பொது செய்தி

இந்தியா

நிரவ் மோடியால் சிக்கும் 50 தொழிலதிபர்கள்

Updated : ஜூலை 14, 2018 | Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (10)
Advertisement
நிரவ் மோடி, தொழிலதிபர்கள், வருமான வரித்துறை, ஐடி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கடன் வாங்கி மோசடி, வங்கி கடன் மோசடி, Nirvana Modi, Businessmen, Income Taxes, ID, Punjab National Bank, Borrowing Fraud, Bank Debt Fraud,

புதுடில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கி மோசடி செய்து தலைமறைவாகியுள்ள நிரவ் மோடியின் நகைக்கடைகளில் விலை உயர்ந்த நகைகளை வாங்கிய 50 தொழிலதிபர்களிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், நகைகளை வாங்கியவர்களிடம் அதற்கான பணம் எப்படி வந்தது என்பது குறித்து கேள்வி எழுப்பப்படும். நிரவ்மோடி நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், விலை உயர்ந்த வைர நகைளை வாங்கியவர்கள், அதற்கான விலையில், ஒரு பகுதியை கிரடிட்/டெபிட் கார்டு மூலமும், எஞ்சியவற்றை ரொக்கமாகவும் செலுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு பலர் பதிலளித்துள்ளனர். அதில் அவர்கள், ரொக்கமாக பணம் செலுத்தவில்லை எனக்கூறியுள்ளார்கள். ஆனால், வருமான வரித்துறை ஆவணங்களில் அது ஒத்து போகவில்லை. இதனால், 2014 - 15ல் வருமான வரி தாக்கல் செய்த 50க்கும் மேற்பட்டவர்களின் ஆவணங்களை மறு ஆய்வு செய்கிறோம். இதில் தவறு கண்டுபிடிக்கப்பட்டால், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
14-ஜூலை-201817:11:06 IST Report Abuse
புதிய தமிழ்மைந்தன் காங்கிரஸ் மற்றும் ஊழல் அரசியல் தலைவர்களை இப்படியே நெருக்கடி கொடுத்து கொண்டு இருக்கும் மோடி அரசுக்கு நன்றி நன்றி நன்றி
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-ஜூலை-201815:58:33 IST Report Abuse
இந்தியன் kumar முறைகேடான தொழில் அதிபர்கள் எல்லாம் இனி பாஜக மத்தியில் ஆள்வதை விரும்ப மாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
14-ஜூலை-201815:58:32 IST Report Abuse
Kuppuswamykesavan அட, நம்ம நாட்டில் வரி ஏய்ப்பு பண்றதுதான், நிறைய மக்களுக்கு ரொம்ப பிடித்தமான ஓர் விசயமுங்க. வருமான வரித்துறையே உசாராக இருந்து, சரியான வரியை வாங்கினால்தான் உண்டுங்க. இதற்கு சிறந்த உதாரணம், நிலம் வாங்குபவர்கள், விலை குறைத்து, குறைந்த விலைக்கு ஏற்ற பத்திர தாள்களை வாங்குவதுதான் எனலாமுங்க. ஆக, மக்கள் அனைவருமே நேர்மையான முறையில் வாழ்ந்தால்தான்(அரசியல்வாதிகள் வியாபாரிகள் உட்பட), நம் நாடு, நல்ல முறையில் வளர்ச்சி காணுமுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X