பொது செய்தி

இந்தியா

'கரீப் ரத்' எக்ஸ்பிரஸ் கட்டணம் உயரும்?

Added : ஜூலை 16, 2018 | கருத்துகள் (10)
Share
Advertisement
கரீப் ரத், எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம் ,ரயில்வே, கரீப் ரத் எக்ஸ்பிரஸ் ரயில், பெட் - ரோல், சிஏஜி,  பெட்ஷீட்டுகள் , ரயில் பயணம், ரயில் கட்டணம் உயர்வு , 
Railways, Garib Rath Express Train, bet roll, CAG, Bed Sheets, Train Trip, Rail fares,Garib Rath, express train fee,

புதுடில்லி:ஏழைகளுக்கான, 'கரீப் ரத் எக்ஸ்பிரஸ்' ரயில் பயணக் கட்டணத்தில், படுக்கைகளுக்கான புதிய வாடகை சேர்க்கப்பட உள்ளதால், கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரயில்வே மூத்த அதிகாரிகள் கூறியதாவது:கரீப் ரத் எக்ஸ்பிரஸ் ரயிலில், 'பெட் - ரோல்' எனப்படும், சுருட்டக்கூடிய படுக்கைகளுக்கான கட்டணம், 12 ஆண்டுகளுக்கு முன், 25 ரூபாயாக
நிர்ணயிக்கப்பட்டது. பிற ரயில்களிலும், இதற்கு, பழைய கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

பெட் - ரோல்கள் மற்றும் பெட்ஷீட்டுகளின் விலை, அவற்றை சுத்தம் செய்து பராமரிப்பதற்கான செலவு உயர்ந்துள்ளது.இது தொடர்பாக ஆய்வு செய்த, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய தணிக்கை அதிகாரி, 'பல ஆண்டுகளாக, கரீப் ரத் எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம் உயர்த்தப்படாதது ஏன்' என, கேள்வி எழுப்பினார்.

மேலும், பெட் - ரோல் மற்றும் பெட்ஷீட்டுகளுக்கான செலவினங்களையும், ரயில் பயண
கட்டணத்தில் சேர்க்கும்படி பரிந்துரைத்துள்ளார்.இதை கருத்தில் வைத்து, கரீப் ரத் எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. புதிய கட்டணத்தில், பெட்- ரோல், பெட்ஷீட்டுகள் போன்றவற்றுக்கான செலவினங்களும் சேர்க்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரயில்களில், 'ஏசி' பெட்டிகளில், பெட் - ரோல் மற்றும் பெட்ஷீட்டுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.கரீப் ரத் எக்ஸ்பிரஸ் மற்றும் துரந்தோ ரயில்களில், ரயில் பயண டிக்கெட்டுடன், பெட் - ரோலுக்கான கட்டணத்தையும் செலுத்தி, அவற்றை பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஜூலை-201810:35:51 IST Report Abuse
Srinivasan Kannaiya கரிப் ரத் மாலிக் ரத் ஆகிவிட்டதோ...
Rate this:
Cancel
INDIAN - chennai,இந்தியா
16-ஜூலை-201809:33:44 IST Report Abuse
INDIAN ஏழைகளின் வூர்தி ஆனால் விபரம் தெரிந்த மற்றும் வசதியானவர்தான் பயணிக்கின்றர்
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
16-ஜூலை-201809:24:06 IST Report Abuse
பாமரன் சொல்லலை .... எங்க ரயில்வே அமிச்சரு ரொம்ப தெறமையானவர்ன்னு..... இன்னொரு தபா நிரூபிக்கிறார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X