சேலம்: நிலத் தகராறில், விவசாயியை அடித்துக் கொன்ற, நான்கு பெண்கள் உள்பட, ஏழு பேருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், தலைவாசல், தென்குமரை, மேற்கு கொட்டகையைச் சேர்ந்த விவசாயி வெங்கடாசலம், 55. இவர், தன் சொந்த நிலத்தில், 2015ல், சொட்டுநீர் பாசன உபகரணங்களை பொருத்தியுள்ளார். பக்கத்து நில உரிமையாளர் மல்லிகேஸ்வரி, 54. இவருக்கும், வெங்கடாசலத்துக்கும் இடையே, நிலத்தகராறு இருந்தது. கடந்த 2015, அக்., 29 இரவு, மல்லிகேஸ்வரி, மகன் செந்தில்குமார், 34, மகள் சத்யவாணி, 30, மருமகன் யுவராஜ், 32, உறவினர்கள் மாணிக்கம், 58, தங்கம், 54, கோமதி, 28 ஆகியோர், வெங்கடாசலம் பொருத்தியிருந்த சொட்டுநீர் பாசன கருவிகளை பிடுங்கினர். இதனால், அவர்களிடம் வெங்கடாசலம் வாக்குவாதம் செய்தார். இதில், ஆத்திரமடைந்த, ஏழு பேரும், மண்வெட்டி உள்ளிட்ட கருவிகளால் தாக்கியதில், அவர் உயிரிழந்தார். உடலை, கிணற்றில் வீசிவிட்டனர். தலைவாசல் போலீசார் வழக்குப்பதிந்து, நான்கு பெண்கள் உள்பட, ஏழு பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு, சேலம் மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று, ஏழு பேருக்கு ஆயுள் சிறை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE