'செக்போஸ்ட்' டியூட்டி ஏட்டம்மா... 'துட்டு' வசூலில் பட்டைய கெளப்புது பாரம்மா!

Added : ஜூலை 17, 2018
Advertisement
ஆடி மாதம் பிறந்ததை முன்னிட்டு, முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவிலுக்கு சென்ற சித்ராவும் மித்ராவும் சுவாமி தரிசனம் முடிந்து, பிரசாதத்தை வாங்கி கொண்டு, வெளிப்பிரகாரத்தில் அமர்ந்தனர். ''எப்படியோ ஆங்காங்கே ஆக்கிரமிப்பிலிருந்த கோவில் நிலங்களை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் களம் இறங்கிட்டாங்க, தெரியுமா?'' என்றாள் சித்ரா. ''ஓ... பரவாயில்லையே. ஆனா, ரொம்ப ஸ்ட்ரிக்டா
சித்ரா, மித்ரா

ஆடி மாதம் பிறந்ததை முன்னிட்டு, முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவிலுக்கு சென்ற சித்ராவும் மித்ராவும் சுவாமி தரிசனம் முடிந்து, பிரசாதத்தை வாங்கி கொண்டு, வெளிப்பிரகாரத்தில் அமர்ந்தனர். ''எப்படியோ ஆங்காங்கே ஆக்கிரமிப்பிலிருந்த கோவில் நிலங்களை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் களம் இறங்கிட்டாங்க, தெரியுமா?'' என்றாள் சித்ரா. ''ஓ... பரவாயில்லையே. ஆனா, ரொம்ப ஸ்ட்ரிக்டா இந்த வேலையை பார்க்கோணுங்க்கா,''''அது கரெக்ட் மித்து. அவிநாசி கோவிலுக்கு சொந்தமான, பல கோடி ரூபாய் சொத்து தனியார்கிட்ட இருக்குதுன்னு, சென்னையிலிருந்து வந்த குழுவினர் ஆய்வு செஞ்சாங்க. ஆனால், பக்கத்தில் இருக்கிற சேவூர் அனுமந்தராயர் கோவில் நிலத்தை பற்றி கண்டுக்க மாட்டேங்கறாங்க,''''இல்லீங்க்கா. அந்த விவகாரத்தில், விசாரணை நாளில், டி.ஆர்.ஓ., சென்னையில் ஒரு அவசர கூட்டத்துக்கு போயிட்டா ராம். அதனால் அடுத்த கூட்டத்தில் இதற்கு ஒரு தீர்வு கிடைத்து விடும். குறிப்பா, அறநிலையத்துறையினர் இது விஷயத்தில், வேகம் காட்டினால், நன்றாக இருக்கும்,''''ஆனால், அவர்கள்தான் வருவாய்த் துறையினரை மதிப்பதே இல்லையே. அப்புறம் எப்படி பிரச்னைக்கு தீர்வு காண முடியும்? சரி, கிளம்பலாம் வா'' என்ற சித்ரா, பார்க்கிங் ஏரியாவுக்கு சென்றாள்.காங்கயம் ரோட்டிலிருந்து, காமராஜர் ரோடு திரும்பினால், எக்கச்சக்கமான வாகன நெரிசல். பாலம் கைப்பிடிச்சுவர் கட்டும் பணி நடப்பதால், ஒரு புறம் செல்ல முடியாமல், மேற்கு புறத்தில் வாகனங்கள் முண்டியடித்து கொண்டு, வரிசையாக சென்று கொண்டிருந்தன. ''ஒரு வழியா பாலம் கட்டும் பணி முடிந்து விட்டாலும், இந்த சர்வீஸ் ரோடு பிரச்னைக்கு தீர்வு கிடைக்காமலேயே போய்விடும் போல் உள்ளது,'' என்றாள் சித்ரா. ''விரைவில் பாலம் பணி