சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடையை சூறையாடி தம்பதி, ஏட்டுவை தாக்கிய வி.சி., செயலாளர் கைது

Added : ஜூலை 14, 2018
Share
Advertisement

கெங்கவல்லி: மளிகை கடையை சேதப்படுத்தி, தம்பதியர் மற்றும் ஏட்டுவை தாக்கியதால், வி.சி., ஒன்றிய செயலாளரை, போலீசார் கைது செய்தனர்.
கெங்கவல்லி அருகே, கடம்பூரைச் சேர்ந்தவர் இளங்கோவன், 42; இவரது மனைவி தனலட்சுமி, 38. மளிகை கடை வைத்துள்ளனர். அதே ஊரைச் சேர்ந்த, வி.சி., ஒன்றிய செயலாளர் மனோகரன், 35. நேற்று மாலை, மளிகை கடைக்கு சென்று, பணம் கேட்டுள்ளார். தம்பதியர் மறுத்ததால், கடையை அடித்து நொறுக்கி, அவர்களையும் தாக்கியுள்ளார். தகவலறிந்து, கெங்கவல்லி எஸ்.ஐ., சிவசக்தி, ஏட்டு சந்திரசேகர், அங்கு சென்றனர். அவர்கள், மனோகரனை பிடித்தபோது, சந்திரசேகரை தள்ளிவிட்டு ஓடினார். அதில், ஏட்டுக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது. ஆனால், எஸ்.ஐ., அந்த நபரை விரட்டிப்பிடித்தார். காயமடைந்த தம்பதியர் மற்றும் ஏட்டு, கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின், போலீசார் வழக்குப்பதிந்து, மனோகரனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X