பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி

Added : ஜூலை 14, 2018
Share
Advertisement
பிளாஸ்டிக் குப்பை அகற்றப்படுமா? வேப்பனஹள்ளியில் உள்ள நாமஸ்கிரி தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ளவர்கள் அதிகளவில், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்காக ஏற்றுமதி செய்கின்றனர். இந்த பொட்களில் இருந்து வெளியேற்றப்படும், பிளாஸ்டிக் குப்பை குடியிருப்புகள் முழுவதும் பரவி உள்ளது. இதனால் இப்பகுதி குப்பைக் காடாக காட்சியளிக்கிறது. இவற்றில்

பிளாஸ்டிக் குப்பை அகற்றப்படுமா? வேப்பனஹள்ளியில் உள்ள நாமஸ்கிரி தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ளவர்கள் அதிகளவில், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்காக ஏற்றுமதி செய்கின்றனர். இந்த பொட்களில் இருந்து வெளியேற்றப்படும், பிளாஸ்டிக் குப்பை குடியிருப்புகள் முழுவதும் பரவி உள்ளது. இதனால் இப்பகுதி குப்பைக் காடாக காட்சியளிக்கிறது. இவற்றில் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தியும் பெருகி உள்ளது.
பராமரிப்பில்லாத நிழற்கூடம்: கிருஷ்ணகிரி - வேப்பனஹள்ளி சாலையில், நாரலப்பள்ளி கூட்ரோட்டில் உள்ள பயணியர் நிழற்கூடம் கடந்த நான்கு ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் பாழடைந்துள்ளது. இங்கு மது அருந்தி விட்டு போடப்பட்ட குப்பை தேங்கி, கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. பஸ்சிற்காக வெளியில் கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் வயதானவர்கள் மற்றும் பள்ளி செல்ல காத்திருக்கும் மாணவ, மாணவியர் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X