முடிந்து விடுமாம். அதை திறந்துட்டு, சர்வீஸ் ரோடு பணி துவங்கலாம், என்று சொல்கிறார்களாம்,'' என்று மித்ரா, சொன்னதும், ''அட... மித்து. நீ வேற. இப்படியே பேசிட்டு, சர்வீஸ் ரோட்டை இல்லாமல் செய்து விடுவார்கள் போல,''ஒரு வழியாக பஸ் ஸ்டாண்ட் அருகில் சென்றதும், பஸ் ஸ்டாண்டிலிருந்து, சமீபத்தில் துவக்கப்பட்ட புதிய அரசு பஸ் ஒன்று வெளியே வந்தது. அதைப்பார்த்த மித்ரா, ''இப்ப வந்திருக்கிற புது பஸ் எப்படி இருக்குதாம்?'' என்றாள்.''பஸ்கள்தான் புதுசா வந்திருக்குடி. ஆனால், அதிகாரிகள் பழைய ஆட்கள் தானே. அவர்கள் அப்படி தான், எதில் பாக்கெட்டை நிரப்பலாம் என்று கழுகு போல பார்த்துக்கிட்டு இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா. ''அடி மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை நடப்பதுதானேக்கா. இதில் புதுசா, எதுவும் இருக்கிறதா?'' ''பஸ்களில் ஓசி பயணம் செய்து மாட்டு பவர்கள், 'பைன்' கட்டுவர் அல்லவா? அதை கண்டக்டர் கணக்கில் கூடுதல் இருப்பு என எழுதி கிளையில் கலெக் ஷன் பணத்தில் சேர்க்கின்றனர். அதை திரும்ப செலுத்தியதாக, இரண்டொரு நாளில், கணக்கெழுதி கழித்து தங்கள் பாக்கெட்டில் போட்டு கொள்கின்றனர்,'' என்றாள் சித்ரா. இருவரும் பேசிக்கொண்டே, காமராஜர் ரோட்டில் சென்றனர். ''ெஹல்த் மினிஸ்டர் பங்ஷனில் நடந்த கூத்து தெரியுங்களா?'' என்றாள் மித்ரா.''ஏன்? ஏதாவது தெருக்கூத்தா?''''அதில்லக்கா. ''பங்ஷன் முடிஞ்சதும், மூணு நாள் பயிற்சி துவங்குச்சு. டாக்டர்களுக்கு கொடுக்கறதுக்காக, 'பேனா, நோட்பேட்' வச்சிருந்தாங்க. அதைப்பார்த்த ஒரு லோக்கல் பத்திரிகை நிருபர், 'பேனா' பாக்கெட்டை, லவட்டிட்டாரு. அதைப்பார்த்த, சுகாதாரத்துறை ஊழியர் ஒருத்தர், பி.ஆர்.ஓ., ஆபீசுக்கு போய், '' சார்... சார்.. டாக்டர்களுக்கு பேனா கொடுக்கணும்,''''என்னைத்தான் சத்தம் போடுவாங்க, பேனா பாக்கெட்ட வாங்கி கொடுங்க ப்ளீஸ்'னு கெஞ்சியிருக்காரு. அதுக்கு அப்புறமா, 'பேனா பாக்கெட்'களை வாங்கி கொடுத்தாங்களாம் இதைப்பார்த்த மத்த பத்திரிகைகாரங்களுக்கு ஒரே அவமானமாக போயிடுச்சு,''என்று விளக்கினாள் மித்ரா.''ஏன்... மித்து. 'புதுசா பதவிக்கு வந்தவங்களுக்கு பயம் போகவே இல்லையாம்?'' என்று சித்ரா கேட்டதும், ''யாரை சொல்றீங்க?'' மித்ரா புரியாமல் கேட்டாள்.''திருப்பூர் நார்த், சவுத், காங்கயத்துக்கு, பதவி உயர்வுல வந்தவங்க தாசில்தார் ஆகியிருக்காங்க. அவங்க பயத்துல, கலெக்டர் ஆபீஸ் கேம்பஸில் நுழைஞ்சதும், மொபைல் போனை 'சைலன்ட்'ல போட்டுடறாங்க. கேட்டா, 'இது எதுக்கு வெட்டியா?'ன்னு கேட்குறாங்க,''''அப்போ... மண் கடத்தறாங்கனு புகார் செய்றதுனா, இனிமேல் கலெக்டர் நம்பருக்கே கூப்பிட வேண்டியதுதான்,''என்று கூறி சிரித்தாள் சித்ரா.''தாசில்தார்னு சொன்னதும் எனக்கு ஒரு மேட்டர் ஞாபகம் வருதுக்கா. சவுத் தாசில்தாரா இருந்தவருக்கு, எதிர்பார்த்த பொறுப்பு கொடுக்காம, மழை, வெள்ளம், புயல் கவனிக்கற வேலைக்கு மாத்தினாங்க. 'அப்செட்' ஆன அவரும், பொறுப்பு ஏற்காம, இரண்டு மாசம் லீவில் போயிட்டாராம்,''''ரெவின்யூ சட்டப்படி, 30 நாளுக்கு மேல் ஒருத்தர் லீவுன்னா, அந்த இடத்துக்கு வேற ஆள அப்பாயின்ட் பண்ணிடுவாங்க. அப்புறம் பார்க்கலாம்னு இருக்காரோ என்னவோ. இதேமாதிரிதானே, 'லேடி'தாசில்தார் ஒருத்தர், ஏற்கனவே இந்த பொறுப்புக்கு வராமலேயே, 'டிமிக்கி' கொடுத்தாங்க. ஆள், அம்புனு அதிகாரத்தோட இருந்தவங்கள, திடீர்னு ஒரு 'ரூம்'ல உட்கார வச்சா எப்படியிருக்கும்?.'' என்றாள் மித்ரா''அப்போ.. பேரிடர் மேலாண்மை பிரிவுங்கறது, 'பனிஷ்மென்ட்' ஏரியா மாதிரி ஆயிருச்சுன்னு சொல்லு?'' என்றாள் சித்ரா.''இதையும் கேளுங்க. கலெக்டர் ஆபீஸில் இருக்கிற, டிராவலர்ஸ் பங்களாக்கு பின்னாடி, ஒரு கண்ணாடி மாளிகையே கட்டலாம் போல. அந்தளவுக்கு காலி மது பாட்டில் ரொம்பி கிடக்குது. பல வி.ஐ.பி.,க்கள் வந்து போற இடம்; ஆள்நடமாட்டம் இல்லாம இருக்குதுங்கறதுக்காக, இப்படியெல்லாம் செய்றாங்க. விருந்தினர் மாளிகை, அதிகாரிகள் குவாட்டர்ஸ் பக்கத்துல, 24 மணி நேரமும் போலீஸ் இருந்தா மட்டும்தான், இதுமாதிரி 'குவார்ட்டர்' பாட்டில் தொந்தரவு குறையுங்க்கா,'' என்றாள் மித்ரா.அந்த வழியே 'டாஸ்மாக்' மதுக்கடை முன், ஏதோ தகராறு நடந்தது. வண்டியை நிறுத்த முயன்ற சித்ராவிடம், ''அக்கா.. போலாங்க்கா. போதையில் அடிச்சுப்பாங்க, சேந்துக்குவாங்க' என்றாள் மித்ரா.''இதைப்பார்த்ததும், மங்கலத்தில் நடந்த மதுக்கடை விஷயம் நினைவுக்கு வருது. மங்கலத்தை சுத்தி பல கிராமங்களில் 'பெட்டிக்கடையிலயே' சரக்கு ஓேஹாண்ணு விக்குதாம்...'' என்றாள் சித்ரா.''பெட்டிக்கடையில சரக்கா.. .? என்ன சொல்றீங்க..'' என்று, ஆச்சரியமாக கேட்டாள் மித்ரா.''சோமனுார் ரோட்ல, சின்னப்புத்துார், மலைக்கோவில் பிரிவு தாண்டியதும், வலது பக்கம் சின்னதா பெட்டிக்கடை வச்சிருக்காங்க. