சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சிறுமியை சீரழித்த காமுகர்களுக்கு அடி, உதை

சென்னை:சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவர்களில் சிலருக்கு, செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்தில், அடி, உதை விழுந்தது. போலீஸ் பாதுகாப்புடன், இரவு,7:45 மணிக்கு, நீதிமன்ற வளாகத்தை விட்டு, புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 சிறுமியை, சீரழித்த, காமுகர்களுக்கு, அடி, உதை


சென்னை, அயனாவரத்தில், அடுக்குமாடி குடியிருப்பில், வசித்து வரும், மாற்றுத் திறனாளியான, 12 வயது சிறுமிக்கு, 17 பேர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். பல மாதங்களாக, இந்த அநியாயம் நடந்துள்ளது. குடியிருப்பில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த காவலாளிகள், 'லிப்ட் ஆப்பரேட்டர், பிளம்பர்' என, 17 பேர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, நேற்று காலை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அனைவரையும்,31ம் தேதி வரை, காவலில் வைக்க, நீதிபதி மஞ்சுளா உத்தரவிட்டார். பிற்பகல்,3:00 மணிக்கு, நீதிமன்ற நடைமுறை முடிந்து, அவர்களை, சிறைக்கு கொண்டு செல்ல, மூன்றாவது மாடியில் இருந்து, படிகள் வழியாக அழைத்து வந்தனர்
.அப்போது, நீதிமன்ற வளாகத்தில் கோஷமிட்ட படி இருந்த வழக்கறிஞர்கள் சிலர், கைது செய்யப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இருவர் படிக்கட்டில் இருந்து கீழே தள்ளப் பட்டனர். அவர்களுக்கு அடி, உதை விழுந்தது. உடனே போலீசார், அவர்களை மீட்டு, நீதிமன்றத்துக்குள் கொண்டு சென்று, கதவுகளை மூடினர்.

இருந்தாலும், வழக்கறிஞர்கள் அங்கேயே கூடியிருந்தனர். அவர்களுடன், போலீசார், நீதிபதிகள் பேச்சு நடத்தினர்.இரவு, 7:00 மணி

அளவில், வழக்கறிஞர்கள் கலைந்து சென்றதும், 7:45 மணிக்கு, 17 பேரையும் போலீசார் அழைத்து சென்றனர்.

'போக்சோ' சட்டம் பாய்ந்தது!மத்திய அரசு, 12 வயதுக்கு உட்பட்ட, சிறுமியருக்கு பாலியல் தொந்தரவு செய்தால், துாக்கு தண்டனை கிடைக்கும் வகையில், 'போக்சோ' சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த, 17 பேரையும், சென்னை மாநகர போலீசார், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்துள்ளனர்.உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, ஒன்றுக்கும் மேற்பட்டோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, உறுதி செய்யப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் ரகசியவாக்குமூலமும் பெற்று உள்ளார். விரைவில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை பெற்றுத் தருவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்சென்னையில், செவித்திறன் குறைபாடுடைய, 12 வயது சிறுமியை சீரழித்த, 17 பேர் பற்றிய, பகீர் தகவல்கள் தெரிய வந்துள்ளன. சென்னை, அயனாவரத்தில் உள்ள, பிரபல அடுக்குமாடி குடியிருப்பில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, தொழில் அதிபர், மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார். மூத்த மகள், வட மாநிலம் ஒன்றில், பட்டப்படிப்பு படிக்கிறார். செவித்திறன் குறைபாடுடைய, 12 வயதான இளைய மகள், அயனாவரம் அருகே உள்ள, தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

இவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், 'போகஸ்' என்ற, 'செக்யூரிட்டி' நிறுவனம், காவலாளிகளை நியமித்துள்ளது. அதேபோல், 'யு.கே., பெஷிலிட்டி சர்வீஸ்' என்ற நிறுவனம், 'எலக்ட்ரீஷியன், பிளம்பர், லிப்ட் ஆப்பரேட்டர்' மற்றும் வீட்டு பணிகளுக்கு ஆட்களை அமர்த்தி உள்ளது.

Advertisement

சிறுமி, செவித்திறன் குறைபாடுடையவர் என்பதால், பெற்றோர் அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்துள்ளனர். சிறுமியும், பட்டாம் பூச்சி போல், லிப்ட்டில் மாடிக்கு செல்வதும், தரை தளத்திற்கு வருவதுமாக, விளையாடி மகிழ்வார்.

