84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு

Added : ஜூலை 20, 2018 | கருத்துகள் (93)
Advertisement
பிரதமர் மோடி,பிரதமர் வெளிநாட்டு பயணம்,அமைச்சர் விகே சிங்,  பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாட்டு சுற்றுப்பயணம், வெளிநாட்டு பயண செலவு, நரேந்திர மோடி,மோடி,Prime Minister Narendra Modi, Minister VK Singh, Prime Minister Narendra Modi,Foreign tour, foreign travel expenditure, Narendra Modi, Modi,

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு ரூ.1,484 கோடி செலவிடப்பட்டிருப்பதாகவும், இதுவரை அவர் 84 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ராஜ்யசபாவில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரதமராக மோடி பதவியேற்ற 2014 ஜூன் 15 முதல் 2018 ஜூன் 10 வரையிலான காலகட்டத்தில், 42 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், 84 நாடுகளுக்கு சென்றுள்ளார். 2015 - 16ம் ஆண்டில் 24 நாடுகள், 2016 - 17ம் ஆண்டில் 18 நாடுகள், 2017 - 18ம் ஆண்டில் 19 நாடுகளுக்கு மோடி சென்றுள்ளார்.

மோடி பயணித்த விமானங்களை பராமரிக்க மொத்தம் ரூ.1,088.42 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணத்தில் பயன்படுத்தப்பட்ட தனியார் விமானங்களுக்கு ரூ.387.26 கோடி செலவிடப்பட்டுள்ளது. அவரது ஹாட்லைன் தொலைதொடர்பு சேவைக்காக ரூ.9.12 கோடி செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
21-ஜூலை-201800:20:31 IST Report Abuse
சுந்தரம் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் நம்பிக்கை போய்விட்டது. இருபது நாட்களுக்கு முன்னர் இதே சட்டத்தில் 355 கோடி செலவு என்றார்கள். இன்று வேறு விதமாக அதே தகவல் சட்டம் சொல்கிறது. எது உண்மை? இதுவும் ஒரு பெட்ரோல் விலை நிர்ணயம் போலத்தான் போல இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
20-ஜூலை-201816:28:17 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam நம்ம மக்கள் மெத்த படித்த அறிவுஜீவிகள் செவ்வாய் கிரகத்திற்கு மங்க்கள்யான் அதுவும் முதல் முயர்சியிலேயே வெற்றிகரமாக் செலுத்திய விஞ்ஞானிகளை பாராட்டக்கூட மனமில்லாமல் 400 கோடி செலவு தேவையா என் கேட்ட வர்கள் தானே. இன்றி எத்தனை ஆயிரம் கோடி இந்தியா பிற நாட்டு விண்கலங்களை விண்ணுக்கு செலுத்தி வருமான் ஈட்டுகின்றது என்பது கூட தெரியாம் வாழும் ஜீவிகள் தானே ஒருவன் 1 ,76 ,000 கோடி ஊழல் , என்றாலும் பரவாயில்லை , ஒரு கான் கிராஸ் நிதியமைச்சர் ஊழல அவர் மனைவி ஊழல் மகன் ஊழல் என் பட்டியல் நீண்டாலும் பரவாயில்லை ஒரு பிரதமரையோ அவரின் கட்சியிலையோ இந்த நிமிடம் வரை யார்மீதும் ஊழல் என குற்றம் சாட்டக்கூட முடிய வில்லை . அவரது பயனம் 1484 கோடி அதுவும் நாங்கு ஆண்டுகளில் அதுவும் ரகசியமாக் ஒரு பயணம் கூட போகவில்லை, சாட்சி வெளிநாடு வாழ் இந்தியர்கள். இதெல்லாம் படித்தவர்களூக்கு புரியும் , தெரிந்த்டும் தெரியாத் அமாதிரி நடிப்பவெர்களுக்கு எப்படி புரிய வைக்க முடியும்- 2019 முடிவு மக்கள் தெரிவிப்பர்.
Rate this:
Share this comment
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
10-நவ-201813:33:30 IST Report Abuse
Sukumaran Sankaran Nairஎங்குமே 'மோடி திரும்பிப் போ' என்று தானே விரட்டுகிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஜூலை-201816:14:53 IST Report Abuse
Pugazh V இந்த மாதம் 24 ஆம் தேதி உகாண்டா செல்கிறார். அடுத்த நாள் ருவாண்டா. இங்கிருந்து கொண்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டாலும் அவரது ஆடம்பரங்களோ உல்லாச சுற்றுலாக்களோ நிற்கப் போவதில்லை. அவரோ அவரது அரசோ கூட விளக்கம் தர வேண்டாம். அவரது கட்சியினரே, படு கேவலமாக ஏதாச்சும் எழுதி , அவர் போகலையா, இவர் போகலையா என்று கூப்பாடு போட்டு ஒன்றுமில்லாம செய்து விடுவார்கள். போவதெல்லாம் பாவாடை, பச்சைக்குல்லா நாடுகள். ஆனால், பேசுவதைப் பாருங்கள். இந்திய கிறித்துவர், இந்திய முஸ்லீம் கல் மீது தான் இந்த பிஜேபி ஆசாமிகளுக்கு வெறுப்பு அயல்நாட்டு கிறித்தவர், முஸ்லிம்களின் காலில் விழாத குறையாக பிச்சை எடுத்துக் கொண்டே இருப்பது, அதை தொலைநோக்கு என்று சொல்லிக் கொள்வது. என்ன ஒரு இரட்டை வேடம், போலிக் தானம். கேவலமாக இருக்கிறது.
Rate this:
Share this comment
arun - ,
20-ஜூலை-201819:17:52 IST Report Abuse
arunநம்ம கட்சி தலைவர்கள் போல ஊழல் கோர்ட்டு திகார் ஜெயில் என்று இருந்தால் நல்லது இல்லையா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X