பொது செய்தி

தமிழ்நாடு

சீரழிக்கும் 'டிவி' சீரியல்கள் தீமைகளை விளக்கும் கல்லூரி மாணவிகள்

Added : ஜூலை 20, 2018 | கருத்துகள் (12)
Advertisement
சீரழிக்கும் 'டிவி' சீரியல்கள் தீமைகளை  விளக்கும் கல்லூரி மாணவிகள்

அருப்புக்கோட்டை, முன்பெல்லாம் உறவினர்கள் வீட்டிற்கு செல்வது, குழந்தைகளுடன் கோயிலுக்கு செல்வது, குடும்பத்துடன் சந்தோஷமாக வீட்டில் பேசிக் கொண்டிருப்பது என எவ்வளவோ பொழுது போக்கு அம்சங்கள் இருந்தன.இவ்வாறான பொழுதுபோக்குகள் நாம் வாழ்வில் எந்தவித எதிர்மறை தாக்கத்தையும், துன்பத்தையும் ஏற்படுத்தவில்லை.மேலும் நமது வாழ்க்கையில் அன்பு, பாசம், குணம், கலாசாரம், அணுகுமுறை, பாரம்பரியம் மாறாமல் இருந்து வந்தது.முந்தைய கால கட்டத்தில் மேடை நாடகங்கள் மூலம் சமுதாய விழிப்புணர்வு ஏற்பட்டது. நவீன தொழில் நுட்பங்கள் வந்தபின் அனைத்துமே இயந்திரதனமாக மாறி விட்டது.நவீன வளர்ச்சியால் மனிதன் தன் வாழ்க்கையை இழந்து விட்டான்.எதுவுமே எளிதாக கிடைத்து விடுகிறபடியால் சுவாரஸ்யம் இல்லாத வாழ்க்கையாக மாறி விட்டது. எந்நேரமும் டென்ஷன் ஏற்படுகிறது. இதை குறைத்து கொள்ள 'டிவி' சீரியல்களில் கவனம் செலுத்தி காலம் கழிக்கின்றனர் சிலர். 24 மணி நேரமும் 'டிவி'யே கதியாக இருப்பவர்களும் உண்டு.சேனல்களில் வரும் தொடர்களும் கூடுதல் டென்ஷனை ஏற்றுவதாகவே உள்ளது. உறவு முறைகளை கெடுப்பது, குடும்பத்திற்குள் பகையை வளர்ப்பது, சதி செய்வது போன்ற தொடர்களாகத்தான் அதிகம் வருகின்றன. இவற்றால் சமுதாயத்திற்கு பயன் இல்லை.வீட்டில் இருக்கும் பெண்கள் இதுபோன்ற தொடர்களை பார்த்து அதற்கு அடிமையாகி விட்டனர். குடும்பங்களில் 'டிவி 'தொடர்களால் குழப்பம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப பிரச்னைகளுக்கு 'டிவி' தொடர்களும் காரணமாக உள்ளன.சிக்கல்களை ஏற்படுத்தும்' டிவி' தொடர்கள் குறித்து அருப்புக் கோட்டை சவுடாம்பிகா இன்ஜி., கல்லுாரி மாணவிகள் என்ன ெசால்கிறார்கள் என்பதையும் கேளுங்களேன்...

