பொம்மிடி: பொம்மிடி அருகே, பைக்கில் இருந்து விழுந்த வாலிபர் இறந்தார். தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த மணிபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ், 29. இவர், தொப்பூர் டோல்கேட்டில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, வேலை முடிந்து பஜாஜ் பிளாட்டினா பைக்கில், வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். பொம்மிடி-முத்தம்பட்டி சாலையில், மோலகரடு அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக, நிலை தடுமாறி பைக்கில் இருந்து நாகராஜ் கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த அவர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.