அப்போது, லிப்ட் ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்த, ஓட்டேரி எஸ்.வி.எம்., நகரைச் சேர்ந்த, பாபு, , என்பவன், சிறுமியின் கன்னத்தை கிள்ளி விளையாட துவங்கினான். வெகுளித்தனமான அந்த சிறுமிக்கு, இவனின் நடவடிக்கைக்கான அர்த்தம் தெரியவில்லை. இதனால், அவன் விளையாட்டு காட்டுவது போல், தகாத இடங்களில் தொட்டு பேசுவது பற்றி, பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

அதையே தனக்கு சாதமாக பயன்படுத்திய பாபு, சிறுமியை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சீரழித்துள்ளான். அதை, மொபைல் போனில், 'வீடியோ'வும் எடுத்து உள்ளான். பின், அந்த வீடியோவை காட்டியே, பல முறை பாலியல் ரீதியாக, சித்ரவதை செய்துள்ளான். தன்னுடன் பணிபுரியும் பிளம்பர், தோட்ட வேலை செய்பவர், எலக்ட்ரீஷியன் என, 16 பேரும், சிறுமியை பலாத்காரம் செய்ய ஏற்பாடு செய்துள்ளான். ஏழு மாதங்களாக, இது நடந்துள்ளது.

நெஞ்சை பதற வைக்கும், இந்த கொடூரத்தை நிகழ்த்திய, காமக்கொடூரன்கள் பற்றி, இரு தினங்களுக்கு முன், டில்லியில் இருந்து, சென்னை வந்த, தன் சகோதரியிடம்தெரிவித்து உள்ளார் சிறுமி. அதன்பின், அவரது பெற்றோர், சென்னை, தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, வேப்பேரி மகளிர் காவல் நிலைய போலீசார், 17 பேரையும், நேற்று கைது செய்தனர்.

தீர்த்துக்கட்ட முயற்சி!

குற்றவாளிகளில் ஒருவனான, ரவிக்குமார் என்பவன், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்: போரூரில், ஹாசினி என்ற, ஆறாம் வகுப்பு சிறுமியை, தஷ்வந்த் என்பவன், பாலியல் பலாத்காரம் செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டோம்.அதேபோல, நாங்களும் சிறுமியை கொன்று விடலாம் என, முடிவு செய்தோம். அதற்கு, பல நாட்கள் திட்டம் தீட்டினோம். போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்பதற்காக, அந்த திட்டத்தை கைவிட்டோம். சிறுமியை மிரட்டியே வைத்திருந்தோம். அவர், எங்களை பார்த்தாலே நடுங்குவார். யாரிடமும் சொல்லக் கூடாது என, சத்தியமும் வாங்கினோம்.இவ்வாறு அவன் கூறியுள்ளான்.


Advertisement

வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
20-ஜூலை-201817:38:04 IST Report Abuse

தாமரை இந்த நாய்களையும் இவர்களுடன் இன்னும் ஏதாவது மிருகங்களும் இவனுகளுக்கு வக்காலத்து வாங்குற நாய்களையும் நடுத் தெருவுல அடிச்சே கொல்லனும்.

Rate this:
SUNA PAANA - Chennai,இந்தியா
20-ஜூலை-201814:33:10 IST Report Abuse

SUNA PAANAதமிழக அரசு ஒரு செயல் படாத அரசு எனபது தெள்ள தெளிவாக தெரிகிறது. எல்லாவற்றிலும் லஞ்சம், ஊழல், சாதி பாகுபாடு, சாராயம் , சினிமா, சின்னத்திரை , கேவலமான புத்தகங்கள், இன்டர்நெட், மொபைல் போன்றவற்றால் பரவி கிடைக்கும் ஆபாசங்கள் என்று அடுக்கிக்கொண்டு போகலாம். நீதி துறை முதல், காவல் துறை வரை எல்லாவற்றிலும் அரசியல் மற்றும் லஞ்சம் புகுந்துள்ளது. இறைவா நீ மறுபடியும் ஒரு அவதாரம் எடுக்கவேண்டுமென உன்னை பிரார்த்தனை செய்கிறேன்.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-ஜூலை-201800:51:50 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்சபரிமலையில் பெண்கள் வந்தால் ஆண்களால் விபரீதம் நடக்கும்...என்று ஒருவன்.. பெண்கள் மேலாடை இல்லாமல் வருவார்களா என கேட்கும் இன்னொருவன்... இது போன்ற ஒவ்வொரு கயவர்களின் உள்ளுக்குள்ளும் இது போன்ற 17 பேர் ஒளிந்து கொண்டு தான் இருக்கிறார்கள். என்றைக்கு வெளியே வருவார்களோ என்று தெரியாது.. மனைவியை தவிர, கட்டிக்கொள்ள போகிறவள் தவிர மற்ற அனைவரையும் தாயாக, தமக்கையாக மட்டுமே யோசிக்கவேண்டும், அவர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டியது நமது கடமை, என்று நல்ல பாடம் படிக்காத அந்த ஆண்கள் தான் அதிகம் உள்ளார்கள். அத்தனை கடவுள்கள் இருந்தும், ஒழுங்கான சமூகம் இல்லை..

Rate this:
மேலும் 90 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X