சத்தி அரசு கல்லூரியில் 16ல் கவுன்சிலிங் ஆரம்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சத்தி அரசு கல்லூரியில் 16ல் கவுன்சிலிங் ஆரம்பம்

Added : ஜூலை 14, 2018

ஈரோடு: சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நடப்பு கல்வி ஆண்டுக்கான புதிய பாடப்பிரிவுக்கு, வரும், 16ல் கலந்தாய்வு துவங்க உள்ளது. இக்கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கு, இளங்கலை பட்ட வகுப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த, ?ல் துவங்கி சேர்க்கை நடந்தது. நடப்பு கல்வியாண்டில், புதிதாக பி.எஸ்.சி., விஸூவல் கம்யூனிகேசன், பி.சி.ஏ., மற்றும் பி.காம் ஆகிய கூடுதல் பாடப்பிரிவுகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான சேர்க்கை கலந்தாய்வு, வரும், 16ல் துவங்குகிறது. கல்லூரி வளாகத்தில் நடக்கும் கலந்தாய்வில், மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். இதை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X