'வீரபாண்டி' கோட்டையில் ஓட்டை... வில்லங்க அதிகாரிகள் சேட்டை!

Added : ஜூலை 24, 2018
Advertisement
மிகவும் பிஸியான ஞாயிறு மாலையில், தோழி ஒருவரின் பிறந்த நாள் பார்ட்டிக்கு செல்ல, சித்ராவும், மித்ராவும் வண்டியில் சென்று கொண்டிருந்தனர்.நொச்சிபாளையம் பிரிவு அருகே, போலீஸ் ஜீப் நிற்பதை கண்ட, மித்ரா, ''இங்கே என்ன பிரச்னை?''என்றாள்.''வேறென்ன மதுக்கடை திறக்க ஏற்பாடு நடக்குதே. அதுக்குத்தான்,'' என்றாள் சித்ரா. ''திறந்தால் போராட்டம் நடக்கும். அப்போது போலீஸ் வந்தால்
'வீரபாண்டி' கோட்டையில் ஓட்டை... வில்லங்க அதிகாரிகள் சேட்டை!

மிகவும் பிஸியான ஞாயிறு மாலையில், தோழி ஒருவரின் பிறந்த நாள் பார்ட்டிக்கு செல்ல, சித்ராவும், மித்ராவும் வண்டியில் சென்று கொண்டிருந்தனர்.

நொச்சிபாளையம் பிரிவு அருகே, போலீஸ் ஜீப் நிற்பதை கண்ட, மித்ரா, ''இங்கே என்ன பிரச்னை?''என்றாள்.''வேறென்ன மதுக்கடை திறக்க ஏற்பாடு நடக்குதே. அதுக்குத்தான்,'' என்றாள் சித்ரா. ''திறந்தால் போராட்டம் நடக்கும். அப்போது போலீஸ் வந்தால் சரி. இப்போ எதுக்கு நிக்கிறாங்களாம்,'' ''இங்கு கடை திறப்பதில் தான் ஊர்ப்பட்ட லோக்கல் பாலிடிக்ஸ் நடக்குதே. 'கடையை திறக்க வைக்க, சி.எம். வரைக்கும் பார்ப்பேன்,' 'சவுத்' பிரமுகர் தீவிரமாக களமிறங்கியிருக்காராம். அதுக்குத்தான், கடை கட்டுற போதே, போலீசார், ரெகுலராக வந்து கண்காணிக்கிறாங்கடி,'' ''இதில, 'இன்ட்ரஸ்ட்' காட்ற போலீசார், இந்த கண்காணிப்பை திருட்டு, வழிப்பறி நடக்காமல் பார்த்து கொள்ள மேற்கொண்டால், 'கிரைம் ரேட்'டாவது குறையுமில்லக்கா. சரி... விடுங்க! பார்த்துக்கலாம்,'' என்றாள், மித்ரா.தென்மேற்கு பருவமழை காற்று இதமாக வீச, இருவரும் மெதுவாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, 'சிசிடிவி' கேமரா விளம்பர ேஹார்டிங்ைக பார்த்த சித்ரா, ''கோவில் அதிகாரி ஆபீசில், 'சிசிடிவி' கேமரா மாட்டியிருக்காங்க தெரியுமா?'' என்றாள்.''அடடே.. பரவாயில்லையே,'' ஆச்சரியப்பட்டாள் மித்ரா.''விஷயத்தை சொல்றேன். கேட்டுட்டு, 'அடடே' போடு. நிர்வாகத்தில் வர வேண்டிய பணத்தை கேட்கப்போன ஒருத்தர்கிட்ட, 'கேமரா பில் செட்டில் பண்ணுங்க,'ன்னு ஸ்டிரிக்டா சொல்லிட்டாங்களாம். அவரும், வேற வழியின்றி, பணத்தை கொடுத்தாராம்,'' ''அக்கா.. இப்டியும் உண்டா? அப்போ, 'கேமரா'க்கு தனியா பில் போட்டு எடுத்துப்பாங்களே. இதென்ன பகல் கொள்ளையா? இருக்குது. இவங்களை அந்த பெருமாள்தான் ரக்ஷிக்கணும்,'' என்று கன்னத்தில் போட்டு கொண்டாள் மித்ரா.அதற்குள் சிக்னல் வரவே, ஒரு நிமிடம் வண்டியை நிறுத்திய சித்ரா, ''ஏன்... மித்து. ரெஜிஸ்டர் ஆபீசில், பகல் கொள்ளை நடக்குதாமே,'' என்றாள்.''