ஈரோடு: பிளக்ஸ் பேனர் வைக்கும், விளம்பர நிறுவனங்களுக்கு, மின்வாரிய அதிகாரி, எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு நகரிய மின்வாரிய செயற்பொறியாளர் பழனிவேலு, வெளியிட்டுள்ள அறிக்கை: தென் மேற்கு பருவமழை துவங்கி உள்ளதால், அவ்வப்போது பலத்த காற்று வீசுகிறது. அப்போது மின் கம்பங்கள், மரங்கள், மரக்கிளைகள் முறிந்து விழும். அப்போது, மின் கம்பங்கள், மின் கம்பிகள் சேதமடைந்து, மின்தடை ஏற்படும். சமீப காலமாக, தனியார் நிறுவன பிளக்ஸ் பேனர்கள், பலத்த காற்றால் முறிந்து, மின் கம்பிகள், மின் பாதைகளில் விழுந்து மின் தடை ஏற்படுகிறது. சில நேரம், வாகனம், மக்கள், கால்நடைகளின் உயிர், உடைமைக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. பெரிய அளவில் நிறுவப்படும் பிளக்ஸ் பேனர்கள், விளம்பர தட்டிகள், மின் கம்பங்கள், மின் பாதைகளை பாதிக்கும் வகையில் நிறுவக்கூடாது. இதுபோன்றவற்றால் இழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனமே பொறுப்பாகும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE