குத்து மதிப்பாக உயர்த்தப்பட்டது சொத்து மதிப்பு... கோடிகளை அள்ள நடக்குது தப்பு!| Dinamalar

குத்து மதிப்பாக உயர்த்தப்பட்டது சொத்து மதிப்பு... கோடிகளை அள்ள நடக்குது தப்பு!

Added : ஜூலை 24, 2018
Share
அதிகாலையின் குளிர் குறைந்து, மெது வெப்பத்தோடு இருந்தது தட்பவெப்பநிலை; பந்தயச்சாலை நடைபாதை, வழக்கத்துக்கு மாறாக 'பளிச்' என்று இருந்தது; முதல் சுற்று 'வாக்கிங்'கை ஆரம்பித்ததும் மித்ரா தான் கேட்டாள்...''என்னக்கா...குப்பை, கூளம் எதுவுமில்லாம சுத்தமா இருக்கு... யாராவது வி.ஐ.பி., வர்றாங்களா?''''அதான், ஞாயித்துக்கிழமையன்னிக்கு, மினிஸ்டர் இங்க 'ரவுண்ட்ஸ்'
குத்து மதிப்பாக உயர்த்தப்பட்டது சொத்து மதிப்பு... கோடிகளை அள்ள நடக்குது தப்பு!

அதிகாலையின் குளிர் குறைந்து, மெது வெப்பத்தோடு இருந்தது தட்பவெப்பநிலை; பந்தயச்சாலை நடைபாதை, வழக்கத்துக்கு மாறாக 'பளிச்' என்று இருந்தது; முதல் சுற்று 'வாக்கிங்'கை ஆரம்பித்ததும் மித்ரா தான் கேட்டாள்...''என்னக்கா...குப்பை, கூளம் எதுவுமில்லாம சுத்தமா இருக்கு... யாராவது வி.ஐ.பி., வர்றாங்களா?''''அதான், ஞாயித்துக்கிழமையன்னிக்கு, மினிஸ்டர் இங்க 'ரவுண்ட்ஸ்' வந்தாரே...அப்போ, 'க்ளீன்' பண்ணுனதா இருக்கும்... இந்த ரேஸ்கோர்ஸ் ஏரியாவுல மட்டும் 83 கோடி ரூபாய்க்கு 'டெவலப்' பண்ணப் போறாங்களாமே!'' என்றாள் சித்ரா.''என்ன 'டெவலப்' பண்ணுனாலும், 83 கோடிங்கிறது, ரொம்பவே 'டூ மச்'சா தெரியுது...நம்ம ஊரு இருக்குற நிலைமையில, ஒரே ஏரியாவுல இத்தனை கோடியைக் கொட்டுறாங்களேன்னு, மக்களே முணுமுணுக்குறாங்க; அதேபோல, பெரியகுளம், வாலாங்குளத்துல மட்டும் 250 கோடி ரூபாய்க்கு 'இம்ப்ரூவ்' பண்றதாச் சொல்றதும், ரொம்பவே 'கான்ட்ரவர்சி'யாயிருக்கு. பழைய ஜேஎன்என்யுஆர்எம் ஸ்கீம்ல, எட்டு குளங்களுக்கே 125 கோடி ரூபாயில தான் திட்டமே போட்டாங்க'' என்றாள் மித்ரா.''அதைத்தான் 'செ.ம' இருந்தப்போ, 200 கோடியா அதிகப்படுத்துனாங்க...இப்போ, அதே குளங்கள்ல 400 கோடிக்கு மேல, செலவழிச்சு மேம்படுத்தப்போறதா சொல்றாங்க. ஆனா, இந்த குளங்களுக்கு தண்ணி கொடுக்குற நொய்யல் நதி மீட்புக்கு, வெறும் 45 கோடி ரூபா தான் இந்த கவர்மென்ட் ஒதுக்கிருக்கு...இது என்ன கணக்கு வழக்குன்னே புரியலை'' என்றாள் சித்ரா.''