ஆமாங்க்கா. பேருதான் நல்ல ஊரு. ஆனால், அங்கிருக்கிற ரெஜிஸ்டர் ஆபீசில் பத்திரம் ரெஜிஸ்டர் பண்ண, அதிகமான பணத்தை, 'டாக்குமென்ட் ரைட்டர்ஸ்' வாங்குறாங்களாம். யாராவது கேட்டா, 'களஆய்வு' இருக்குது. உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம், நாங்க பாத்துக்கிறோம்னு பயமுறுத்தி, பணத்த கறந்திடறாங்களாம்''''இதப்பத்தி, மேலதிகாரிகிட்ட சொன்னா லும், எந்த நடவடிக்கையும் இல்லையாம். பத்திரம் பதிவு பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுதாம்,'' மித்ரா ஆதங்கப்பட்டாள்.''அப்போது.. அந்த ஆபீசில், 'காசு... பணம்... துட்டு... மணி...மணி'ன்னு பாட்டு சத்தம் அடிக்கடி கேட்குதுன்னு சொல்லு,'' என்ற சித்ரா, '' ஏம்பா... பெட்டிக்கடையை 'அலேக்'கா துாக்கிட்டாங்களாம்,''என கேள்வி கேட்டாள்.''எந்த பெட்டிக்கடை? என்ன மேட்டர்?,'' புரியாமல் கேட்டாள் மித்ரா.''அட.. மங்கலத்துக்கு பக்கத்தில, பெட்டிக்கடையில 'குவாட்டர்' விக்கிறாங்க'ன்னு, பேசினோமில்லையா. இதைப்பத்தி, மேலிடத்திலிருந்த போன் வரவும், கோபப்பட்ட போலீஸ், 'பெட்டிக்கடையையே' துாக்கிட்டாங்களாம். ஆனா, வருமானம் போச்சேன்னு, போலீஸ் 'கமுக்கமா' புலம்பறாங்களாம்,'' ''அதுக்கென்ன பண்றது. இப்படியே விட்டா. வீதிக்கு வீதி 'சரக்கு' விக்க ஆரம்பிச்சுருவாங்களே''''அது... உண்மைதான் மித்து. ஆமா... பிளாஸ்டிக் தடை எந்த லெவலில் இருக்கு?'' கேட்டாள் சித்ரா. ''சப்-கலெக்டர் ஆபீஸ், தாலுகா ஆபீஸ்னு, வருவாய்த்துறை ஆபீசுகளில், பிளாஸ்டிக் தடை பண்ணிட்டாங்க. நாமளும் தயாராகணுங்க்கா'' ''பிளாஸ்டிக்கை ஒழிக்கறோம்னு சொன்னா மட்டும் போதாது. சரியான மாற்று பொருளை பயன்படுத்துங்கனு சொல்லணும். அதுக்காக, துணிப்பை இலவசமாக கொடுக்கணும்,'னு கலெக்டர் உத் தரவு போட்டிருக்காரு. இதுக்காக, தொழில் துறையினர், தன்னார்வ அமைப்பினர் கிட்ட, இந்த வேலையை ஒப்படச்சிட்டாராம்டி,'' ''நீங்க சொல்றது உண்மைதாங்க. மாவட்ட நிர்வாகம், 'பிளாஸ்டிக்' ஒழிப்புக்கு தீவிர முயற்சி எடுத்தாலும் கூட, பி.ஆர்.ஓ., ஆபீசுல இருந்து ஒரு 'சப்போர்ட்' இல்லை. நல்ல தகவல்கள் மக்களுக்கு போய் சேருவதே இல்லை. முக்கியமான மீட்டிங் நடந்தாலும், சத்தமில்லாம நடத்தி முடிச்சுடறாங்க,''''மீட்டிங் நடந்த தகவல் கூட வெளியே சொல்றதில்லை. அமைச்சர் மீட்டிங் நடக்கறப்ப, கூட்டம் சேர்க்கறதுல இருக்கற அக்கறை; 'பிளாஸ்டிக்' ஒழிப்பு நடவடிக்கையில இல்லை'னு, அரசு அதிகாரிகளே புகார் வாசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.''ஏண்டி, கலெக்டர், சப் -கலெக்டர் ஆபீசுல துணிப்பை கொடுத்தாங்க. தாலுகா ஆபீசுல என்ன பண்ணுவாங்க, பெரிய துணிக்கடைகளுக்கு போயி, தடை பட்டியலில் உள்ள 'போம்' பைகளை வாங்கிட்டு வந்து, சிலருக்கு கொடுத்து போட்டோ எடுத்து, பதிவு பண்ணிட்டாங்க''''திருப்பூர் நார்த், அவிநாசியில் இப்படியாவது பண்ணினாங்க. சவுத்தில், எதுவும் பண்ணலை. மக்கள் பெரும்பாலும் அங்க போறதே இல்லைங்கறதால, தீவுக்கு அந்தப்பக்கம் இருக்கற மாதிரி, அதிகாரிகளும் சத்தமில்லாம இருந்துட்டாங்க,'' என்றாள் சித்ரா.''