வெறித்த பார்வை, துடிதுடிக்கும் மீசை, கோபம் கொப்பளிக்கும் முகம் என சின்னத்திரையில் இருந்து சினிமாவில் சண்டியராக அவதாரம் எடுத்திருக்கிறார் ரமேஷ்.
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்த இவர், எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் 3 ஆண்டுகள் தொடர் முயற்சிக்கு பிறகு விரைவில் வெளியாக இருக்கும் 'ஆணவக்கூட்டம்' படத்தில் வில்லனாக அரிதாரம் பூசியிருக்கிறார்.
''சின்னத்திரையில் சின்ன சின்ன கேரக்டரல நடித்து வந்தேன். பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் என்ன காரணத்தினாலோ சரியாக அமையவில்லை. ஒருவழியாக ஆணவக்கூட்டம் படத்தில் மெயின் வில்லன் கேரக்டர் கிடைத்தது. மிரட்டியிருக்கிறேன். குடும்பத்தினரும், மனைவியும் என் ஆசையை புரிந்துக்கொண்டு 'சப்போர்ட்' பண்ணினாங்க. ஊரில் என்னை நண்பர்கள் கிண்டலாக 'சண்டியர்' என்பார்கள். சினிமாவில் ரமேஷ் என்ற பெயரில் ஏற்கனவே நடிகர்கள் இருப்பதால், என் பெயருக்கு முன்னால் 'சண்டியரை' சேர்த்துக் கொண்டேன். அதுவே எனது அடையாளமாகி விட்டது.
இந்த 3 ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், கடுமையாக உழைக்கணும். ஒரு கேரக்டர் கொடுத்தால் அதுவாகவே மாறணும். இதை 'பாலோ' பண்ணினாலே வெற்றி பெற முடியும். எனது நடிப்பை பார்த்து பிரபலங்கள் பலர் நேரில் 'உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு' என பாராட்டி இருக்கிறார்கள். அதற்கான நுழைவுவாசல்தான் ஆணவக்கூட்டம் படம் என கருதுகிறேன். அதற்கடுத்து பேய் படம் ஒன்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது,'' என்கிறார் சண்டியர் ரமேஷ்.
இவரை வாழ்த்த 97919 73308
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE