சத்தியமங்கலம்: நமது நாளிதழ் செய்தி எதிரொலியால், ஆற்றுபால நடைபாதையில், குழி சரிசெய்யப்பட்டது. சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், பவானி ஆற்று பாலம் உள்ளது. இதன் வழியே, நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பாலத்தின் இருபுறமும், மக்கள் நடந்து செல்ல வசதியாக, சிமென்ட் பலகையில் பாதை உள்ளது. இது பல இடங்களில் உடைந்து காணப்பட்டது. இதனால் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வந்தது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சிமென்ட் பலகையை சரி செய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு, மக்கள் நன்றி தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE