வேகம்! டிச., 31க்குள் பல திட்டங்களை துவக்க மோடி முடிவு; விரிவான பட்டியல் தயாரிக்கிறது பிரதமர் அலுவலகம் Dinamalar
பதிவு செய்த நாள் :
வேகம்!
டிச., 31க்குள் பல திட்டங்களை துவக்க மோடி முடிவு
விரிவான பட்டியல் தயாரிக்கிறது பிரதமர் அலுவலகம்

புதுடில்லி : அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலை சந்திக்க, மத்திய அரசு தயாராகி வருகிறது. டிசம்பர், 31க்குள், முடிந்தவரை, அதிகபட்ச திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கவும், அடிக்கல் நாட்டு விழாவில் அவரை பங்கேற்க செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, மத்திய அரசால் நிறைவேற்றப்படும் அனைத்து திட்டங்கள் குறித்த பட்டியலை, பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது.

Modi,Narendra modi,நரேந்திர மோடி,மோடி,டிச. 31,பல திட்டங்கள்


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, 2014ல் பதவி ஏற்றது. இந்த அரசின் பதவிக் காலம் அடுத்தாண்டு முடிவடைய உள்ளதை அடுத்து, அடுத்தாண்டு மத்தியில், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது.

ஜி.எஸ்.டி., அமல் :


கடந்த நான்கு ஆண்டுகளாக, 'டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி, துாய்மை இந்தியா' உள்ளிட்ட, பல புதிய திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தையும், பிரதமர் மோடி அறிமுகம் செயல்படுத்தினார். நாடு முழுவதும், ஒரே மாதிரியான வரி விதிப்பை உறுதி செய்யும் நோக்கில், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்தாண்டில் அமல்படுத்தப்பட்டது.

மத்திய அரசின் சுறுசுறுப்பான திட்டங்கள், நாடு முழுவதும் மக்களை கவர்ந்ததால், பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., வெற்றிக் கனிகளை பறித்தது. ஒரு சில மாநிலங்களில் சிறிய வித்தியாசத்தில் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது.

அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில், மீண்டும் பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் நோக்கில், பிரதமர் மோடியும், பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவும் அதிரடி வியூகங்கள் வகுத்து, அவற்றை நிறைவேற்ற துவங்கி உள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசில் இடம்பெற்றுள்ள அனைத்து துறைகளுக்கும், பிரதமர் அலுவலகம், சமீபத்தில் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், அனைத்து மாநிலங்களிலும், மத்திய அமைச்சகங்கள் நிறைவேற்றி வரும் திட்டங்கள், துவக்கவுள்ள திட்டங்கள் குறித்த பட்டியல்களை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அமைச்சகமும், மாநிலங்களில் நிறைவேற்றும் திட்டங்கள், அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி விபரம், மத்திய, மாநில அரசுகளின் பங்கு, திட்டங்களுக்கு தேவையான ஒப்புதல்கள் பெறப்பட்ட விபரம் போன்றவை, அந்த கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளன.

முக்கியத்துவம் :


உள் கட்டமைப்பு தொடர்பான திட்டங்களுக்கு, பிரதமர் அலுவலகம் முக்கியத்துவம் அளித்துள்ளது. வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, ரயில்வே, சிவில் விமான போக்குவரத்து போன்ற துறைகளின் திட்டங்களை விரைவில் நிறைவேற்றும்படி அழுத்தம் தரப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த திட்டங்களை, டிச., 31க்குள், பிரதமர் மோடி துவக்கி வைப்பதற்கான வாய்ப்புகள், அடிக்கல் நாட்ட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்த கேள்வியை, மத்திய அமைச்சர்களிடம், பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது.

சுற்றுச்சூழல் ஒப்புதல்கள் பெறப்படவில்லை எனில், அவற்றை பெறுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்படி, பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதில் கிடைக்கும் பதில் அடிப்படையில், திட்டங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவற்றை துவக்கி வைக்க, பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

உ.பி., மாநிலத்துக்கு குறி :

உ.பி.,யில், மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் விரைவில் முடிக்கப்படவில்லை என்ற எண்ணம், அம்மாநில மக்களிடம் ஏற்பட்டுள்ளதாக, பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த எண்ணத்தை மாற்றும் வகையில், உ.பி.,யில் திட்டங்களை துரிதமாக நிறைவேற்றும்படி, உ.பி., அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை கருத்தில் வைத்து, உ.பி.,யில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாக்களில், 20 நாட்களாக, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று வருகிறார். இதில் ஒன்றாக, 9ம் தேதி, உலகின் மிகப்பெரும் மொபைல் போன் தொழிற்சாலை, உ.பி.,யில் துவக்கி வைக்கப்பட்டது.


Advertisement

வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
16-ஜூலை-201820:33:44 IST Report Abuse

Sandruஇந்தியாவில் ஒரு மோடி, அவர் நான்காண்டு காலமாய் மக்களை அண்டி , கொண்டு வந்தாரடி ஒரு ஆட்சி, அதை கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தாரே.

Rate this:
SIVARAM - Kochi,இந்தியா
16-ஜூலை-201819:12:23 IST Report Abuse

SIVARAMModi's development is only on paper.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-ஜூலை-201818:23:11 IST Report Abuse

Nallavan Nallavanஇன்னும் ஒரு வருசத்துக்கு வெளிநாட்டு ட்ரிப்பு இருக்காது ....

Rate this:
மேலும் 68 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X