அக்ரிமென்ட் போட்டு கை மாறுது சொத்து... ஆட்சி மாறுனா காத்திருக்குது ஆபத்து!| Dinamalar

'அக்ரிமென்ட்' போட்டு கை மாறுது சொத்து... ஆட்சி மாறுனா காத்திருக்குது ஆபத்து!

Updated : ஜூலை 17, 2018 | Added : ஜூலை 17, 2018
Share
குடியிருப்புப் பகுதியில், தன்னால் நடப்பட்ட மரக்கன்றுகள் எந்த நிலையில் இருக்கின்றன என்று பார்க்க, குடையுடன் கிளம்பினாள் மித்ரா; அங்கே சித்ராவும் வந்து சேர, இருவரும் இணைந்து புறப்பட்டனர். ஆங்காங்கே காலி மனையிடங்களில், குப்பையுடன் வெள்ளம் சூழ்ந்திருந்தது.''மித்து...நிறைய 'சைட்' காலியா கிடக்குதே...இன்னும் விக்கலையா...இல்லேன்னா வாங்குனவுங்க, வீடு கட்டலையா?'' என்று
சித்ரா, மித்ரா

குடியிருப்புப் பகுதியில், தன்னால் நடப்பட்ட மரக்கன்றுகள் எந்த நிலையில் இருக்கின்றன என்று பார்க்க, குடையுடன் கிளம்பினாள் மித்ரா; அங்கே சித்ராவும் வந்து சேர, இருவரும் இணைந்து புறப்பட்டனர். ஆங்காங்கே காலி மனையிடங்களில், குப்பையுடன் வெள்ளம் சூழ்ந்திருந்தது.''மித்து...நிறைய 'சைட்' காலியா கிடக்குதே...இன்னும் விக்கலையா...இல்லேன்னா வாங்குனவுங்க, வீடு கட்டலையா?'' என்று கேட்டாள் சித்ரா.''நம்மள மாதிரி 'மிடில்' கிளாஸ் எல்லாம், இடத்தை வாங்குனா, உடனே வீடு கட்டிருவாங்க...லஞ்சம் வாங்குற அதிகாரிகளோ, ஊழல் பண்ணி சம்பாதிக்கிற அரசியல்வாதிகளோ தான் 'லேண்ட்'டை வாங்கி, காலியா போட்ருவாங்க'' என்றாள் மித்ரா.''கரெக்டா சொன்ன...தி.மு.க., ஆட்சியில, 'லேண்ட் கிராபிங்' நிறைய நடந்துச்சுன்னு தான், அதுக்காகவே தனியா ஒரு பிரிவு, போலீஸ்ல ஆரம்பிச்சாங்க; ஆனா, முன்ன மாதிரியே, நில அபகரிப்பு வேலைகள், நம்ம ஊர்ல ஜோரா நடக்குது.அதுலயும், பேரூர் தாலுகாவுல, 'ரெவின்யூ ரெக்கார்டு'கள்ல ஏகப்பட்ட திருகல் வேலை நடந்திருக்குதாம்...இதெல்லாம் செஞ்சு கொடுத்ததுக்காகவே, அங்க பொறுப்புல இருந்த ஒரு அதிகாரிக்கு ஒரு கோடி ரூபா 'பிளாட்' அன்பளிப்பா கிடைச்சிருக்காம்'' என்றாள் சித்ரா.''ஆமாக்கா...அந்த தாலுகா ஆபீஸ்ல ஆளுங்கட்சி 'டார்ச்சர்' ரொம்ப அதிகமா இருக்காமே...அதனால தான், 'அந்த தாலுகாவா... வேண்டவே வேண்டாம்'னு தாசில்தார்க எல்லாரும் தலை தெறிக்க ஓடுறாங்களாம். ரொம்ப நாளா 'அடிஷனல் சார்ஜ்'ல ஓட்டுறதுக்குக் காரணமே இதான்கிறாங்க!'' என்றாள் மித்ரா.''