உலக கோப்பை கால்பந்து: பிரான்ஸ் சாம்பியன்

Updated : ஜூலை 16, 2018 | Added : ஜூலை 15, 2018 | கருத்துகள் (5)
Advertisement
france,croatia,final,FIFA,football

மாஸ்கோ: உலக கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி பட்டத்தை தட்டிச்சென்றது. பைனலில் குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

ரஷ்யாவில், 21வது 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. நேற்று, மாஸ்கோ நகரில் நடந்த பைனலில் உலகின் 'நம்பர்-7' பிரான்ஸ் அணி, 20வது இடத்தில் உள்ள குரோஷியாவை எதிர்கொண்டது.


குரோஷியா அதிர்ச்சி:


போட்டியின் 18வது நிமிடத்தில் 'பிரீ கிக்' வாய்ப்பில், பிரான்சின் கிரீஸ்மேன் துாக்கி அடித்த பந்து குரோஷியாவின் மரியோ மாண்ட்ஜூகிச் தலையில் பட்டு 'சேம்சைடு' கோலானது. 28வது நிமிடத்தில் குரோஷியாவின் பெரிசிச் பந்தை கோலாக மாற்றி, 1-1 என சமநிலை பெறச் செய்தார். இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நிலைக்கவில்லை.

ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில், கிரீஸ்மேன் (38வது நிமிடம்) கோலடித்து, முன்னிலை பெற்றுத்தந்தார். முதல் பாதி முடிவில் பிரான்ஸ் அணி 2-1 என முன்னிலை வகித்திருந்தது.


போக்பா அசத்தல்:


தொடர்ந்து பிரான்ஸ் அணியினர் அலை அலையாக தாக்குதல் தொடுத்தனர். போக்பா (59வது நிமிடம்), எம்பாப்பே (65வது நிமிடம்) தன் பங்கிற்கு தலா ஒரு கோல் அடித்தனர். இந்நிலையில் 69வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல்கீப்பர் ஹியுகோ லோரிஸ் பந்தை உம்டிடியிடம் 'பாஸ்' செய்ய முயற்சித்தார். அப்போது அருகில் இருந்த குரோஷியாவின் மாண்ட்ஜூகிச் பந்தை தடுத்து கோலாக்கினார். முடிவில், பிரான்ஸ் அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

* இதன் மூலம், பிரான்ஸ் அணி உலக கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக (1998, 2018) கோப்பை வென்றது.



* சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடி பரிசு தொகையும், 2ம் இடம் பிடித்த குரோஷியா அணிக்கு ரூ.188 கோடி பரிசு தொகையும் வழங்கப்படுகிறது.


விருதுகள்:

தங்க காலணி விருது : இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன்
தங்க பந்து விருது : குரோஷியா கேப்டன் லூகா மோட்ரிச்
தங்க கையுறை விருது : பெல்ஜியத்தின் தியாபட் கோர்டாய்




மோடி, டிரம்ப் வாழ்த்து:

சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூலை-201808:54:11 IST Report Abuse
வை. நாராயணன். தமிழர் மெக்சிகோ... ஏதோ கமெண்ட் போடவேண்டும் என்பதற்காக போட்டு விட்டார். பாவம் விடுங்கப்பா. சிறப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்ற ப்ஃரான்ஸை பாராட்டுவோம். சிறிய நாடான குரேஷிய விடா முயற்சியுடன் இறுதிப் போட்டி வரை வந்ததற்கும், அடுத்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் எனவும் வாழ்த்துவோம்.
Rate this:
Share this comment
Cancel
balaji -  ( Posted via: Dinamalar Android App )
16-ஜூலை-201807:05:04 IST Report Abuse
balaji iduku digital India Ku ena pa samandam aiyoo ena pa unga arivu
Rate this:
Share this comment
Cancel
16-ஜூலை-201806:44:59 IST Report Abuse
ஸாயிப்ரியா வெற்றிக்கனி பறித்த விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X