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல எதுக்கு கடை வச்சாங்கனு மக்கள் கிண்டல் பண்ணிட்டு இருந்தாங்க,''''ஆனா, இப்பத்தான் எதுக்கு வச்சாங்கனு தெரிஞ்சிருக்கு. அந்த பெட்டிக்கடையில, 'சரக்கு' பாட்டில்கள் தடையில்லாம கிடைக்குதாம். அதனால, 'லைட்' வசதியில்லாத ஏரியாவுல, ராத்திரி 10:00 மணி வரைக்கும்பெட்டிக்கடையில் சரக்கு விற்பனை 'கும்'னு விக்குதாமே?, '' என்றாள் சித்ரா.''ஏனுங்க்கா... அந்த வழியாக போயிட்டு வந்த நீங்களே இவ்வளவு தகவல சொல்றீங்க. மங்கலம் போலீசுல என்ன பண்றாங்க. அப்படினா, அந்தபக்கம் போக மாட்டாங்களா; இல்ல கண்டுக்க மாட்டாங்களா '' என்றாள் மித்ரா.''அதையேதான், விவசாயிகள் கேட்கறாங்கடி. ஒரு மரத்துல பானை கட்டினாலும், நேர்ல வந்து வாங்கி குடிச்சுட்டு, மறுநாளே வந்து பானையை உடைக்கறாங்க. இப்படி பெட்டிக்கடையில வச்சு சரக்கு வித்துட்டு இருக்காங்க ஏன் கண்டுக்க மாட்டீங்கறாங்கனு,' விவசாயிகள், தமிழக முதலமைச்சருக்கு, பெட்டிஷன் போட்டிருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.அதற்குள் தென்மேற்கு பருவமழை, ஜில்லென்ற துளிக்க, அந்த மாலைப்பொழுது மிக ரம்மியமாகி விட்டது. கால நிலையை ரசித்தவாறே, இருவரும் சென்றனர். அதற்குள் மித்ரா வீடு வரவே, ''அக்கா... இருங்க. டீ சாப்பிட்டு போலாம், அம்மா.. ரெண்டு டீ கொண்டாங்க,'' என வீட்டுக்குள் பார்த்து குரல் கொடுத்தாள்.போர்டிகோவில் இருந்த சேரில், ஹாயாக அமர்ந்தாள், சித்ரா. அதற்குள் ஆவி பறக்கும் டீ வரவே, ''ரெண்டு பேரும், பேசிட்டே டீ குடிங்க'' எனக்கூறி, டீபாயின் மேல், டீ டம்ளர்களை வைத்த மித்ராவின் அம்மா, வீட்டுக்குள் நுழைந்தாள்.''ஏங்க்கா... ஸ்டேஷன் பக்கமே எட்டி பார்க்காத, ஒரு ஏட்டம்மா, வெறும் செக் போஸ்ட் டூயூட்டி மட்டுந்தான் பாக்குதாம்,'' என்றாள் மித்ரா சந்தேகமாக.''ஆமாண்டி... உண்மைதான். 'பாத்திர' தொழில் செய்ற ஊரில் உள்ள ஸ்டேஷனில் ஏட்டம்மா இருக்குறாங்க. அங்கிருக்கிற செக்போஸ்ட்டில்தான், ரெண்டு வருஷமா டியூட்டி பார்க்குதாம். யாராவது கேட்டா, 'கைக்குழந்தை இருக்குது'ன்னு சொல்லி, ஓ.பி,. அடிக்கிறாங்களாம். அப்புறம், வர்ற வண்டிக்காரங்ககிட்ட, 'செம' வசூல் வேட்டையாம்,'' என்றாள் சித்ரா.அப்போது, ''மித்து.. நான் போய், 'ரமா' ஸ்டோர்ஸில், எண்ணெய் வாங்கிட்டு, இதோ வந்திடறேன்,'' என்றவாறு, மித்ராவின், அம்மா, துணிப்பையில், பாத்திரத்தை வைத்து கொண்டு சென்றார்.''ஏங்க்கா.. நானொரு விஷயம் கேள்விப்பட்டேன். 'சிட்டி'யில் ஐ.