பதிவு செய்த நாள் :
காவிரி - கோதாவரி இணைக்க
ஆந்திரா ஒப்புதல்

காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்திற்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒப்புதல் அளித்துள்ளதால், மத்திய அரசு பணிகளை விரைவுபடுத்த உள்ளது.

காவிரி,கோதாவரி,இணைக்க,ஆந்திரா,ஒப்புதல்


தென் மாநிலங்களில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நதிகள் இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, காவிரி - கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பாயும் கோதாவரி ஆற்றின் நீரை, தமிழகத்திற்கு கொண்டு வருவது, இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். திட்டம் நிறைவேறினால்,

தமிழகத்துக்கு, 125 டி.எம்.சி., நீர் கிடைக்கும். லோக்சபா தேர்தலுக்கு முன் இந்த திட்டத்தை துவக்க, மத்திய அரசு விரும்புகிறது. தெலுங்கானா, ஆந்திர மாநிலங்கள் ஒப்புதல் வழங்க காலம் தாழ்த்தியதால், திட்டம் செயல்பாட்டிற்கு வருமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் இத்திட்டத்திற்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒப்புதல் வழங்கியுள்ளார். சமீபத்தில், மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, நிதின் கட்கரியிடம், தன் முடிவை நாயுடு தெரிவித்துள்ளார். இதனால், காவிரி - கோதாவரி இணைப்பு பணிகளை, மத்திய அரசு விரைவுபடுத்த உள்ளது.

இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்திற்கு, மத்திய அரசு, 90 சதவீத நிதி வழங்கும். மீதமுள்ள, 10 சதவீத நிதியை, மாநிலங்கள் ஒதுக்க வேண்டும். இத்திட்டத்திற்காக, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில், இந்திராவதி - கோதாவரி, நாகர்ஜுனா - சோமசீலா,

Advertisement

பெண்ணையாறு - காவிரி ஆகிய இணைப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

ஏற்கனவே, கோதாவரி - கிருஷ்ணா இணைப்பு திட்டத்தை, ஆந்திர அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது. காவிரி - கோதாவரி திட்ட தொழில்நுட்பங்களை ஆய்வு செய்து தான், அனுமதி வழங்க முடியும் என, ஆந்திர அரசு கூறி வந்தது. தற்போது, திட்டத்திற்கு ஆந்திரா ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதே நேரம், திட்டத்தை விரைவில் துவக்கும்படி, மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா
21-ஆக-201815:59:11 IST Report Abuse

ஆ.தவமணி,   இதெல்லாம் சரி.. ஆனால்.... " ஏற்கனவே, கோதாவரி - கிருஷ்ணா இணைப்பு திட்டத்தை, ஆந்திர அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளதற்கு காரணமான ஒப்பந்ததாரர் அல்லது பொறியாளர்கள் குழுமம் இவர்களிடம்தான் இந்த காவிரி - கோதாவரி இணைப்பு திட்ட கான்டராக்ட்டை ஒப்படைக்க வேண்டும்... நம் மாநில அமைச்சர்களின் சம்மந்திகள், பினாமிகள் இவர்களிடம் ஒப்படைக்க கூடாது ".. என்பதை முக்கிய நிபந்தனையாக மத்திய அரசும், ஆந்திர அரசும் விதிக்க வேண்டும்..

Rate this:
nagendirank - Letlhakane,போஸ்ட்வானா
19-ஆக-201801:38:22 IST Report Abuse

nagendirankநல்ல முயற்சி. வெறும் பேச்சளவில் நிற்காமல் செயல் படுத்தினால் நல்லது. சந்திரபாபு நாயுடுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி. ஆனால் தமிழ்நாட்டு அரசு இதற்க்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே? மணல் வியாபாரம் பாதிக்க படுமே? காவேரி அரசியல் பண்ண முடியாதே.

Rate this:
yila - Nellai,இந்தியா
17-ஜூலை-201815:42:25 IST Report Abuse

yilaநான்கு ஆண்டுகள் கழித்தும் துவங்கவே விரும்புகிறது. தேர்தல் வருகிறது அல்லவா?

Rate this:
மேலும் 59 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X