பதிவு செய்த நாள் :
குற்றப்பத்திரிகை !
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்துக்கு எதிராக...
டில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சி.பி.ஐ.,

புதுடில்லி : ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில், டில்லி, சிறப்பு நீதிமன்றத்தில், சி.பி.ஐ., நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், முன்னாள் மத்திய நிதியமைச்சர், ப.சிதம்பரம், அவரது மகன், கார்த்தி உள்ளிட்டோர் மீது, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஏர்செல்,மேக்சிஸ்,வழக்கில், சிதம்பரத்துக்கு, எதிராக, குற்றப்பத்திரிகை,டில்லி ,நீதிமன்றத்தில், தாக்கல், செய்தது, சி.பி.ஐ.,


மத்தியில், மன்மோகன்சிங் தலைமையில் இருந்த, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 2006-ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக இருந்தவர், சிதம்பரம்.அப்போது, ஏர்செல் நிறுவனத்தில், 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய, மலேஷியாவைச் சேர்ந்த, மேக்சிஸ் நிறுவனத்துக்கு, அனுமதி அளிக்கப்பட்டது.

லஞ்சம் :


ஆனால், 600கோடி ரூபாய் முதலீடு வரை மட்டுமே அனுமதியளிக்க, மத்திய நிதியமைச்சகத்துக்கு அதிகாரம் உள்ளது. அதற்கு மேல் உள்ள தொகைக்கு, பொருளாதார விவகாரங்களுக்கான, அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம் தான், அனுமதி அளிக்க வேண்டும்.

இந்த, விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கப்பட்டு, முதலீடு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கு, 'அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங்' என்ற, நிறுவனம் உதவி செய்து உள்ளது. இதற்காக, அந்த நிறுவனத்துக்கு, லஞ்சமாக பெரும் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், சிதம்பரத்தின் மகன், கார்த்தியின் நிறுவனம் என, கூறப்படுகிறது.

ஏர்செல் - மேக்சிஸ் முறைகேட்டில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கப் பிரிவும், முறைகேடாக ஒப்பந்தம் வழங்கிய பிரதான வழக்கை, சி.பி.ஐ.,யும் விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கு தொடர்பாக, கார்த்தி மீது, அமலாக்கத் துறை சார்பில், டில்லி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த குற்றப் பத்திரிகையில், பல இடங்களில், ப.சிதம்பரத்தின் பெயர் இடம் பெற்றிருந்தாலும், அவரை குற்றவாளி யாக, அமலாக்கத்துறை சேர்க்கவில்லை.

ஒப்புதல்:இந்நிலையில், ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக, டில்லி, பாட்டியாலாவில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில்,சிதம்பரம், கார்த்தி ஆகியோர் மீது, சி.பி.ஐ.,குற்றம் சாட்டி உள்ளது.

நீதிபதி ஓ,பி.சைனி முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகை யில், 'மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்வதற்கு, தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சிதம்பரம் ஒப்புதல் வழங்கி உள்ளார்' என, கூறப்பட்டுள்ளது. 'இந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை, ஜூலை, 31ல் நடக்கும்' என,நீதிபதி, ஓ.பி.சைனி தெரிவித்தார்.

Advertisementஆக., 7 வரை தடை:ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு தொடர்பாக, சிதம்பரத்திடம், கடந்த மாதம்,5ம் தேதி, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதே வழக்கில், சி.பி.ஐ., முன் ஆஜரான சிதம்பரத்திடம், அதிகாரிகள், ஆறு மணி நேரம் விசாரித்தனர். விசாரணையின் போது, முறைகேடு குறித்துபல கேள்விகளை, சிதம்பரத்திடம் அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது.

இந்த வழக்கில், தன்னை அமலாக்க துறை கைதுசெய்யக்கூடும் என்பதால், முன் ஜாமின் கோரி,டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், ஜூன், 5ம் தேதி , சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜூலை, 10ம் தேதி வரை, சிதம்பரத்தை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. ஜூலை, 10ல் நடந்த விசாரணையின் போது, சிதம்பரத்தை, ஆக., 7ம் தேதி வரை கைது செய்வதற்கு, தடையை நீட்டித்து,நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுபோல், கார்த்தியை கைது செய்ய, அடுத்த மாதம், ௭ம் தேதி வரை தடையை நீட்டித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சி.பி.ஐ.,க்கு அரசு நெருக்கடி:

சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை குறித்து, 'டுவிட்டரில்' ப.சிதம்பரம் கூறியுள்ள தாவது:என் மீதான ஆதாரமில்லாத, அபத்தமான குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்க, சி.பி.ஐ.,க்கு, மத்திய அரசு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தது. இதனால் தான், என் மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையை, நீதிமன்றத்தில் தைரியமாக எதிர்கொள்வேன். இனி, இது பற்றி எதுவும் பேசமாட்டேன். இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
20-ஜூலை-201820:06:02 IST Report Abuse

balஎன்னிடம் யாராவது குற்றம் செய்துவிட்டாய் என்று சொன்னால் கூனி குறுகிவிடுவேன்...வடிவேலு சொன்னதுபோல் உறுத்தும்...ஆனால் இந்த மாதிரி ஆளுங்களுக்கு ஏன் மனசாட்சி இருப்பதில்லை.

Rate this:
Manian - Chennai,இந்தியா
21-ஜூலை-201820:54:21 IST Report Abuse

Manianகாசை கடவுள் என்று நம்பினால் மன சாட்சிக்கு என்ன வேலை? அக்காவே பாட வேண்டியது இதுதான்- சிதம்பர நாதா சிறை வாசம் தாராய், சேர்த்ததெல்லாம் வக்கீல்கள் மூலம் அழிப்பாய், அழுதே நான் நரகம் போவேன்"...

Rate this:
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
20-ஜூலை-201814:16:10 IST Report Abuse

பஞ்ச்மணிதீர்ப்பு குடுத்துட்டா அப்புறம் ஒன்னுமே இல்லாம சப்புன்னு போயிடுமேன்னு தான் தீர்ப்பை தள்ளி போட்டு இருக்காங்க தீர்ப்பு வந்தப்புறமா நாட்டாம தீர்பை மாத்தி சொல்லுன்னு ஒன்னா நாம கொரல் குடுப்போமுல்லோ

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
20-ஜூலை-201812:20:43 IST Report Abuse

ganapati sbமண்ணின் மைந்தர் நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சர் மன்மோகனோடு சேர்ந்து வர்த்தக அமைச்சராக நன்றாக செயல்பட்ட பசி அயல்நாட்டு சோனியாவின் அமைச்சரவையில் மன்மோகனோடு சேர்ந்த திமுகவினரை பார்த்து தடம் புறண்டுவிட்டாரோ

Rate this:
sundar - chennai,இந்தியா
20-ஜூலை-201815:21:11 IST Report Abuse

sundarநண்பரே நீங்கள் சொல்லும் 1991 - 96 காலங்களில் மாறன் சீனியரோடு சேர்ந்து வலுவான சம்பாத்தியம் ஏற்படுத்தி கொண்டார். சன் டிவி உதயம் மற்றும் பல தொழில்களில் ஈடுபட்டு சொத்துக்கள் சேர பிள்ளையார் சுழி போடப்பட்டதே அப்போது தான்...

Rate this:
sankar - trichy,இந்தியா
20-ஜூலை-201820:40:35 IST Report Abuse

sankarகணபதி கணபதி குற்றத்தை தைரியமா கண்டியுங்க தடவி கொடுக்காதீங்க...

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X