அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., தான் மதசார்புடைய கட்சி

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (16)
Advertisement
பா.ஜ., புதுச்சேரி நாராயணசாமி, காங்.,நிர்மலா சீதாராமன்

சென்னை : சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பா.ஜ., தான் மதசார்புடைய கட்சி. நிர்மலா சீதாராமனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. காங்., 3வது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது. திமுக கூட்டணியில் காங்., ஒரு அங்கமாக உள்ளது. எனவே 3வது கூட்டணிக்கு இடமில்லை. யூஜிசி.,க்கு மாற்றாக தேசிய உயர்கல்வி ஆணையமாக மாற்றுவது மாநில உரிமைகளை பறிப்பதாகும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Desikan - chennai,இந்தியா
14-ஜூலை-201816:42:56 IST Report Abuse
Srinivasan Desikan இந்தியா​வை ​பொருத்தவ​ரை அ​னைத்து மதங்களும் சமம் மற்றும் அ​தை சார்நத மக்களும் ஒருவருக்​கொருவர் ச​கோதரத்துவத்துடன் வாழ்கிறார்கள். இவர்க​ளை பிரித்தது முதலில் சுதந்திரத்திற்கு முன் பிரிட்டிஷ்காரர்கள் இந்து முஸ்லீம் பிரிவி​னை உருவாக்கிவிட்டுத்தான் சுதந்திரம் அளித்தார் அப்​போதிருந்து இந்த கனல் எரிந்து​கொண்டிருக்கிறது. இ​தை அரசியல்வாதிகள் ​மேலும் மூட்டிவிட்டு குளிர்காய்ந்து​கொண்டிருக்கிறார்கள். என​வே இதற்​கெல்லாம ஒ​​ரே தீர்வு ​தேர்தல் ஆ​ணைத்திடமும் இந்திய ஜனாதிபதியிடம்தான் இருக்கிறது. அதாவது இந்தியாவில் மதம் என்ற ​பெயரால் ,சாதியின் ​பெயரால், செயல்படும் எந்த கட்சிகளாக இருந்தாலும் சரி அ​தை ​தேர்தல் ஆ​ணையம் உடனடியாக அங்கீகாரத்​தை ரத்து ​செய்ய​வேண்டும். ​அ​தே​போல் குறிப்பிட்ட சாதிகள் எந்த பகுதியில் இருக்கிறார்க​ளோ அந்தபகுதியில் அரசியல்கட்சிகள் தனது கட்சியில் இருக்கும் குறிப்பிட்ட சாதி​யை சார்ந்தவ​ரை​யே ​தேர்தலில் நிறுத்துகிறார்கள். இ​தை தடுக்க ஒ​ரேவழி ஒவ்​​வொரு அரசியல்கட்சியின் சின்னத்திற்கு மட்டு​மே வாக்களிக்கும் மு​றையும். ​வாக்குகளின் அடிப்ப​டையில் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்​கை​யை அந்த அந்த கட்சிக்கு ஒதுக்க​வேண்டும். அந்த அந்த கடசி உறுப்பினர்க​ளை நியமனம் ​செய்து​கொள்ளலாம். ஆனால் உறுப்பினர்களின் பதவிகாலம் 2 1 / 2 ஆண்டுகள் மட்டு​மே இருக்க​வேண்டும். அடுத் இரண்ட​ரை ஆண்டிற்க்கு ​வேறு உறுப்பி​ரை கட்சி நியமனம் ​செய்ய​வேண்டும். இது​போன்று பல சீர்திருத்தங்க​ளை ​செய்தால் மட்டு​மே இந்தியா வல்லரசாகும்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
14-ஜூலை-201813:51:00 IST Report Abuse
Pasupathi Subbian இந்தியாவில் இந்துக்கள் என்று கூறினாலே அது மதச்சார்பான வார்த்தை என்று அர்த்தமாகிவிட்டது. தனது கட்சி எம் எல் ஏக்கள் கட்சி மாறினால் , காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு ஆள் அனுப்புவேன் என்று மிரட்டும் ஒரு முன்னாள் முதல்மந்திரி, இந்தியாவை பிரித்து முஸ்லிம்களுக்கு ஒரு தனி நாடு கொடுக்கவேண்டும் என்று கூறும் ஒரு அறிவு ஜீவி, ஹிந்துக்கள் வளர்ந்தால் இந்தியாவுக்கு ஆபத்து என்று கூறும் தலைவர், தங்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால் உடனே அண்டை நாட்டுக்கு புகார் கொடுக்கும் ஒரு அகில இந்திய கட்சி. இவர்களால் இந்தியா கேவலப்பட்டுப்போனதுதான் மிச்சம். ஒழிக்கப்படவேண்டிய , கலையெடுக்கப்படவேண்டிய ஆட்கள் இந்தியாவில் அதிகமாகிவிட்டனர். ராகுலின் கணக்குப்படி அணைத்து முஸ்லிம்களும் தாழ்த்தப்பட்டவர்களாக மாறவேண்டும் என்று ஒரு அறிக்கை . இதை பற்றி sinthikkatheriyatha ஒரு மக்கள் koottam. ஒரு பொய்யை உரக்க கத்தி மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே இருந்தால் அது உண்மை என்று நம்பப்படுகிறது . தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு என்ன கிடைக்கிறதோ அது மட்டுமே திருப்தி என்று நினைக்கும் மக்கள் . இவை மாற மீண்டும் ஒரு அவசரநிலை பிரகடனப்படுத்தினால்தான் உண்டு
Rate this:
Share this comment
Cancel
Gopal Doraiswamy - chennai,இந்தியா
14-ஜூலை-201813:32:12 IST Report Abuse
Gopal Doraiswamy எல்லா மதங்களையும் சமமாக பாவிக்க வேண்டும். அதுவே மத சார்பின்மை. தமிழ்நாட்டில் எந்த கட்சியும் மத சார்பற்ற கட்சி என்று சொல்ல முடியாது. காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிகளும் ஹிந்து மதத்தை இழிவு செய்து மற்ற மதங்களை மதிக்கின்றன. இது மத சார்பின்மை இல்லை. என்னை பொறுத்தவரைக்கும் எல்லா கட்சிகளும் மத வாத கட்சிகள்தான். யாருக்கும் மற்ற கட்சிகளை மத வாத கட்சி என்று சொல்வர்தற்கு அருகதை கிடையாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X