சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பறி ஆசாமிகள் கைது: 30 பவுன் நகை பறிமுதல்

Added : ஜூலை 14, 2018
Advertisement

கோவை:கோவையில், பைக்கில் சென்று வழிப்பறி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 30 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.வழிப்பறி ஆசாமிகளை பிடிக்க தனிப்படை போலீசார், கோவையில் நேற்று வாகன சோதனை நடத்தினர். கண்ணப்பன் நகர், புறநகர் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில், பைக்கில் வந்த இருவரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். தீவிர விசாரணையில், இருவரும், 2015 முதல், காட்டூர், சாய்பாபா காலனி, ரத்தினபுரி ஆகிய போலீஸ் ஸ்டேஷன் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறி மற்றும் கன்னக்கோல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.வழிப்பறியில் ஈடுபட்ட புலியகுளம், காத்தசாமி வீதியை சேர்ந்த உன்னிகுமார் மகன் அபி,27, ரேஸ்கோர்ஸ், தாமஸ் பார்க், அரசு ஊழியர் குடியிருப்பில் வசிக்கும் ரவிகுமார் மகன் ஆதித்யா,23, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 30 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டன. கைதான இருவரும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X