அதே மாதிரி, வடவள்ளி ஏரியாவுல, 'பத்திரம் தொலைஞ்சது'ன்னு கேஸ் போட்டு, 'என்.டி.சி.,' வாங்கி, ரிஜிஸ்டர் ஆபீஸ்ல, பத்திரம் வாங்கி, நிலத்தைப் புடுங்குற வேலையும் நடக்குதாம். இதுக்காகவே, அந்த ஏரியாவுல அண்ணன், தம்பி ரெண்டு பேரையும் ரெண்டு முக்கியமான பொறுப்புல போட்ருக்காங்கன்னு பேசிக்கிறாங்க. ஆட்சி மாறுனா, இந்த அதிகாரிங்க எல்லாரும் 'உள்ள' போறது நிச்சயம்'' என்றாள் சித்ரா.''இன்னொரு 'டாப் சீக்ரெட்' மேட்டரும் கேள்விப்பட்டேன்க்கா...கோயம்புத்துார்லயும், சுற்று வட்டாரத்துலயும் பெரிய பெரிய சொத்துக்களுக்கு, 'அக்ரிமென்ட்' போட்டு, பத்திரம் முடிக்காம நிறைய 'பெண்டிங்' கிடக்குதாம். கிட்டத்தட்ட 70, 75 சொத்துக்களுக்கு இப்பிடி 'அட்வான்ஸ்' கொடுத்து கை மாத்தி வச்சிருக்காங்களாம். பத்திரம் முடிக்கிறப்பதான், இந்த சொத்தெல்லாம் யார் யாரு வாங்குனதுன்னு தெரியவரும்கிறாங்க'' என்றாள் மித்ரா.''கவர்மென்ட் மாறுனாலோ, திடீர்னு கவர்னர் ஆட்சி வந்தாலோ, நம்மூர்ல பல விவகாரங்களைத் தோண்டி எடுக்க வேண்டி இருக்கும்னு சொல்லு'' என்றாள் சித்ரா.இருவரும், ஒவ்வொரு மரக்கன்றாகப் பார்த்துக் கொண்டே சென்றபோது, எதிரில் ஒரு தனியார் கல்லுாரியின் பேருந்து ஒன்று கடந்து சென்றது. அதைப் பார்த்ததும், மித்ரா அடுத்த 'டாபிக்'கிற்கு தாவினாள்...''அக்கா...நம்மூரு காலேஜ்ல, பேரிடர் மேலாண்மைங்கிற பேருல, ஒரு பொண்ணை அநியாயமா சாவடிச்சாங்களே...அந்த கேஸ்ல, காலேஜ் நிர்வாகத்து மேல எந்த நடவடிக்கையுமே எடுக்கலை பார்த்தியா?''''அதெப்பிடி எடுப்பாங்க...ஆளுங்கட்சியோட டில்லி முக்கிய பிரதிநிதியோட காலேஜ் ஆச்சே...அந்த 'தம்பி'யோட மனைவி தான், இந்த காலேஜ் நிர்வாகியாம்; அந்த ஆளுங்கட்சி துரை, தன்னோட வேட்புமனுவுல இருக்குற சொத்துப்பட்டியல்லயே இந்த காலேஜைப் பத்திச் சொல்லிருக்கார்னு 'வாட்ஸ் ஆப்'ல 'மெசேஜ்' பார்த்தேன்''''இருக்கட்டுமே...அதுக்காக, பேருக்குக் கூட, ஒரு கேஸ் 'பைல்' பண்ணாம விடுறது எந்த விதத்துல நியாயம்னு தெரியலை. நம்ம ஊர்ல பிரைவேட் காலேஜ்கள்ல ஒரு கண்காணிப்பே இல்லாமப் போயிட்டு இருக்கு''''உண்மைதான் மித்து...நம்மூர்ல இருக்குற ஒரு முக்கியமான காலேஜ் காம்பஸ்லயே, பசங்க தம், தண்ணி எல்லாம் அடிக்கிறானுகளாம்; ஹாஸ்டலுக்குள்ள போனா, 'பார்' மாதிரி இருக்குதாம்''''நீ சொல்ற காலேஜ் எதுன்னு எனக்குத் தெரியும்...