இப்பிடியெல்லாம் சர்ச்சை கிளம்பும்னுதான், 352 கோடி ரூபாய்க்கு, குளங்கள் மேம்பாட்டுக்குக் கொடுத்த திட்ட அறிக்கைக்கு, இன்னமும் நிர்வாக ஒப்புதல் தராம நிறுத்தி வச்சிருக்கிறதா கேள்விப்பட்டேன்'' என்றாள் மித்ரா.நடைபாதைக்கு வெளியே உள்ள சாலையில், சிலர் சைக்கிள் ஓட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்ததும் சித்ரா கேட்டாள்...''மித்து...'ஓபோ' ஓடிப்போனதால, 'மொபிசி'ன்னு ஒரு சைனா சைக்கிள் கம்பெனியைப் பிடிச்சிட்டு வந்திருக்காங்களாமே... பேருக்கேத்தது மாதிரி, இந்த சைக்கிளாவது 'பிசி'யா ஓடுமா?''''இந்த கம்பெனிக்காரங்க, புனேயிலயும், இந்துார்லயும் 'சக்சஸ்' பண்ணிட்டு தான் இங்க வந்திருக்காங்களாம்''''கார்ப்பரேஷன், போலீஸ் ஒத்துழைச்சா 'சக்சஸ்' பண்ணிடலாம்; ஆனா, காசு கிடைக்காத எந்த வேலையிலயும் நம்ம ஆபீசருங்க 'இன்ட்ரஸ்ட்' காமிக்க மாட்டாங்களே''''ஆமாக்கா...சிட்டியை விட, ரூரல் போலீஸ் நிலைமை ரொம்ப மோசம்... பல ஸ்டேஷன்கள்ல, வசூலைத்தவிர வேற எந்த வேலையும் நடக்குறதில்லை!''''இப்பிடி பொத்தாம்பொதுவா சொன்னா எப்பிடி...ஏதாவது புள்ளி விபரம் வச்சிருக்கியா?''''ஓ...இருக்கே...துடியலுார் போலீஸ் ஸ்டேஷன்ல மட்டும், 1192 கேஸ்கள் 'பெண்டிங்'ல இருக்கு; 292 பெட்டிஷன்ஸ் விசாரிக்காம கிடக்குது; 86 வாரன்ட், ஸ்டேஷன்ல துாங்குது...இதெல்லாம் அந்த ஸ்டேஷன்ல நடந்த 'இன்ஸ்பெக்ஷன்'ல எடுத்த புள்ளி விபரம். இந்த 'டேட்டா' போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?'' என்று ராகம் பாடினாள் மித்ரா.''அந்த புள்ளி விபரம் தான உனக்குத்தெரியும்; அந்த ஸ்டேஷன்ல, 80 பேரு இருக்கணும்; இப்போ இருக்குறது வெறும் 16 பேரு தான்; மொத்தம் 27 பேரு இருந்ததுல, 11 பேரை தடாகத்துக்கு மாத்திட்டாங்க தெரியுமா?'' என்று கேட்டாள் சித்ரா.''அந்த ஸ்டேஷன்ல என்ன வேலை நடக்குதோ இல்லியோ, கட்டப் பஞ்சாயத்து மட்டும் கரெக்டா நடக்குது'' என்றாள் மித்ரா.''அங்க மட்டுமா...டிஸ்ட்ரிக்ட்ல 'க்ரைம்' பாக்குற இடத்துலயும், இதே கட்டப் பஞ்சாயத்து தான் நடக்குது; அதுலயும், 'பாப் கட்டிங்' ஆபீசரம்மாவைப் பத்தி, ஏகப்பட்ட 'கம்ப்ளைன்ட்' சொல்றாங்க. வழக்கமா, 'கட்டிங்' வாங்குறவுங்க, ஏதாவது ஒரு பக்கம் தான் காசு வாங்குவாங்க...