எஸ்., போலீஸ்காரங்க, சத்தமே இல்லாமல் பாய ஆரம்புச்சிட்டாங்க. பழைய அதிகாரிகிட்ட, கமுக்கமா இருந்தவங்க, இப்ப 'பட்டய' கெளப்பறாங்களாம். சிலரை டிரான்ஸ்பர் செஞ்சாங்க. ஆனாலும், சில இன்ஸ்பெக்டர்கள், மது, லாட்டரின்னு, எப்ப பார்த்தாலும், வைட்டமின் 'ப'வை எண்ணிகிட்டே இருக்காங்களாம்,'' என்று மூச்சு விடாமல் கூறினாள் மித்ரா. ''ஆமாண்டி.. நுாத்துக்கு நுாறு, நீ சொல்வதெல்லாம் உண்மையே. சிட்டியில், ரொம்ப நாளா ஒரே இடத்தில 'குப்பை' கொட்றவங்க லிஸ்ட் எடுத்து, களை எடுக்கறதில், புதுசா வந்த அதிகாரி, தீவிரம் காட்றாராம். இதை தெரிஞ்சுகிட்ட, ஒரு இன்ஸ்பெக்டரம்மா, ஒதுக்குப்புறமா உள்ள ஸ்டேஷனை விட்டு, வரவே மாட்டேன்னு, அடம்புடிக்கிறாங்களாம்,'' என்றாள் சித்ரா.''இந்த போலீஸ்காரங்களோட நடவடிக்கையை பார்த்தால், திருப்பூரில் தென் மேற்கு பருவமழை கொட்டுதோ இல்லையோ, சில அதிகாரிங்க பாக்கெட்டில், 'பண மழை' நல்லாவே கொட்டுது,'' மித்ரா சொன்னாள். ''வரவர... நீ.. நல்லா டெவலப் ஆயிட்டே. மாவட்ட அதிகாரியாக பொறுப்பேற்ற 'மேடம்' புரையோடி கிடக்கிற புறநகர் ஸ்டேஷன்களில், நல்லா நிர்வாகம் பண்ணுவாங்கன்னு எல்லோரும் எதிர்பார்த்தாங்க. ஆனா, ஒண்ணும் நடக்கல. தாராபுரத்தில மணல் கடத்தின விவகாரத்தில கூட, அஞ்சு பொக்லைன், லாரிகளை மக்களே புடிச்சு கொடுத்தாங்க. விடியறதுக்குள்ளே, 'வாங்கிட்டு' வண்டிகளை அனுப்பிச்சுட்டாங்களாம்,''''அதே மாதிரி, 'காளை'க்கு பேர் போன, அப்புறம் லிங்கேஸ்வரர், என சப்-டிவிஷன் ஸ்டேஷன் பகுதியில், ஒரு நம்பர் லாட்டரி, கஞ்சா, மதுக்கடையில், நான்-ஸ்டாப் 'சில்லிங்' இப்படி... ஓஹோன்னு நடக்குதாம். இதைப்பத்தி, யாராச்சும் புகார் செஞ்சா... 'அப்படியா.. புகார் கொடுங்க,' பாத்துக்கலாம்,' பதில் சொல்றாங்களாம். ம்..ம்.. இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ?'' என்று புலம்பினாள் சித்ரா.அதற்குள், சுடச்சுட வெங்காய பஜ்ஜிகளை கொண்டு வந்தார் மித்ராவின் அம்மா. ''மழைக்கு சூப்பரா இருக்குதுமா,'' என்ற சித்ரா, ஒரு பஜ்ஜியை எடுத்த சாப்பிட ஆரம்பித்தாள்.''ஏனுங்க்கா...! கோழிப்பண்ணை ஊர்ல, மயானம் கட்டறதுக்கு, வசூல் செஞ்சதுல, கோடிக்கணக்கான ரூபாய், வசூலாயிடுச்சு. ஆனாலும், வேலை ரொம்ப மந்தமா இருக்கு. ஊருக்குள்ள, என்னென்னவோ, பேசுறாங்க,'' என்ற மித்ரா, தன் பங்குக்கு பஜ்ஜியை சாப்பிட ஆரம்பித்தாள்.''ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, கடைசியா எல்லாரும் போற இடம் அதுதான். அங்கேயுமா?'' என்ற சித்ரா, தண்ணீரை குடித்து விட்டு, ''ஓ.கே., மித்து. மழை பெருசா வர்றதுக்குள்ள கெளம்பறேன்,''என்றவாறே, ஹெல்மெட் அணிந்து கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X