முதலில், அதிகாரிங்க மாறணும். அப்புறம்தான், மக்கள் மாறுவாங்க. நீங்க, தீவுன்னு சொன்னதும் வருதுக்கா. 'சவுத்' தன்னோட கோபத்தை குறைக்க, இலங்கை போனவரு, நாலஞ்சு நாளாகியும், இன்னும் வரலியாம்,'' ''சென்னை போயிட்டு அப்படியே, இலங்கை போயிட்டாருன்னு சொன்னாங்களே... அதுவா?'' என்றாள் சித்ரா.''ஆமாங்க்கா. மினிஸ்டர் பதவி கிடைக்கறது சிரமம்னு தெரிஞ்ச பின்னாடி. அட்லீஸ்ட் மா.செ., பதவிய பிடிக்கலாம்னு, தீவிரமா 'சவுத்' காய் நகர்த்திட்டு இருக்காரு. அதுக்காக வேண்டி, கட்சி பத்திரிக்கைக்கு சந்தா கொடுக்க, 40 நிர்வாகிகளோட போயி, சி.எம்., கிட்ட, 'செக்' கொடுத்திருக்காரு'' ''அப்போ, கட்சி ஆபீசில், 'மா.செ., எங்கே? கட்சி விதிப்படி, மா.செ., இல்லாட்டி, மாவட்ட அமைச்சர் இல்லாம வரக்கூடாதுனு தெரியாதா? ஆபீசுல 'செக்' கொடுத்துட்டு போங்கன்னு சி.எம்., ரொம்ப காட்டமா பேசிட்டாராம். அதனால, 'கான்ட்' ஆன, காயப்பட்ட மனசை 'குண'மாக்க, அன்னைக்கு ராத்திரியே இலங்கைக்கு பறந்துட்டாராம்,'' ''இதை சாதகமாக பயன்படுத்திய 'மாஜி, சவுத்தில், 'பூத் கமிட்டி' அமைக்கற கூட்டத்தையும், சத்தமே இல்லாம, நடத்தி, 'ஆனந்தம்' அடைஞ்சாராம். இப்படியே போனா என்னாகும்னு தெரியலைன்னு, கட்சிக்காரங்க புலம்புறாங்க,'' என்றாள்.அப்போது, ரோட்டோரம், வெள்ளைக்கோடு வரைந்து கொண்டிருந்தனர். அதைப்பார்த்த சித்ரா, ''கோழிப்பண்ணை ஊரில், மங்கலம் ரோட்டை விரிவுபடுத்தணும்னு ரொம்ப நாளா சொல்லிட்டிருந்தாங்க. ஒரு வழியா வேலை நடக்குது. ஆனா, ரோட்டுக்காக போட்ட கோடு ஒரு பக்கமும், ரோடு ஒரு பக்கமுமா இருக்குன்னு, பலபேர் புகார் பண்றாங்க,''''இதுக்காக, மூணு தடவ மார்க் பண்ணிட்டு, கடைசியா ஒரு கோடு போட்டு, வேலைய 'ஸ்டார்ட்' பண்ணிட்டாங்க. எது சரின்னு பலரும் குழம்பி போய்ட்டாங்க. இதைப்பத்தி, கேக்காம விடமாட்டோம்னு களத்துல இறங்குன பலரும், திடீர்னு பின்வாங்கிட்டாங்க. இப்ப அதுக்கும் காரணம் தெரியாம இருக்கு. மொத்தத்தில், கோடு சரியா, இல்ல ரோடு சரியாங்கறது யாருக்கும் தெரியல,''என்றாள்.''கோடு போட்டா, ரோடு போடறாங்க,'ன்னு இந்த மாதிரி அதிகாரிங்க, இஷ்டம் போல, செய்றதை வெச்சுதான் மக்கள் சொல்லியிருப்பாங்களோ?'' என்று கூறி சிரித்தாள் மித்ரா.''இந்த ஜி.எஸ்.டி., ரீபண்ட் விஷயத்தில், அதிகாரிகள் மேல செம புகார் பறக்குதாமா?''''அக்கா.. எனக்கு ஒண்ணும் தெரியல. நீங்களே சொல்லீடுங்க,'' ''மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் வணிக வரித்துறையில், கொடுக்கிற ஆவணங்களை அதிகாரிகள், தணிக்கை செஞ்சதற்கு அப்புறம்தான், ரீபண்ட் கொடுக்கணும். அதனால, அதிகாரிங்க, சும்மா பூந்து விளையாடறாங்களாம்,'' ''ரீபண்ட் தொகையில, 2 பர்சென்ட் கேட்குறாங்களாம். கொடுக்கலைன்னா, அது சரியில்ல. இத மாத்திட்டு வாங்கன்னு, 'டார்ச்சர்' பண்றாங்களாம். ஒரு சிலர், சத்தமில்லாம, கொடுத்துட்டு, வாங்கிட்டு போறாங்களாம்,'' என, விளக்கினாள் சித்ரா.''