மனநிலையை மாற்றுது'டிவி' சீரியல்கள் பொழுதுபோக்கிற்காக மட்டும் அமைய வேண்டுமே தவிர பார்ப்பவர்களின் மனநிலையை மாற்ற கூடாது. சீரியல்களில் வரும் கதாபாத்திரம் போல் ஒருசில பெண்கள் தங்களை சித்தரித்து கொள்கின்றனர். இதனால் பல குடும்பங்களில் பிரச்னையே ஏற்படுகிறது. சீரியல்களில் வருவதை போல் நமது வாழ்க்கையிலும் எடுத்து கொள்ள கூடாது.-தீபிகா, 2 ம் ஆண்டு மாணவி, சி.எஸ்.இ.,தீயவைகளை கற்கின்றனர்இந்தி, தெலுங்கு, கொரியா போன்ற வேறு மொழி சீரியல்களை தமிழில் மொழி பெயர்ந்து காண்பிக்கப்படுகிறது. இதுபோன்ற சீரியல்களில் வரும் தீய சம்பவங்கள் பார்ப்பவர்களை ஈர்க்கிறது. குடி பழக்கம், போதை பொருள் உபயோகித்தலையும் சீரியல்களை பார்த்து கற்று கொள்கின்றனர். பிற மொழி சீரியல்களை பார்ப்பதில் தவறில்லை. அதில் வரும் தீயவைகளை ஒதுக்கி வைத்து விட வேண்டும்.-கோகிலவாணி, 2 ம் ஆண்டு மாணவி, சி.எஸ்.இ.,குழந்தைகளை கவனிப்பதில்லை'டிவி' சீரியல்களை விடாமல் பார்ப்பதால் பெண்கள் தங்கள் குழந்தைகளை கவனிப்பதில்லை. இதனால் அவர்களின் படிப்பு மட்டும் அல்லாமல், வேறு சில தவறுதல்களை செய்ய வைக்கிறது. தற்போது வரும் சீரியல்களில் அதிகப்படியான உறவு முறைகளை தவறாக காட்சி படுத்துகின்றனர். இதனால் சமுதாய பாதிப்பு ஏற்படுகிறது. குடும்ப மற்றும் சமுதாய ஒற்றுமைகளை வலியுறுத்தும் வகையில் யாரும் சீரியல்கள் எடுப்பதில்லை.--அனிதா, 2 ம் ஆண்டு மாணவி, சி.எஸ்.இ.,எதிர்மறை எண்ணங்கள்சீரியல்களை பார்ப்பதால் நம்மை அறியாமலே மனதில் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி விடும். இதனால் குடும்பங்களில் பிரச்னைகளை புதியது புதியாக முளைக்கிறது. சீரியல்கள் நமது நேரத்தை வீணாக்குகிறது. சீரியல்கள் பார்க்கும் மாணவர்களுக்கு படிப்பின் மீது நாட்டம் குறைகிறது. தேவையற்ற சந்தேகங்கள் உருவாகி குடும்பங்களை பிரிக்கிறது.-ஜனனி, 2 ம் ஆண்டு மாணவி, சி.எஸ்.இ.,உறவுமுறைகளுக்கு வேட்டுசினிமா மற்றும் 'டிவி' சீரியல்கள் மக்களை அதிக அளவில் ஈர்க்கின்றன. குறிப்பாக பெண்கள் சீரியல்களுக்கு அடிமைகளாக உள்ளனர். சீரியல்களில் தீமைகளே அதிகம் உள்ளது. உறவு முறைகளுக்கு வேட்டு வைக்கும் சீரியல்களை பார்ப்பதை தவிர்ப்போம்.-- லாவண்யா, 2 ம் ஆண்டு மாணவி, சி.எஸ்.இ., -Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Welcome Back to 1900AD - korkai,இந்தியா
20-ஆக-201820:15:49 IST Report Abuse
Welcome Back to 1900AD when Doordarshan was started during 1980's tele time was morning 5:00 to 10 :00 and evening 4:00 to 10:00.very nice program schedule.nowadays private channels 24 hours non stop.all are automation.
Rate this:
Share this comment
Cancel
manick - chennai,இந்தியா
30-ஜூலை-201813:56:37 IST Report Abuse
manick இது தினமும் parents பண்றாங்க விளக்கு வைக்கும் போது .I told them to avoid at least those time as abuses and bad words , fills the room which is so negative .Actually they are supposed to visit near by temples which we have lot in trivandrum but they never like other than sitting in TV. They resist if asked and invites unnecessary arguments . I want to sue case against IT and broading to allow them negative things which is very dangerous for positive thinking India . Some limit has to be drawn .
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
26-ஜூலை-201812:19:20 IST Report Abuse
ganapati sb முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று தீயவர்களோடு பழகினால் மட்டுமே தீய படங்களை பார்த்தால் மட்டுமே தீய பழக்கங்கள் உருவாகும் ஆனால் இப்போதோ வீட்டில் இருக்கும்போதே தொலைக்காட்சி தொடர்களினால் தீய பழக்கங்கள் உருவாக்கப்படுகின்றன . வெளியே நல்ல நண்பர்களோடு பழகும் பொழுது உருவாகும் நல்லெண்ணங்கள் போல தொலைக்காட்சியிலும் நல்ல நிகழ்ச்சிகளை மட்டுமே பார்த்து சீரழிக்கும் சீரியலை தவிர்க்க வேண்டும் .
Rate this:
Share this comment
manick - chennai,இந்தியா
30-ஜூலை-201814:00:09 IST Report Abuse
manickPost 1990 lot life style makes sick and this is one out of it . Alarming and families are loosing some peace in these negative environment ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X