சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை மின் ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் பலி

Updated : ஜூலை 24, 2018 | Added : ஜூலை 24, 2018 | கருத்துகள் (71)
Advertisement
சென்னை மின்சார ரயில் , சைலேந்திரபாபு , ரயில்வே,சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு மின்சார ரயில், ரயில்வே ஐஜி வீரேந்திர குமார் , ரயில் படிக்கட்டு பயணம்,  சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் சாரங்கன், ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு ,   மாணவர்கள் மரணம், 
Chennai Electric train, Chennai Beach to Chengalpattu Electric Rail, Railway IG Virendra Kumar, Chennai Police Additional Commissioner Sarangan, Railway ADGP Sylendra Babu, Railways,

சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயிலில் பயணித்த 4 பேர் அடிபட்டு இறந்தனர். மாம்பலம் கோடம்பாக்கம் இடையே மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. குறைவான ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டதால், ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதில், ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பலர் சென்றனர். இந்நேரத்தில் பரங்கிமலையில் தடுப்புச்சுவரில் அடிபட்டு சிலர் விழுந்தனர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமுற்று குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் கல்லூரி மாணவர் பிரவீன்குமார், பள்ளி மாணவர் பரத், சிவக்குமார், சங்கர் மற்றும் பாரதி ஆகியோரின் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில், சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் சாரங்கன், ரயில்வே ஐஜி வீரேந்திர குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். இது போல் நேற்று மாலை நடந்த மற்றொரு விபத்தில் 2 பேர் பலியாயினர்.


படிக்கட்டு பயணம் வேண்டாம்-ஏடிஜிபி

விபத்து நடந்த இடத்தை ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், விபத்து எப்படி நடந்தது என விசாரணை நடத்திவருகிறோம். தொடர்ந்து விபத்து நடந்ததால், தடுப்பு சுவரை அகற்ற வேண்டும் என கோரியுள்ளோம். பயணிகள், படிக்கட்டில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். இது ஆபத்தானது. ரயில் கிடைக்காவிட்டால், வேறு ரயில், பஸ்சில் செல்லலாம். அதிக பயணிகள் ரயிலில் ஏறியுள்ளனர். பயணிப்பவர்கள் உள்ளே இருந்திருந்தால் உயிரிழப்பு தடுக்கப்பட்டிருக்கும் . படிக்கட்டில் பயணித்ததே உயிரிழப்புக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எக்காரணத்தை கொண்டும் படிக்கட்டில் பயணிக்கக்கூடாது என்றார்.
நிதியுதவி

ரயில் விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனவும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் எனக்கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு. கூடுவாஞ்சேரி. முன்பெல்லாம் காலையிலும் மாலையிலும் அலுவலகம் செல்லுபவர்களுக்கென்று சென்னை பீச் முதல் செங்கல்பட்டு வரை ப்ரத்யேகமாக விரைவு வண்டிகள் விடப்படும். இதனால் தாம்பரம் செங்கல்பட்டு இடையே வாசம் செய்யும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இப்போது சாதாரண வண்டிகள் தான் விடப்படுகின்றன. தாம்பரம் வரை சரியான நேரத்திற்கு சென்றடையும். அதன் பின் எல்லா அதிவிரைவு வண்டிகள் சென்றபின் தான் கிளம்பும். அலுவலக நேரத்தில் பயணியர் வண்டிகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். இதனால் தான் கூட்ட நெரிசல். .ஒன்றும் சொல்வதற்கில்லை.
Rate this:
Share this comment
Cancel
VSK - CARY,யூ.எஸ்.ஏ
24-ஜூலை-201819:11:04 IST Report Abuse
VSK மேலை நாடுகளில் ரயில் கிளம்பும் முன் கதவுகள் மூடியே ஆக வேண்டும் . அதுபோல பெரம்பூரில் இனி பெட்டிகள் தயாரிக்கப்பட வேண்டும் . இது ஒன்றே வழி பேருந்துகளிலும் இது செயல்படுத்தப்பட வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Rajan - singapore,சிங்கப்பூர்
24-ஜூலை-201818:40:12 IST Report Abuse
Rajan ரயிலை நம்பித்தான் நிறைய மக்கள் உள்ளார் , அவர்கள் என்ன விமானத்தில் போகமுடியும் , ரயில்வே டிபார்ட்மென்ட் தான் முழுப்பொறுப்பு . அனைத்து அதிகாரிகளையம் பணிநீக்கம் செய்யவேண்டும்
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
24-ஜூலை-201820:19:52 IST Report Abuse
Cheran Perumalகரெக்ட். தமிழர்களின் கலாச்சார அடிப்படையில் அனைத்து ரயில்பெட்டிகளையும் தீவைத்து எரிக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X