குன்னுார்:குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள பர்லியார் அரசு பழப்பண்ணையில், பல்வேறு பழவகைகள் விளைவிக்கப்படுகின்றன. கடல் மட்டத்தில் இருந்து, 830 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இங்கு, மலட்டு தன்மையை குணப்படுத்தி, குழந்தை பாக்கியத்தை உருவாக்க கூடிய துரியன் பழங்கள் நன்கு வளர்கிறது. இங்கு, 40 மரங்கள் உள்ள நிலையில்,
ஜன - பிப்., மற்றும் ஜூலை-ஆக.,மாதங்களில் இதன் விளைச்சல் உள்ளது.
தற்போது, துரியன் பழங்கள், மரங்களில் காய்க்க துவங்கியுள்ளதால், ஒரு கிலோ, 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 'குழந்தை பாக்கியத்துக்கு இந்த பழம் உகந்தது,' என, நம்பப்படுவதால், மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் உட்பட, உள்ளூர் மக்கள் இப்பழங்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். தவிர, துரியன் நாற்றுகளும் பண்ணையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement