சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 கட்டுமான நிறுவனம், ரெய்டு, ரூ.120 கோடி

சென்னை,: நெடுஞ்சாலை துறை பணிகளை மேற்கொண்டு வரும், பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் நடந்த, திடீர் சோதனையில், 120 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், 100 கிலோ தங்கமும் சிக்கியதாக, வருமான வரி அதிகாரிகள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.
சென்னை உட்பட, 50 இடங்களில், ஒரே நேரத்தில் நடந்த வருமான வரி சோதனையாலும், அடுத்தடுத்து தொடரும் அதிரடியாலும், ஆளும் கட்சி வட்டாரம் பீதியில் உள்ளது.

ரூ. 680 கோடி மதிப்பில்


தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிகளை, எஸ்.பி.கே., என்ற, கட்டுமான நிறுவனம் செய்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு தொடர்புடைய, 50க்கும் மேற்பட்ட இடங்களில், நேற்று வருமான வரி துறையினர் அதிரடி சோதனையில் இறங்கினர்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு, எஸ்.பி.கே., கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவில் உள்ள கீழமுடி மன்னார் கோட்டையைச் சேர்ந்தவர், செய்யாதுரை; எஸ்.பி.கே., நிறுவனத்தின் உரிமையாளர். இவருக்கு, ஈஸ்வரன், நாகராஜன், பாலு, கருப்பசாமி என, நான்கு மகன்கள் உள்ளனர்.இவர்கள் நான்கு பேரும், இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் என, கூறப்படுகிறது. நெடுஞ்சாலை துறையின் கீழ், சாலைகள் அமைத்தல், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் என, அனைத்து ஒப்பந்தப் பணிகளையும், இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தத்தை, 2013ல், நெடுஞ்சாலை

துறை அறிமுகம் செய்தது. அதில்,முதலில் சிறிய ஒப்பந்தப் பணியை துவங்கிய இந்நிறுவனம், தற்போது, திருவள்ளூர், பொள்ளாச்சி, ராமநாதபுரம் மற்றும் தென் மாவட்ட நெடுஞ்சாலை கோட்டங்கள் அனைத்தையும், தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.திருவள்ளூர் கோட் டத்தில், 680 கோடி ரூபாய் மதிப்பில், சாலை பராமரிப்பு பணிக்கான ஒப்பந்தத்தை, இந்நிறுவனம் எடுத்துள்ளது.

'ரெய்டு' நடவடிக்கை


இதுபோன்று, 2,500 கோடி ரூபாய்க்கு மேலான ஒப்பந்தப் பணிகள், இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.இது தவிர, ராஜபாளையம் - திருநெல்வேலி, திருமங்கலம் - செங்கோட்டை இடையேயான சாலைகளின் விரிவாக்கப் பணிகளையும், இந்நிறுவனம் எடுத்துள்ளது. மேலும், விருதுநகர் கோட்டத்தில், ஐந்தாண்டுகளுக்கு சாலை பராமரிப்பு பணி மேற்கொள்ளும் ஒப்பந்தமும், இந்நிறுவனத்திற்கே கிடைத்துள்ளது. இதற்கான பூமி பூஜை, நேற்று நடைபெற இருந்த நிலையில், இந்நிறுவனத்தின் மீது, 'ரெய்டு' நடவடிக்கை பாய்ந்துள்ளது.இதையடுத்து, அருப்புக்கோட்டையில் உள்ள தலைமை

அலுவலகம்,உரிமையாளர் வீடு, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்கள் ஆகியவற்றில், வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.சென்னை, மேத்தா நகரில் உள்ள நாகராஜன் வீடு, போயஸ் கார்டனில் உள்ள உறவினர் தீபக் வீடு, பெசன்ட் நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் வீடு, அண்ணா நகர், அபிராமபுரம், தாம்பரம், சேத்துப்பட்டு உள்பட, 50க்கும் மேற்பட்ட இடங்களில், 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள், நேற்று காலை முதல் இரவு வரை, சோதனையில் ஈடுபட்டனர்.

பணம் பதுக்கல்


இந்த சோதனையில், இதுவரை, 120 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக, வருமான வரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சிக்கிய பணத்தை எண்ணும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். சென்னை, சேத்துப்பட்டில் உள்ள, எஸ்.பி.கே., நிறுவனத்துக்கு தொடர்புடைய, ஜோன்ஸ் என்பவர் வீட்டில், 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.தீபக் என்பவரின் காரில், 28 கோடி ரூபாயும், ஜோன்ஸ்என்பவரின் காரில், 25 கோடி ரூபாயும், ரவிச்சந்திரன் காரிலிருந்து, 24 கோடி ரூபாயும்

கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.சோதனை நடந்த இடங்களில், ரகசிய பண பரிமாற்ற ஆவணங்கள் சிக்கியதாகவும், அதன் அடிப்படையில், அடுத்தடுத்த இடங்களில், சோதனை தொடரவிருப்பதாகவும், வருமான வரி வட்டாரங்கள் கூறுகின்றன. சோதனையில் சிக்காமல் மறைப்பதற்காக, கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை, சில கார்களில் பதுக்கி இருப்பதாகவும், அந்த கார்கள், எந்த இடத்திலும் நிற்காமல், ஒவ்வொரு இடமாக சென்று கொண்டிருப்பதாகவும், அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.அதேபோல், சென்னை நகரில் உள்ள முக்கியமான ஓட்டல்கள், 'ஷாப்பிங் மால்'களில் உள்ள, 'பார்க்கிங்' பகுதிகளில், இதுபோன்ற பணம் பதுக்கப்பட்ட கார்கள், பொது மக்களின் கார்களுடன் சேர்த்து நிறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, அந்த கார்கள் பிடிபடும்போது, சிக்கும் பணத்தின் மதிப்பு, சில நுாறு கோடிகளை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.எஸ்.பி.கே., நிறுவனத்துக்கும், மாநில அரசின் அதிகார மையத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், இந்த சோதனை மேலும் தீவிரமடையும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், ஆளும் கட்சி வட்டாரம், கடும் பீதியில் உள்ளது.அரசுக்கு பருப்பு, முட்டை, சத்துமாவு சப்ளை செய்யும், 'கிறிஸ்டி' நிறுவனத்தில், 5ம் தேதி முதல், தொடர்ந்து ஐந்து நாட்கள், வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், 17 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும், 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை முடிந்த ஒரு வாரத்தில், அடுத்த அதிரடியில், வருமான வரித்துறை இறங்கியுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஜூலை-201816:27:48 IST Report Abuse

Endrum Indianதமிழகம் முழுவதும் 50 இடங்களில் 200 வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, நேற்று காலை 6 மணி முதல் சோதனையை மேற்கொண்டு உள்ளனர். சென்னையில் எஸ்.பி.கே. நிறுவனத்துடன் தொடர்புடைய, பெசன்ட் நகரில் உள்ள டி.வி.எச் என்ற நிறுவனத்திலும் சோதனை நடந்தது. இதன் உரிமையாளர் கே.என். ரவிச்சந்திரன், திருச்சியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். இவருடைய வீட்டிலும் சோதனை நடந்தது. ரவிச்சந்திரன் வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த விலை உயர்ந்த கார் எஸ்.பி.கே. நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது. இதே போன்று, சென்னை, ஆழ்வார்பேட்டை, கஸ்தூரிரெங்கன் சாலை, பார்த்த சாரதி கார்டன் தெருவில் உள்ள செய்யாத்துறையின் உறவினர் தீபக் என்பவருடைய வீடு மற்றும் கோவிலம்பாக்கத்தில் உள்ள அவருக்கு சொந்தமான 'எவால்வு குளோத்திங் கம்பெனி'யிலும் சோதனை நடந்தது. தீபக் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் மூட்டையாக கட்டி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். சேத்துப்பட்டில் உள்ள ஜோன்ஸ் என்பவருடைய வீடு மற்றும் மேத்தா நகரில் உள்ள கூட்டு நிறுவனத்தின் நிர்வாகி வீடு மற்றும் செய்யாத்துரையின் மகன் நாகராஜின் வீடு உள்பட எஸ்.பி.கே. நிறுவனத்தின் தொடர்புடைய நிறுவன அலுவலகங்கள் மற்றும் அதனுடைய நிர்வாகிகளின் வீடுகள் உள்ள அண்ணாநகர், அபிராமபுரம், பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள், கட்டுமானம் நடந்து வரும் பணிகளுக்கான ஒப்பந்த கோப்புகள், வங்கி ஆவணங்கள் உள்பட பல்வேறு ஆவணங்களை விசாரணைக்காக வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர். வீடுகளில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது அங்கு நிறுத்திவைக்கப்பட்டு இருந்த கார்களை சோதனை செய்தனர். அந்த கார்களில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கிவைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடிக்கப்பட்டது. எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் அந்த நிறுவனங்களின் நிர்வாகிகளின் வீடுகளில் இருந்து மூட்டை, மூட்டையாக பறி முதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மதிப்பிடப்பட்டு வருகிறது. சேத்துப்பட்டைச் சேர்ந்த ஜோன்ஸ் என்பவருடைய காரில் இருந்து ரூ.25 கோடி, தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் காரில் இருந்து ரூ.24 கோடி மற்றும் தீபக் வீட்டில் இருந்து ரூ.28 கோடியும் பறி முதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 100 கிலோ தங்கம் மதிப்பீடு செய்யும் பணியும் நடந்து வருகிறது. எஸ்.பி.கே. நிறுவனம் மற்றும் அந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய கூட்டு நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் தொழில் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும் பல முக்கிய ஆவணங்கள் கிடைக்க வேண்டியிருப்பதால் தொடர்ந்து வருமான வரி சோதனையை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டு உள்ளோம்.இந்த நிலையில், நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாத்துரைக்கு சொந்தமான 20 -க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.160 கோடி பணம், 100 கிலோ தங்கம் சிக்கியது, முக்கிய ஆவணங்கள் சிக்கின. 2-வது நாளாக அங்கு சோதனை நடைபெற்று வருகிறது.???? என்னய்யா நடக்குது நாட்டிலே. அவனவன் சம்பாதிச்சு ஒரு கோடி ஆறதுக்குள்ளே மூச்சு ஒருத்தி போவுது. இவனுங்க அசால்ட்டா ரூ.28 கோடியை காரில் எடுத்துக்கொண்டு ஊர்வலம் போவார்களாம்????

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-ஜூலை-201816:06:18 IST Report Abuse

இந்தியன் kumarஊழல் கட்சிகள் திமுக ஆதிமுகவோடு பாஜக கூட்டு சேர கூடாது மோடிஜியின் சாதனைகளை சொல்லி களம் இறங்க வேண்டும் , ஒரு போதும் தமிழகத்தின் ஊழல் ராஜாக்களோடு அணி சேர கூடாது.

Rate this:
Selvam Pillai - Dammam,சவுதி அரேபியா
17-ஜூலை-201815:08:01 IST Report Abuse

Selvam Pillaiதமிழ் நாட்டில் லஞ்ச ஒழிப்பு துறை என்று ஒன்று தெண்ட ஊதியம் வாங்கி கொண்டு ஆளும் கட்சிக்கு புழுக்கை வேலை செய்கிறது. ஒரு லஞ்ச ஊழலை இதுவரை ஒழுங்காக பிடித்துள்ளார்களா. மற்றொன்று சி பி சி ஐ டி இது அதைவிட மோசம். இதுவும் ஆளும் கட்சிக்கு விசுவாசமாக இருந்து கொண்டு எந்த ஒரு கேஸையும் டீல் செய்ததாக சரித்திரம் உண்டா. இந்த இரண்டையும் அடியோடு எடுத்து எரிய வேண்டும். வீண் செலவு அரசுக்கு . இவர்களுக்கே அவமானமாக இல்லையா. எதற்கு எடுத்தாலும் சி பி ஐ என்று கூறும் பொது. இவர்கள் எதற்காக.

Rate this:
மேலும் 50 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X