அதை விட பெரிய காலேஜ்ல, அதை விட கொடுமை நடக்குதாம். அங்க 'எய்டடு' பிரிவுல 'கிளாஸ்' எடுக்குற புரபசர் ஒருத்தரு, தினமும் சரக்கு அடிச்சிட்டு தான் காலேஜ்க்கே வர்றாராம்...'கேர்ள் ஸ்டூடன்ட்ஸ்'ங்கள்ட்ட எப்பவுமே 'டபுள் மீனிங்'ல பேசுறாராம்; ஏதோ சங்கத்துல, முக்கியப் பொறுப்புல இருக்குறதால, அவரை மேனேஜ்மென்ட்ல எந்தக் கேள்வியும் கேக்குறதில்லையாம்''''எனக்கும் அந்த காலேஜ் எதுன்னு தெரியும்...அமைச்சர், எம்.எல்.ஏ., யாரு சொன்னாலும், அந்த காலேஜ்ல மதிக்கவே மாட்டாங்க... ஆனா, செகரட்டரியேட்ல இருந்து கார்ப்பரேஷன் வரைக்கும், அதிகாரிங்களுக்கு மட்டும், ஆளுக்கு ஒரு 'சீட்' கொடுத்து, காரியம் சாதிச்சுக்குவாங்களே...அவுங்களா இந்த புரபசருக்கு பயப்படுறாங்க?'' என்று கேட்டாள் சித்ரா.''ஆமாக்கா...சீக்கிரமே, அந்த புரபசருக்கு எதிரா, ஸ்டூடன்ட்ஸ்களே போராடுவாங்கன்னு பசங்க பேசிக்கிறாங்க'' என்றாள் மித்ரா.''நம்ம ஊர்லதான், இப்போ கார்ப்பரேஷன் ஸ்கூல் பிள்ளைங்களே போராட ஆரம்பிச்சிட்டாங்களே... போன வாரத்துலயே, ரெண்டு போராட்டம் நடந்துருச்சு தெரியுமா?'' என்றாள் சித்ரா.''எங்க எச்.எம்.மை மாத்தணும்னு அம்மணியம்மாள் ஸ்கூல் பிள்ளைங்க, மறியல் பண்ணுனாங்க...இன்னொண்ணு எங்க?'' என்று கேட்டாள் மித்ரா.''வெங்கிட்டாபுரம் ஸ்கூல்ல டீச்சர்ஸ் பற்றாக்குறைன்னு, பசங்களே போராட்டம் பண்ணுனாங்க...கார்ப்பரேஷன்ல இப்போ இருக்குற சி.இ.ஓ., ரொம்ப 'வீக்'கா இருக்குறது தான் இதுக்குக் காரணம்கிறாங்க. கார்ப்பரேஷன் கமிஷனர், இதெல்லாம் பார்த்தா, கொஞ்சம் நல்லா இருக்கும்'' என்றாள் சித்ரா.''அக்கா...போன 12ம் தேதியன்னிக்கு, ஸ்கூல் எஜூகேஷன் செகரட்டரி, நம்ம ஊர்ல மீட்டிங் நடத்துனப்போ, 'ஜே.டி.,க்களுக்கு இணையா சி.இ.ஓ.,க்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கோம். அதை தவறா பயன்படுத்தாதீங்க. எந்தப் புகார் வந்தாலும், அதை 'அட்டெண்ட்' பண்ணுங்க. சங்கத்துக்காரங்க வந்தா மரியாதையா பேசுங்க'ன்னு 'அட்வைஸ்' பண்ணுனாராம்'' என்றாள் மித்ரா.''நானும் அதை கேள்விப்பட்டேன்...ஆனா, நம்ம அய்யாவோட அண்ணன், அதெல்லாம் மதிக்கிறதே இல்லியாம். ஆபீஸ்க்குள்ள மட்டும், மாற்றம் வந்தது மாதிரி 'மேக்கப்' பண்ணிருக்காராம்; யாராவது புகார் கொடுக்க வந்தால் தான், அவரோட ஒரிஜினல் முகமே தெரியுதாம்'' என்றாள் சித்ரா.''நம்ம யுனிவர்சிட்டி 'சிண்டிகேட்'ல இருக்குறவுங்க பல பேருக்கும் இந்த மாதிரி, இரட்டை முகம் இருக்குதுக்கா...செனட் மீட்டிங்ல, 'மீடியா'வை அனுமதிக்கணும்னு சில பேரு கேட்ருக்காங்க...அதுக்கு, 'அவுங்க இப்போ எழுதுறது போதாதா; இதுல மீட்டிங்ல வேற அனுமதிக்கணுமா; வேண்டாம்'னு சொல்லீட்டாங்களாம். கொடுமை என்னன்னா, இதைச் சொன்னவுங்க எல்லாம், வெளியில 'மீடியா'வுக்கு நண்பனா காட்டிக்கிறவுங்கதானாம்'' என்றாள் மித்ரா.''அண்ணா யுனிவர்சிட்டி 'செனட்' மீட்டிங்ல எல்லாம் 'மீடியா'வை அனுமதிக்கிறாங்களே...இங்க அனுமதிச்சா என்னவாம்?'' என்றாள் சித்ரா.''யுனிவர்சிட்டியைப் பத்திப் பேசவும், மருதமலை மேட்டர் ஞாபகம் வந்துச்சு...அங்க 'ரிட்டயர்டு' ஆன மூணு அர்ச்சகர்களுக்குப் பதிலா, அவுங்களோட வாரிசுகளை நியமிக்க, விதிகளை மீறி முயற்சி நடக்குதுன்னு அன்னிக்கு பேசுனோமே...அந்த மூணு வாரிசுகளுக்கு 'போஸ்ட்டிங்' போட, ஆளுக்கு 15 லட்ச ரூபா கேக்குறாங்களாம்...பணம் கேக்குறவுங்களுக்கு இப்போ 'அர்ச்சனை' நடந்துட்டு இருக்கு!'' என்று சிரித்தாள் மித்ரா.''அங்க பிரசாதக்கடை ஒண்ணு ஏலம் போனதுக்கு, அடிவாரத்துல இருக்குற வி.ஐ.பி., 'பி' ரூம்ல, 'பார்ட்டி' வச்சிருக்காங்க. எவ்வளவு பணம் கொடுத்தாலும், அதை பக்தர்களுக்குக் கொடுக்குறது இல்லை; ஆனா, 'பார்ட்டி' மட்டும் நடக்குது'' என்றாள் சித்ரா.''நீ 'பார்ட்டி'ன்னு சொன்னதும், எனக்கு நம்ம உடன் பிறப்புகளோட 'பார்ட்டி' ஞாபகம் வந்துச்சு...அவுங்க தான், ஆளுங்கட்சிக்காரங்களோட கூட்டணி போட்டு, 'பார்ட்டி' துாள் கிளப்புறாங்களாம். இதைப் பத்தி ஆதாரத்தோட, மேலிடத்துக்கு புகார் போயிருக்காம்!'' என்றாள் மித்ரா.''மித்து...ஆளுங்கட்சியோட முக்கியமான சில பேருக்கு இருக்குற ரகசிய தொடர்பு பத்தி, பல 'பகீர்' மேட்டரெல்லாம் வருது. அதெல்லாம் 'கன்பார்ம்' பண்ணிட்டு சொல்றேன்'' என்றாள் சித்ரா.அடுத்த மேட்டரை மித்ரா ஆரம்பிப்பதற்குள், எதிரில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வந்தனர்; இவர்களின் பேச்சு தடைபட்டது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X