பொது செய்தி

இந்தியா

பாலை விட கோமியத்திற்கு 'கிராக்கி'

Added : ஜூலை 24, 2018 | கருத்துகள் (76)
Advertisement
பசு கோமியம்,பால்,விற்பனை, விவசாயிகள்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பசும்பாலை விட, கோமியத்திற்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.


கூடுதல் விலை

ராஜஸ்தானில், பசு வளர்க்கும் விவசாயிகள், பாலை லிட்டருக்கு 22 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர். தொடர்ந்து , கிர் மற்றும் தர்பார்கார் போன்ற உயர் ரக பசுக்களை வளர்ப்போர், அதன் கோமியத்தை விற்பனை செய்து வருகின்றனர். அது லிட்டருக்கு 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
உதய்ப்பூரில் உள்ள மஹாராணா பிரதாப் விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகம், இயற்கை விவசாய திட்டத்திற்காக மாதந்தோறும் 300 முதல் 500 லிட்டர் பசு கோமியத்தை வாங்கி வருகிறது. இதற்காக மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்கிறது.


இரவில் விழித்திருந்து

இது தொடர்பாக கைலாஷ் குஜ்ஜார் என்பவர் கூறுகையில், பசு கோமியத்தை விற்க துவங்கிய பிறகு, எனது வருமானம் 30 சதவீதம் அதிகரித்து உள்ளது. ரசாயன உரங்களுக்கு மாற்றாக, பசு கோமியம் இயற்கை உரமாக பயன்படுகிறது. மருத்துவ காரணங்களுக்காகவும், மத சடங்குகளுக்கும் பசு கோமியத்தை பயன்படுத்தி வருகின்றனர். பசு கோமியம் வீணாகி விடக்கூடாது என்பதற்காக இரவு முழுதும் விழித்திருந்து அதனை பிடித்து வருகிறோம். பசுவை தாய் போல் கருதுகிறோம். இதனால், இரவில் விழித்திருப்பது குறித்து கவலைப்படுவதில்லை என்றார்.

ஜெய்ப்பூரை சேர்ந்த பால் வியாபாரி ஓம் பிரகாஷ் மினா கூறுகையில், ஒரு லிட்டர் பசு கோமியத்தை லிட்டருக்கு 30 ரூபாய் முதல் வரை 50 ரூபாய் வரை விற்பனை செய்கிறேன். இயற்கை விவசாயிகளிடம், இதற்கு அதிக வரவேற்பு உள்ளது. பயிர்கள், பூச்சி தாக்குதலில் இருந்து அகற்ற பயன்படும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nancy - London,யுனைடெட் கிங்டம்
24-ஜூலை-201819:28:27 IST Report Abuse
Nancy மூட நம்பிக்கையில் நாம் மூழ்கியே விட்டொம் ??
Rate this:
Share this comment
Cancel
Ramesh Babu - India,இந்தியா
24-ஜூலை-201819:20:09 IST Report Abuse
Ramesh Babu இந்த கருத்தை படிப்பீர்களா தெரியவில்லை, வேறு பக்கத்துக்கு இன்னும் சற்று நேரத்தில் சென்று விடும்....Mr Mani , டெல்லி உங்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்பது நோக்கமல்ல. வேதத்தை நான் இழுக்கவில்லை. அவர் வேதத்தை மொழி பெயர்க்க மாட்டார்கள். அப்படி செய்தால் அழிந்து விடும் என்று குறிப்பிட்டார். அதற்காகவே நான் பதிவிட்டேன். நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்....வெளிநாட்டு மதத்தை ஏற்று கொண்ட ஒருவர், ந ப்ரதிமா அஸ்தி என்ற வேத வாக்கியத்திற்கு எப்படி ட்விஸ்ட் செய்து பெரிய வேத பண்டிதர் போல பொருள் தந்தார் தெரியுமா. இறைவன் சிலையாக இல்லை என்பது நேரடி அர்த்தம். ஆனால், ஆகம விதிப்படி முறையாக பூஜை செய்து வந்தால், தெய்வ சக்தி அந்த விக்ரகத்தில் இறங்கும் என்பது தான் சரியான விளக்கம். சும்மா சிலையை வைத்து கொண்டால் பயனில்லை என்பது இன்னும் ஆழமான கருத்து. அப்படி சிலையாக இல்லை என்பது தான் உண்மை எனில், அபிஷேக ப்ரியோ சிவ, அலங்கார ப்ரியோ விஷ்ணு என்று வேதத்தில் உள்ளதை யாரும் அவருக்கு சுட்டி காட்டவில்லை. (இப்போது வெளிநாட்டில் சென்று ஒளிந்து கொண்டார்) ஏனெனில், அவர்களுக்கே தெரியும் யாருக்கும் விளக்கம் கூற தெரியாது என்று. இங்கொன்றும், அங்கொன்றும் ஒரு வாக்கியத்தை மனப்பாடம் செய்து மட்டம் தட்டுவதற்கு வேதம் ஒன்றும் கதை புஸ்தகம் அல்ல. அதுவே சத்தியம். இப்படி பிற மதத்தவர்கள் நம் வேதத்தை இஷ்டப்படி வளைக்கிறார்கள், அதற்கு எதிர் கருத்து செய்து அவர்கள் வாயை அடைப்பதில் என்ன தவறு. நாமே நம் வீட்டை சரியாக புரிந்து கொள்ள வில்லை எனில், இன்னொருத்துவன் வந்து ஏளனமாக தான் பேசுவான். எதிர்த்து பேச முடியாது என்பதும் அவனுக்கு தெரியும். இப்படியே போனால், இருக்கும் ஒரு நாட்டையும் நாம் இழக்க வேண்டியது தான். தினமலர் தன் ஆன்மீக மலரில் பெருந்தன்மையாக சில பக்கங்களை பிற மதங்களுக்கு ஒதுக்குறது. அவர்கள் ஒரே ஒரு பத்தி நம் கோவில்கள், மகான்களை பற்றி அவர்களுடைய மத புத்தகங்களில் பிரசுரிப்பார்களா? ஒரு நாளும் நடக்காது. இது என்றும் ஓயாத ஒரு கருத்து போர்.
Rate this:
Share this comment
jothi - ,
24-ஜூலை-201820:22:38 IST Report Abuse
jothiதமிழகத்தில் இந்த அளவு தேச பக்தியும், சனாதன மார்க்க உணர்வும் பொங்கிடச் செய்ததில் தினமலருக்கு பெரிய பங்குண்டு...மிக்க நன்றி......
Rate this:
Share this comment
Cancel
24-ஜூலை-201818:21:53 IST Report Abuse
tamil priyan ஆவின் பூத்துகளில் இதனையும் விற்கலாமே...பாக்கெட்டை மாற்றி விடக்கூடாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X