சபரிமலையில் பெண்கள்: மசூதிக்கும் பொருந்துமா?: சுப்ரீம் கோர்ட்

Added : ஜூலை 24, 2018 | கருத்துகள் (115)
Advertisement
சபரிமலை பெண்கள், மசூதி, சுப்ரீம் கோர்ட், நீதிபதி நாரிமன்,  சபரிமலை தேவசம்போர்டு, வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, சபரிமலையில் பெண்கள் நுழைய தடை , இந்திய இளைஞர் வழக்கறிஞர்கள் சங்கம் , 
Sabarimala women, mosque, Supreme Court, Justice Nariman, Sabarimala Devasamboaded, lawyer Abhishek Singhvi, Women are prohibited to enter Sabarimala,, Indian Youth Lawyers Association,

புதுடில்லி: சபரிமலையில் பெண்கள் நுழைய தடை உள்ளது போன்றது தான், மசூதிகளில் பெண்களுக்கு உள்ள தடை என சுப்ரீம் கோர்ட் நீதிபதி நாரிமன் கூறினார்.
'சபரிமலை கோவிலுக்குள், அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' எனக் கோரி, இந்திய இளைஞர் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மகளிர் அமைப்பினர், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் நடந்தது.
சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என தேவசம்போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டது.


நீதிபதி கேள்வி:


இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேவசம்போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடுகையில், இந்தியாவில் ஏராளமான அய்யப்பன் கோயில்கள் உள்ளன. அங்கு பெண்கள் செல்ல அனுமதி உள்ளது என்றார். இந்தியாவில், மசூதிகளுக்குள் நுழைய பெண்கள் அனுமதிக்கப்படுவது கிடையாது எனவும் கூறினார்.
அப்போது நீதிபதி நாரிமன் கூறுகையில், அரசியல் சாசனம் ஒரு திசைகாட்டி. இதுஅனைத்து நம்பிக்கைகளுக்கும் பொருந்தும். சபரிமலையைப் போல, பெண்கள் மசூதிக்குள் நுழையும் விவகாரமும் இதே வகையில் தான் வரும் என்பதை ஒத்து கொள்கிறேன் எனக்கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (115)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
25-ஜூலை-201810:30:10 IST Report Abuse
Indhuindian அப்படியே கத்தோலிக்கர்கள் விவாகரத்து செய்யும் உரிமையையும் கொடுங்கள். கத்தோலிக்க ஆணோ பெண்ணோ அவர்களும் சட்டத்தின் முன் சமம் தானே அவர்களுக்கு ஏன் இந்த உரிமை மறுக்கப்படுகிறது. அதே போல்தான் பார்சி பெண்களின் சொத்துரிமையும். அவர்கள் மதம் மாறி திருமணம் செய்துகொண்டால் ஏன் சொத்து மறுக்கப்படுகிறது. இதற்க்கான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இப்படியே அந்த அந்த மதங்களின் பாரம்பரியத்தையும், நம்பிக்கையையும் சீர்குலைத்துவிட்டால் எல்லோரும் சமம் என்று ஆகிவிடும். அப்படியே இந்து கோயில்களில் யார் வேண்டுமானாலும் -மற்ற மதத்தை சேர்ந்தவர்களும் செல்லலாம் என்று சட்டம் போட்டு விடுங்கள் அப்புறம் மதம் என்ன நம்பிக்கை என்ன
Rate this:
Share this comment
Cancel
sankar - trichy,இந்தியா
24-ஜூலை-201821:06:54 IST Report Abuse
sankar பள்ளி வாசலுக்கு என்ன வேணா வைசிச்சுக்கோ . அய்யப்பன் ஒரு பிரம்மச்சாரி . அங்க பெண்களுக்கு அனுமதி கிடையாது . பீரியோட்ஸ் நின்றவர்களும் குழந்தைகளும் செல்ல லாம் . இது இந்து வழிபாடு முறை . சட்டம் படித்தால் தான் வாதாட வேண்டும் என்று நடை முறையை மாற்றி யார் வேண்டுமானாலும் வாதாடலாம் என்று கொண்டு வரலாமா ஏன் என்றால் எங்களுக்கு வக்கீல் பீசு மிச்சமாகும் . தீர்ப்பு செல்ல நீதிபதி தான் வேண்டும் அது கோர்ட்டுக்குத்தான் வர வேண்டும் என்பதல்ல மரத்தடியில் கூட சொல்லலாம் என்று கொண்டு வருவார்களா ??? நீதி வழங்க படிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்று கொண்டு வருவார்களா . வக்கீலாகித் தான் நீதிபதி ஆக வேண்டும் என்பது தேவை இல்லை என்று கொண்டு வரலாமே தீர்ப்பு வழங்க சட்டம் தெரிய வேண்டும் அவசியம் இல்லை . எல்லோருக்கும் தீர்ப்பு வழங்க உரிமை வேண்டும் என்று கொண்டு வரலாமே நீதிபதிகளே யோசியுங்க
Rate this:
Share this comment
Cancel
Vinoth - Hyderabad,இந்தியா
24-ஜூலை-201820:50:42 IST Report Abuse
Vinoth நம்பிக்கை மற்றும் ஆச்சாரங்கள் அனைத்தும் வழி வழியாக கடைபிடிக்கப்படுபவை. தலைமுறைகள் மாறும்போது இவைகளில் நிறைய மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கும். எதிர் காலத்தில், தானாகவே பெண்கள் அனுமதிக்கப்படும் நிலை கூட வரலாம். அதிக பட்சம் பெண்களும், சபரிமலை செல்லவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் விதிமுறைகளை கடைபிடிக்கத்தான் விரும்புவார்கள். இப்போது கடைபிடிக்கப்படும் நம்பிக்கையை அடாவடித்தனமாக தகர்க்க முயல்பவர்களது நோக்கம் நிச்சயமாக பெண் சம உரிமை கோட்பாடு கிடையாது. கலாச்சாரத்தை நசுக்கவேண்டும் என்ற குறுகிய நயவஞ்சகமான திட்டம் தான் இதன் பின்னணியில் உள்ளது. அதை விட்டால், இவர்களுக்கு என்ன அக்கறை?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X