ராகுலை புகழ்ந்து தள்ளிய சிவசேனா! உறவை முறிக்க பா.ஜ., ஆலோசனை Dinamalar
பதிவு செய்த நாள் :
ராகுலை புகழ்ந்து தள்ளிய சிவசேனா!
உறவை முறிக்க பா.ஜ., ஆலோசனை

புதுடில்லி: கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதை அடுத்து, தன் நீண்ட கால தோழமை கட்சியான சிவசேனாவுடன் உறவை முறிக்க, பா.ஜ., மேலிடம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

ராகுல்,புகழ்ந்து,தள்ளிய,சிவசேனா,உறவை,முறிக்க, பா.ஜ., ஆலோசனை


சமீபத்தில், பார்லிமென்டில், தே.ஜ., அரசுக்கு எதிராக, தெலுங்கு தேசம் தாக்கல் செய்த, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரித்து, காங்., தலைவர் ராகுல் பேசினார்.


அதிர்ச்சி



மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வுடனான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான, 'சாம்னா'வில்,

ராகுலின் பேச்சை வெகுவாக பாராட்டி கட்டுரை எழுதப்பட்டுள்ளது.'நம்பிக்கை இல்லாத் தீர்மான விஷயத்தில், உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில், பிரான்சை போல், பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றார்.


'போட்டியில் தோற்றாலும், உலகமக்களின் இதயங் களை வென்ற குரேஷியாவை போல், ராகுல், நாட்டு மக்களின் இதயங்களில் இடம் பிடித்தார்' என,அந்த கட்டுரையில் கூறப்பட்டு உள்ளது. மேலும், பார்லி மென்டில், அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்த்து ஓட்டு போடும்படி, சிவசேனாவுக்கு, அமித் ஷா வேண்டுகோள் விடுத்திருந்தார்.


அதற்கு சம்மதித்த சிவசேனா, கடைசி நேரத்தில் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தது, பா.ஜ., மேலிடத்தை அதிர்ச்சி அடையச் செய்தது.


இதனால், மஹாராஷ்டிர மாநில, பா.ஜ.,வினர், 'ஜம்மு -காஷ்மீரில்,பி.டி.பி.,யை விட்டு விலகியதை போல், சிவசேனாவுடனான உறவை முறிக்க வேண்டும்' என, பா.ஜ., மேலிடத்தை வலியுறுத்தத் துவங்கி உள்ளனர்.

Advertisement

இது தொடர்பாக, மஹாராஷ்டிர மாநில, பா.ஜ., நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்க, அக்கட்சியின் தேசியத் தலைவர், அமித் ஷா, மும்பை சென்றுள்ளார்.


எதிர்பார்ப்பு



மஹாராஷ்டிராவில் உள்ள, 48 லோக்சபா தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை, மாநில நிர்வாகிகளுடன் கலந்து பேசி, அமித் ஷா திட்டமிடுவார் என தெரிகிறது.
இதற்கிடையே, வரும் லோக்சபா தேர்தலில், சிவசேனா தனித்து போட்டியிட முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதற்கு முன், அதனுடனான உறவை, பா.ஜ., முறித்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankar - Chennai,இந்தியா
23-ஜூலை-201818:06:38 IST Report Abuse

Sankarமோடி யாராலும் வெல்ல முடியாது...அவர் M.G.R போல...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
23-ஜூலை-201816:25:06 IST Report Abuse

Endrum Indianஇவ்வளவு கேவலமாக இருக்கும் சிவசேனாவை இன்னும் தன் பக்கத்தில் வைத்திருப்பது பி.ஜெ.பி.க்கு அழிவைத்தான் கொடுக்கும்

Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
23-ஜூலை-201813:14:19 IST Report Abuse

Jaya Ramஉங்களுக்கு வேற வேலையே கிடையாதுடா, ஏண்டா படேலுக்கு சிலைவைத்தாகி விட்டதா, சிவாஜிக்கு சிலை வைத்தாகிவிட்டதா கொடுத்த வாக்குறுதியினையும் காப்பாற்ற மாட்டிங்க ( கருப்பு பணம் மீட்பு ),சொன்ன சொல்லையும் நிறைவேற்ற மாட்டீங்க உங்களுக்கு ஓட்டு மட்டும் வேணும் இல்லைனா அம்பானியும், அத்தனையும் கோவிச்சுவாங்க அப்படித்தானே

Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
23-ஜூலை-201816:17:45 IST Report Abuse

s.rajagopalanஒழிந்து கொண்டிருக்கும் கட்சி. முழுதும் ஒழிக்கப்பட வேண்டும். ஒரு காலத்தில் மும்பையில் தமிழனை என்ன பாடு படுத்தினார்கள் ? இப்படியே பேசட்டும் . பப்பு இவர்களை சேர்த்துக்கொள்ளும் அளவிற்கு முட்டாளல்ல . இறுதியில் எல்லோராலும் கை விடப்பட்டது நட்டாற்றில் நிற்கப்போகும் கட்சி இது. நடக்கணும்....

Rate this:
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
24-ஜூலை-201808:38:28 IST Report Abuse

Sitaramen Varadarajanநன்றாக சொன்னீர்கள்... நட்டாற்றில் விட்டால் போதாது.... நாசம் ஆகி அழிந்தே போக வேண்டும். 60 ஆண்டுகளுக்கு பிறகு உருப்பட துவங்கி உள்ள இந்தியாவை உடைத்தே சின்னா பின்னப்படுத்தும் கும்பல். இனி எந்த மடயனும் சிறுபான்மை சிறுபான்மை என்று மக்களை ஏமாற்ற முடியாது. ஓட்டு வாங்க முடியாது........

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X