சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானையால் வீடு சேதம்: சுவர் விழுந்து தம்பதி காயம்

Added : ஜூலை 14, 2018
Share
Advertisement

கூடலுார்:கூடலுார் அருகே, குடியிருப்பை யானை சேதப்படுத்திய போது, சுவர் இடிந்து விழுந்ததில் தம்பதியருக்கு காயம் ஏற்பட்டது.கூடலுார் தேவர்சோலை அருகே உள்ள மூலவயல் ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர் சோமன், 60, இவர் மனைவி ஜோதி, 48. இவர்களின் வீட்டில், நேற்று முன்தினம், 8 பேர் உறங்கிகொண்டிருந்தனர். நள்ளிரவு, 1:30 மணிக்கு அங்கு வந்த காட்டு யானை வீட்டை தாக்கி சேதப்படுத்தியது. அனைவரும் வீட்டிலிருந்து வெளியேற முயன்றனர். அப்போது, சுவர் இடிந்து விழுந்ததில் சோமன், ஜோதிக்கு காயம் ஏற்பட்டது.கூடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். சம்பவ இடத்தை வனச்சரகர் ராமகிருஷ்ணன் ஆய்வு செய்து, 'உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X