மயிலாடுதுறை: இந்திய எல்லையில், கடும் வெயில் மற்றும் குளிரில், பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில், குளிரின்போது வெப்பத்தையும், வெயில் நேரத்தில், குளிர்ச்சியும் அளிக்கும் வகையில், நவீன கருவியை, புதுச்சேரி மாணவி வடிவமைத்துள்ளார்.புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்தவர் கலிமாமுருகன், 45; உழவர்கரை நகராட்சியில், ஒர்க் இன்ஸ்பெக்டர். இவரது மனைவி, புதுச்சேரி அரசு மருத்துவமனை செவிலியர். இவர்களது ஒரே மகள் தேவசேனா, 14, தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை முன்னுதாரணமாக கொண்டு, அறிவியல் விஞ்ஞானியாக வேண்டும் என்ற ஆர்வம் உடைய இவர், பள்ளியில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்று, தனது கண்டுபிடிப்புகளை இடம்பெற செய்து வருகிறார்.இந்திய எல்லையில், கடும் வெயில் மற்றும் குளிரில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில், குளிரின்போது வெப்பத்தையும், வெயில் நேரத்தில் குளிர்ச்சியும் அளிக்கும் வகையில், சீருடை தயாரிக்க, தேவசேனா எண்ணினார். அவரது உன்னத நோக்கத்தை புரிந்து, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வழிகாட்டினர்.நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள ஹைடெக் ரிசர்ச் நிறுவன நிர்வாகிகள் ஒத்துழைப்புடன், பேட்டரியில் இயங்கும், 'தெர்மல் சிஸ்டம்' என்ற கருவியை, தேவசேனா வடிவமைத்து உள்ளார். முதலில் கருவியின் எடை, 2 கிலோவாக இருந்தது, பின், ஒரு கிலோவாகவும், இறுதியில், 750 கிராமாகவும் குறைத்து, வடிவமைத்து உள்ளார்.இந்த நவீன கருவியை, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி அனுமதியுடன் பெறப்பட்ட ராணுவ சீருடையில், முதுகு பகுதியில் பொருத்தி, பின், பிரித்து எடுக்கும் வகையில் பொருத்தி, சோதனை மேற்கொண்டுள்ளார்.தான் வடிவமைத்துள்ள கருவியின் எடையை மேலும் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மாணவி, அந்தக் கருவியை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும், மத்திய அரசின் உதவியை எதிர் நோக்கியுள்ளார்.தேவசேனா வடிவமைத்துள்ள கருவி, ராணுவத் துறையின் சோதனையில் வெற்றி பெற்று, மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு, இந்த சீருடை பெரும் வரப்பிரசாதமாக அமையும்.
கருவியின் செயல்பாடுமிகச் சிறிய அலுமினிய பெட்டி வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இக்கருவியில், பெட்டியின் நடுவே பொருத்தப்பட்டுள்ள, 'பென்டியர் பிளேட்' எனப்படும், சிறிய எலக்ட்ரானிக் டிவைசை, இரு வழியில் இயக்கும் போது வெப்பத்தையும், குளிர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.இவ்வாறு ஏற்படுத்தப்படும் வெப்பம் மற்றும் குளிர்ச்சியானது, பென்டியர் பிளேட்டின் இருபுறம் அமைக்கப்பட்டுள்ள சிறிய, 'பேன்' மூலம் சீருடைக்குள் செலுத்தப்படுகிறது. அதன்மூலம், இக்கருவி பொருத்தப்பட்ட சீருடையை அணியும் ராணுவ வீரர்களுக்கு வெப்பமும், குளிர்ச்சியும் கிடைக்கும்.சீதோஷ்ண நிலைக்கேற்ப, இக்கருவியை இயக்கி, வெப்பம் மற்றும் குளிர்ச்சியை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கருவி, தொடர்ந்து மூன்று மணி நேரம் செயல்படும். ரீசார்ஜ் பேட்டரி மூலம் இயங்கக் கூடியது.தொடர்புக்கு: 9994904900.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement