தயார் ஆகின்றன.வட்டத்தை சுற்றி, பல்வேறு உருவங்கள் வரையப்பட்டிருக்கும். ஓவியத்தின் நடுப்பகுதியை உற்று நோக்கி தியானித்தால், தியான நிலையை மனம் வெகு சீக்கிரமாக அடையும். அதேசமயம், மனமும் உன்னத நிலையை அடையும் என்று, முன்னோர் சொல்வதுண்டு. ஒரு விதத்தில் நம்மூரில் வரையப்படும் ரங்கோலி போன்றதே. வட்டம், சதுரம், செவ்வகம் உள்ளிட்ட கணிதவியல் வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு வரையலாம்.பெரும்பாலும் வட்ட வடிவமாகவே அதிகளவில் வரையப்படுகிறது. இன்றும் பல்வேறு கோவில்களில் மட்டுமின்றி, வீடுகளிலும் புனிதமான இடங்களிலும் மரப்பலகையில், பட்டுத்துணிகளில் இவ்வகை மண்டலா ஓவியங்களை பார்க்கலாம். மனம் அலைபாயாமல் இருக்க, உடலையும் மனதையும் ஒன்று சேர்க்க, 'மண்டலா' ஓவியத்தை பயன்படுத்துவது பலரும் அறியாத விஷயம்.வரைபவர்களுக்கும் மன அமைதி கிடைக்கும் என்பதால், கடந்த இரு ஆண்டுகளாக இவ்வகை ஓவியங்களை வரைந்து வருகிறேன். ஓவியத்தின் நுட்பம் மற்றும் தன்மைகேற்ப எடுத்துக்கொள்ளும் நேரம் மாறுபடும். வீட்டு அலங்காரப்பொருட்களாகவும், பிறருக்கு பரிசு பொருட்களாகவும் அளிக்கலாம் என்பதால், நெருங்கிய வட்டத்தில் பலர் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர். வீட்டில் இருந்தே சுயதொழில் செய்ய விரும்பும் கற்பனை வளம் கொண்ட பெண்களுக்கு இக்கலை நிச்சயம் கை கொடுக்கும். ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றுத்தரவும் தயாராக உள்ளேன், என்கிறார் வெண்ணிலா!தொடர்புக்கு: 98942 33743

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X