ஆனா, இவுங்க ரெண்டு பக்கமும் காசு வாங்கிட்டு, அவுங்க இஷ்டத்துக்கு கேசு எழுதுவாங்களாம்'' என்றாள் சித்ரா.''ஊட்டியில இருந்து வந்தாங்களே...அவுங்களா?'' என்று ஆச்சரியமாய்க் கேட்டாள் மித்ரா.''அவுங்களே தான்...லேட்டஸ்டா, ஒரு பேங்க் மோசடி கேஸ்ல கூட, 'அக்யூஸ்ட்'கிட்டயே பணத்தை வாங்கிக்கிட்டு, கேசையே 'உல்ட்டா'வா மாத்திட்டாங்களாம். அவுங்களுக்கு கரைவேட்டிகள் நட்பு, ரொம்பவே அதிகமாம்; அதனால தான், அவுங்க மேல என்ன புகார் வந்தாலும், பெரிய ஆபீசர்களால ஒண்ணும் செய்ய முடியுறதில்லையாம்'' என்றாள் சித்ரா.''நான் அப்பவே சொன்னனே...ரூரல் போலீஸ்ல ஆளுங்கட்சி தலையீடு அதிகமாயிட்டே இருக்குன்னு...ரூரல்ல ஒரு ஸ்டேஷன்ல, ஏதோ ஒரு விஷயமா ஸ்டேஷனுக்கு வந்த ஆளுங்கட்சி பிரமுகர் ஒருத்தரு, இன்ஸ்பெக்டர் பயன்படுத்துற 'டாய்லெட்'டுக்குப் போயிருக்காரு...அங்க ஏன் போனீங்கன்னு கேட்டதுக்கு, அந்த போலீசை துாக்கி அடிச்சிட்டாங்களாம்'' என்றாள் மித்ரா.''ரூரல், ஆளுங்கட்சின்னு சொன்னதும் எனக்கு மேட்டுப்பாளையம் மேட்டர் ஞாபகம் வந்துச்சு...அங்க 100 கோடி ரூபாய்க்கு, 'யுஜிடி' வேலை ஆரம்பிச்சிருக்காங்களே...'இப்பதான் கவுன்சில் இல்லியே; அதனால, 33 கவுன்சிலர்களுக்கு கொடுக்க வேண்டிய கமிஷனை எங்களுக்குப் பிரிச்சுக்கொடுங்க'ன்னு, ஆளுங்கட்சி வார்டு நிர்வாகிகள் சில பேரு, போர்க்கொடி துாக்கிருக்காங்களாம்'' என்றாள் சித்ரா.''வேலை எடுத்தது யாரோட கம்பெனின்னு தெரியாம கேட்ருப்பாங்க...அதுக்கெல்லாம் சான்சே இல்லை!'' என்று சிரித்தாள் மித்ரா.எதிரில் நடந்து சென்ற சிலர், 'ஏர்போர்ட் எக்ஸ்பேன்ஷன்' பற்றி எதையோ பேசியபடி கடந்தனர்.''மித்து...ஏர்போர்ட் எக்ஸ்பேன்ஷனுக்கு, 'கைடுலைன் வேல்யூ'வை விட, மூணு மடங்கு அதிகமா 'ரேட்' கொடுக்குறதால, எல்லாருமே 'லேண்ட்' தர ஒத்துக்கிட்டாங்களாமே'' என்றாள் சித்ரா.''ஆமாக்கா...அவிநாசி ரோடு பக்கமிருக்குற 'லேண்ட்'களுக்கு, சதுர அடிக்கு 900 ரூபாயும், கட்டடங்களுக்கு சதுர அடிக்கு, 1500 ரூபாயும் கொடுக்குறாங்க; இதை பாத்துட்டு, ஆளுங்கட்சிக்கு நெருக்கமான ஒருத்தரு, ஒரு திருகல் வேலை பண்ணிருக்காராம்; இருகூர் பக்கத்துல அவருக்குச் சொந்தமா மூணு ஏக்கர் இருக்காம்; வெறும் 57 ரூபா 'கைடுலைன் வேல்யூ' இருந்த அந்த இடத்துல, ஒரு அஞ்சு சென்ட் இடத்தை, 900 ரூபான்னு 'கைடுலைன் வேல்யூ' போட்டு வித்துட்டாராம்'' என்றாள் மித்ரா.''