தொடரும் கனமழை: நீர் வரத்து அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடரும் கனமழை: நீர் வரத்து அதிகரிப்பு

Added : ஜூலை 14, 2018

ஊட்டி:நீலகிரியில் தொடரும் பருவமழையால், பில்லுார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.தென் மேற்கு பருவமழை தீவிரத்தால், கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. அதில், தேவாலாவில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.மேற்குதொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால், அத்திக்கடவு நீரோடையில் வழக்கத்தை விட நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பில்லுார் அணைக்கு வினாடிக்கு, 300 முதல், 350 கன அடி வரை தண்ணீர் வருகிறது.
மஞ்சூர்-கிண்ணக்கொரை, அப்பர்பவானி சாலை, இத்தலார், நடுவட்டம் அனுமாபுரம், சாண்டிநல்லா பகுதிகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ், அந்தந்த பகுதிகளில் மொத்தமுள்ள, 500 க்கு மேற்பட்ட நீராதார தடுப்பணைகளில், 80 சதவீதம் அளவுக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. பைக்காரா அருகே, டி.ஆர்., பஜார் பகுதி ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X