பொது செய்தி

தமிழ்நாடு

பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம்: இன்று நடக்கிறது

Added : ஜூலை 14, 2018
Share
Advertisement

ஈரோடு: பொது வினியோக திட்டத்தின் கீழ், உணவு பொருள் வழங்குவது தொடர்பாக, தாலுகா அளவில், மக்கள் குறைதீர் கூட்டம், இன்று நடக்கிறது. ரேஷன் கடைகளில், பொருட்கள் பெறுவதில் உள்ள குறைபாடு, ரேஷன் கார்டு பெறுதல் குறித்த பிரச்னைகளில் தீர்வு பெறலாம். இதன்படி, ஈரோடு தாலுகா - வில்லரசம்பட்டி அடுத்த ஒண்டிக்காரன்பாளையம் ரேஷன்கடை, பெருந்துறை - முள்ளம்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகம், பவானி - அ.புதுப்பாளையம் பேரூராட்சி அலுவலகம், கோபி - பொலவகாளிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம், சத்தியமங்கலம் - விண்ணப்பள்ளி சமுதாய கூடம், அந்தியூர் - வெள்ளிதிருப்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் முகாம் நடக்க உள்ளது. மொடக்குறிச்சி - நாதகவுண்டன் பாளையம் ரேஷன்கடை, கொடுமுடி - சாணார்பாளையம் சமுதாயகூடம், தாளவாடி - ஒசூர் சமுதாயகூடம், நம்பியூர் - கடத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் முகாம் நடக்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X