அரசியல் செய்தி

தமிழ்நாடு

எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி

Updated : ஜூலை 15, 2018 | Added : ஜூலை 15, 2018 | கருத்துகள் (127)
Advertisement
Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த், எட்டு வழிச்சாலை, காமராஜர்,  கல்வித்துறை, விவசாயிகள், தேர்தல், லோக் ஆயுக்தா

சென்னை: எட்டு வழிசாலை போன்ற பெரிய திட்டங்கள் தமிழகத்திற்கு வர வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


8 வழி சாலைக்கு ரஜினி ஆதரவு

மகிழ்ச்சி

சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: 'சூப்பர் ஸ்டார்' என்றால் எனது பெயரை குழந்தைகள் சொல்வது கடவுள் அருள். காமராஜர் மாதிரி அரசியல்வாதிகள் மீண்டும் தோன்ற வேண்டும் என்பது அனைவரின் ஆசை; எனது ஆசையும் கூட. தமிழருவி மணியன், அரசியலில் என்னோடு இணைந்து செயல்பட நினைப்பது மகிழ்ச்சியே.


தேர்தலில் போட்டி

லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்கு இன்னும் நேரம் உள்ளது. அப்போது முடிவு செய்யப்படும். கட்சி துவக்குவதற்கும் நேரம் உள்ளது.


கல்வித்துறையில்

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகம் சிறந்து விளங்குகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாக செயல்படுகிறார்.


வரவேற்பு

சாத்தியம் இல்லை என்பது எதுவும் கிடையாது. நல்ல எண்ணம் தான் வேண்டும்.ஒரே நேரத்தில் சட்டசபைகளுக்கும், லோக்சபாவுக்கும் தேர்தல் நடத்துவது நல்லது. அவ்வாறு தேர்தல் நடத்துமாறு செய்ய வேண்டும். ஊழல் குறித்து அமித்ஷா சொன்னது அவரது கருத்து. அவருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் சொல்லியுள்ளார்.


விமர்சனம்

லோக் ஆயுக்தா அமைத்ததை வரவேற்கிறேன். சக்தி வாய்ந்த லோக் ஆயுக்தா இயங்கினால் சிறப்பாக இருக்கும். தமிழக அரசை அனைவரும் விமர்சனம் செய்கின்றனர். விமர்சனம் செய்வது எளிது. தமிழக அரசு இன்னும் சிறப்பாக செயல்படலாம். பெரிய திட்டங்களை கொண்டு வரலாம்.


வேலைவாய்ப்புகள் பெருகும்

எட்டு வழி பசுமை வழிச்சாலை போன்ற திட்டங்கள் வர வேண்டும். இதனால், நாடு வளர்ச்சி பெறும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். பெரிய திட்டங்கள் வரும் போது இழப்பு வர தான் செய்யும். அவர்கள் மகிழ்ச்சியடையும் வகையில், பணம், நிலம் கொடுக்க வேண்டும். முடிந்தவரை விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் திட்டங்களை செயல்படுத்தினால், இன்னும் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (127)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Roopa Malikasd - Trichy,இந்தியா
20-ஜூலை-201814:18:58 IST Report Abuse
Roopa Malikasd அதுக்குதான் ரஜினிகாந்த் கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்டேன்.நான் அந்த திட்டத்தால் நிலத்தை இழக்க உள்ளவன்... திரு ரஜினிகாந்த் ஐயா பேசாமல் நாம் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளலாமா ...நான் என்னுடைய பாதிப்புக்கு உள்ளாகும் நிலம் மற்றும் வீடை உங்களுக்கு எழுதி கொடுத்துவிடுகிறேன்..அதற்க்கு மாற்றாக தாங்கள் உங்களுடைய போயஸ் தோட்ட வீடை எனக்கு கொடுத்துவிடுங்களேன்
Rate this:
Share this comment
Cancel
Jo Rajabathar - chennai,இந்தியா
19-ஜூலை-201811:54:53 IST Report Abuse
Jo Rajabathar He himself proved that he dontknow anything about development , In T nagar madley bridge road is very bad for past one year... Rajin should watch that, people will dont trust him anymore.... Rajini is total waste... Prof. Dr. Jothi from Saudi arabia
Rate this:
Share this comment
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
18-ஜூலை-201818:46:54 IST Report Abuse
Palanisamy T தமிழர்களின் உயிரினும் மேலான காவேரி நீருக்காக அப்போது குரலை உயர்த்தாதவர் இப்போது எட்டு வழிச் சாலைச் திட்டத்திற்கு மட்டும் குரலை உயர்த்துவது ஏன்? - யாரும் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை எதிர்க்க வில்லை - வளர்ச்சி, மேம்பாட்டுத் திட்டத்தையும் எதிர்க்கவில்லை - இது வளர்ச்சி, மேம்பாட்டுத் திட்டமாகத் தெரியவில்லை. அந்தத் திட்டம் போகின்றப் பாதையும் சரியில்லை - இயற்கையை நேசிக்கும் எந்தத் திட்டமும் நல்லத் திட்டம்தான் - பல்லாயிரம் கோடிகளை விழுங்கும் இந்தத் திட்டத்தால் இயற்கைக்கும் பாதுகாப்பில்லை - மக்களுக்கும் குறிப்பாக விவசாயிகளுக்கும் பாதுகாப்பில்லை இந்தத் திட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்படப் போவது பல ஆயிரமாயிரம் குடும்பங்கள் - நல்லப் பலன்களை அறுவடைச் செய்யப் போவது சிலரே - அவர்களுக்காகத்தான் இந்தத் திட்டம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X