பொது செய்தி

தமிழ்நாடு

'பொன்னியின் செல்வனை' காணும் பொன்னாள்!சரித்திர நாடகம் மீண்டும் அரங்கேற்றம்

Added : ஜூலை 14, 2018
Advertisement

தமிழில் எழுதப்பட்ட சரித்திர நாவல்களில் மிக முக்கியமான நாவல் பொன்னியின் செல்வன். 68 ஆண்டுகளுக்கு முன், எழுத்தாளர் கல்கியால் எழுதப்பட்ட இந்த நாவல், மூன்று தலைமுறை வாசகர்களை கடந்து, இன்னும் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.இந்த நாவலை முழுமையாக வாசித்தவர்கள், சோழர் காலத்து பிரஜையாகவே மாறிவிடுவர்.வந்தியத்தேவன், குந்தவை, பெரிய பழுவேட்டரையர், நந்தினி, அருண் மொழிவர்மன் போன்ற முக்கிய கதாபாத்திரங்களை தமிழ் வாசகர்களால் என்றென்றைக்குமே மறக்க முடியாது. சோழர்களின் வரலாற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த நாவல், புது வெள்ளம், சுழல் காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாகச்சிகரம் என, ஐந்து தொகுதிகளாக, 300க்கும் மேற்பட்ட அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது.கி.பி., 10ம் நுாற்றாண்டில், தமிழகத்தில் கோலோச்சி வந்த சோழப்பேரரசின் சாம்ராஜ்யத்தையும், அவர்களின் வீர தீர சாகசங்கள் நிறைந்த போர்க்களங்களையும் மிக நேர்த்தியாக சித்தரிக்கும் இந்த சரித்திர நாவலை, திரை வடிவில் கொண்டு வரும் முயற்சி, இன்று வரை கானல் நீராகவே உள்ளது. ஆனால், சென்னையை சேர்ந்த டி.வி.கே., தியேட்டர், இந்த நாவலுக்கு நாடக வடிவம் கொடுத்து, சிறப்பாக அரங்கேற்றி வருகிறது.பிரமாண்டமான அரங்க அமைப்புகளுடன், பொருத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, இயக்குனர் மல்லிக் ராஜ் மற்றும் தயாரிப்பாளர் ரமேஷ் ஆகியோர், தமிழகம் முழுவதும் இந்த சரித்திர நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில், நாளை (ஞாயிறு) பகல், 2:00 மணிக்கும், மாலை, 6:00 மணிக்கும் இரண்டு காட்சிகள் நடத்தப்படுகின்றன. மற்ற மாவட்டங்களை விட, கோவையில் கல்கி வாசகர்கள் மற்றும் நாடக ரசிகர்களால் இந்த நாடகம் அதிகம் விரும்பிப் பார்க்கப்படுகிறது. அவர்களுக்காகவே, மீண்டும் இங்கு இந்த நாடகம் நடத்தப்படுகிறது. டிக்கெட் அரங்கில் கிடைக்கும்.விபரங்களுக்கு, 9884152200 என்ற எண்ணிலும், www.bookmyshow.com என்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X