அதெப்பிடி 'நோட்டீஸ்' கொடுத்த இடத்தை ரிஜிஸ்டர் பண்ண முடியும்?'' என்று குறுக்குக் கேள்வி கேட்டாள் சித்ரா.''ஏதோ தப்பு நடந்திருக்கு...இப்போ, மீதமிருக்குற இடம் முழுசுக்கும், 16 மடங்கு அதிகமா, அதாவது சதுர அடிக்கு 900 ரூபான்னு 'கைடுலைன் வேல்யூ' கணக்கு பண்ணி, மூணு மடங்கு அதிகமா இழப்பீடு தர முயற்சி நடக்குதாம்'' என்றாள் மித்ரா.''நிலத்துக்கு இழப்பீடு பத்தி பேசுற...கருமத்தம்பட்டியில சீக்கிரமே பல உயிர்களுக்கு அரசாங்கம் இழப்பீடு தரணும் போலிருக்கு'' என்று நிறுத்தினாள் சித்ரா.''ஏன்க்கா இப்பிடி பீதியைக்கிளப்புற?'' என்று கேட்டாள் மித்ரா.''விஷயத்தைக் கேளு...அங்க தட்டாங்குட்டைங்குற ஏரியாவுல மட்டும் தான், டாஸ்மாக் மதுக்கடை இப்போ இருக்காம்; ஆனா, 126 இடங்கள்ல, 'செல்லிங் பாயின்ட்' இருக்குதாம். அதுலயும் 'டூப்ளிகேட்' சரக்கு நிறையா விக்கிறாங்களாம். மது பானங்கள்ல, 42.8 பர்சன்டேஜ் தான் ஆல்கஹால் இருக்கணுமாம்; ஆனா, அங்க விக்கிற சரக்குகள்ல 50 பர்சன்டேஜ்க்கு மேல இருக்குறதா, ஒரு அமைப்பைச் சேர்ந்தவுங்க உறுதிப்படுத்திருக்காங்க; அதனால தான் இந்த பயமே!'' என்றாள் சித்ரா.''நியாயமான பயம்தான்...சம்பாதிக்கிறவுங்களுக்கு சாமி பயமும் இருக்காதோ...மருதமலையில, கீழே, மேல இருக்குற டிக்கெட் கவுன்டர்கள், பார்க்கிங் இடத்துல இருக்குற எல்லா கேமராவையும் 'பங்ஷன்' ஆகாம புடுங்கி விட்டுட்டாங்களாம். ஏன்னா, கொடுக்குற டிக்கெட்களையும், பார்க்கிங் டோக்கன்களையும் திரும்பத் திரும்ப வாங்கிக் கொடுத்து, காசு பாக்குறாங்களாம்; அதை யாரும் பாத்துறக் கூடாதுன்னு கேமராவை 'கட்' பண்ணிருக்காங்க'' என்றாள் மித்ரா.'நம்ம மினிஸ்டர், குளங்களைச் சுத்திப் பாக்க, 'பைக்'ல பின்னால உட்கார்ந்துட்டும், 'பைக்' ஓட்டிட்டும் போனதை, மொபைல் கேமராவுல பிடிச்சு, 'இந்தக் காலத்துல இப்பிடி ஒரு மினிஸ்டரா'ன்னு, சோஷியல் மீடியாவுல பல பேரு 'கமென்ட்' போட்ருக்காங்க'' என்றாள் சித்ரா.''அவரே 'ஹெல்மெட்' போடாம போனது தப்பில்லையான்னு கேட்ருக்காங்களே...அதைப் பார்க்கலையா?'' என்றாள் மித்ரா.சூப் கடையைப் பார்த்ததும், நடைக்கும், பேச்சுக்கும் இருவரும் 'பிரேக்' போட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X