பல லட்சம் ரூபாய் ரீபண்ட் வருவதால், 2 பர்சென்ட் என்பது பெரிய தொகைதானே. அதற்காகத்தான், அதிகாரிகள் ஆசைப்படுகின்றனர்,'' என்றாள் மித்ரா.''யாரை டிரான்ஸ்பர் போட்டாலும், சுவற்றில் அடித்த பந்து மாதிரி, திரும்பி வந்துடறாங்களே, என்ன விஷயம்டி,''என்றாள் சித்ரா.''இந்த போலீஸ் விவகாரமெல்லாம், உங்களுக்குத்தான் தெரியுமே. நீங்களே சொல்லிடுங்க்கா, ப்ளீஸ்,'' ''ரெண்டு, மூணு மாசத்துக்கு முன்னாடி, லிங்கேஸ்வரர் ஊரில் ஒரு அதிகாரி, டிரான்ஸ்பரில், 'மாம்பழம்' ஊருக்கு போனாரு. கோவையை சேர்ந்த ஒரு வி.ஐ.பி.,யை சரிக்கட்டி, பழைய இடத்துக்கே வந்துட்டாரு. இப்ப அதே மாதிரி, கோழிப்பண்ணையூர் அதிகாரியும், மறுபடியும் வந்துட்டாராம்,''''இதுல, என்ன கொடுமைன்னா, டிரான்ஸ்பர் போட்ட, 24 மணி நேரத்தில, மறுபடியும் வந்துட்டாராம். வசூல் சக்ரவர்த்தியான அந்த 'சாமி'க்கு, 'முத்து முத்தா' காய்க்கிற, இடத்தை விட்டு போக மனசே இல்லையாம். அதுக்காக, 20 'ல' ஒரே மூச்சில் செட்டில் பண்ணாராம்,'' என்றாள் சித்ரா.''இப்பெல்லாம், இது சாதாரணமா போயிடுச்சுக்கா. ஏங்க்கா. போனவாரம், ஒரு வருஷமா, ஒரு ஏட்டம்மா, 'செக்போஸ்ட்' டியூட்டியிலே இருக்காங்கன்னு பேசினோமே. அதே மாதிரி, டிராபிக்கில் ஒரு ஏட்டம்மா, எட்டு வருஷமா, ஒரே போஸ்டிங்கில், இருக்காராம். திருப்பூரில், தென்மேற்கு பருவமழை வருதோ இல்லையோ, ஏட்டம்மா காட்டில், 'எப்பவுமே... வைட்டமின் 'ப' மழையாம்'. அவ்வளவு ஏன், மார்க்கெட்டுக்கு போனாக்கூட, காசு தரமாட்டாராம், இந்த தாமரையின் வேறு பேர் கொண்ட ஏட்டம்மா. பெரிய அதிகாரிக்கு இதெல்லாம் தெரியுமான்னு, நமக்கு தெரியல,'' என்றாள் மித்ரா.''நீ சொல்றது சரிதான்டி. இதைக்கேளு. கோல்டன் நகர், கருமாரம்பாளையம், மண்ணரை, இடுவம்பாளையம், வித்யா லயா, வீரபாண்டின்னு... இப்படி பல இடங்களில், லாட்டரி செமையா விக்குதாம். வேலையில்லாம வெட்டியா ஊர் சுத்தறவங்க, வயசானவங்க, இப்படி தேடிப்பிடிச்சு, லாட்டரியை கொடுத்து விற்குமாறு, ஒருவர் சொல்றாராம். இதுதான் அவருக்கு தொழிலாம்,''''இத்தனைக்கு அதே நபர், ஸ்டேஷனை தேடிப்போய், மாமூல் கொடுக்கிறாராம். பல ரும், சிரிச்சுட்டே, வாங் கிட்டு, வழியனுப்ப றாங்களாம்,'' என்றாள் சித்ரா.அப்போது, ரோட்டிலிருந்து, நால் ரோடு பிரியவே, எதில் செல்வது என, சித்ரா யோசிக்கும் வேளையில், தோழியின் தம்பி புல்லட்டில் வரவே, ''டேய்.. தம்பி செந்தில், வீட்டுக்கு எந்த வழியில் போணும்டா?'' என்று கேட்கவே, ''இதோ... இப்படி போங்க. நான் போய், கேக் வாங்கிட்டு வர்றேன்,'' என்று சொல்லவே, அந்தப்பாதையில் இருவரும் பயணித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X