பொது செய்தி

இந்தியா

பாவ மன்னிப்பு அம்பலமானதால் பெண் தற்கொலை

Updated : ஜூலை 24, 2018 | Added : ஜூலை 24, 2018 | கருத்துகள் (114)
Share
Advertisement
பத்தினம் திட்டா: கேரளாவில், மூன்று ஆண்டுகளுக்கு முன், தற்கொலை செய்து கொண்ட பெண் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண், பாதிரியார் ஒருவரிடம் பெற்ற பாவ மன்னிப்பு அம்பலமானதால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.அடுத்தடுத்து புகார் சம்பங்கள்@@subboxhd@@கேரளாவில், பாவ மன்னிப்பு பெற்ற பெண்ணை ஐந்து பாதிரியார்கள் கற்பழிப்பு செய்த புகார்;
கேரளா, பெண், பத்தினம்திட்டா, பாவ மன்னிப்பு, சர்ச், பாதிரியார்

பத்தினம் திட்டா: கேரளாவில், மூன்று ஆண்டுகளுக்கு முன், தற்கொலை செய்து கொண்ட பெண் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண், பாதிரியார் ஒருவரிடம் பெற்ற பாவ மன்னிப்பு அம்பலமானதால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


அடுத்தடுத்து புகார் சம்பங்கள்

கேரளாவில், பாவ மன்னிப்பு பெற்ற பெண்ணை ஐந்து பாதிரியார்கள் கற்பழிப்பு செய்த புகார்; கன்னியாஸ்திரியை பிஷப் ஒருவர் 14 முறை கற்பழித்தது உள்ளிட்ட அதிர்ச்சி சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில் புதிய விவகாரம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த பெண் லில்லி. இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். தற்போது லில்லியின் சகோதரி லைலாமா ஜார்ஜ் என்பவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:


பாதிரியாரின் அடாத செயல்

அய்ரூர் செயின்ட் ஜான் சர்ச்சில் பணியாற்றும் பாதிரியார் ஒருவரிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன் என் சகோதரி பாவ மன்னிப்பு கோரினார். அவர் கல்லூரியில் படித்த போது ஏற்பட்ட தவறு குறித்த பாவ மன்னிப்பு அது. அந்த தகவலை மற்றொரு பெண்ணிடம் அந்த பாதிரியார் கூறிவிட்டார். அந்த பெண்ணோ பலர் முன்னிலையில் என் சகோதரி குறித்த ரகசியத்தை போட்டு உடைத்து விட்டார்.

இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு என் சகோதரி தற்கொலை செய்து கொண்டார். அந்த பாதிரியாருக்கும், என் சகோதரியின் கணவருக்கும் முன் விரோதம் உண்டு. இதன் காரணமாகவே, அந்த பாதிரியார் அப்படி செயல்பட்டுள்ளார். இப்பிரச்னையை நாங்கள் விடுவதாக இல்லை. போலீசில் புகார் அளிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (114)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
28-ஜூலை-201804:59:58 IST Report Abuse
jagan கிறிஸ்து /இசுலாத்தில் தான் இந்த பாவ மன்னிப்பு என்று பிளாக் மெயில் செய்யும் உரிமை பூசாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது
Rate this:
Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஜூலை-201810:49:15 IST Report Abuse
Malimar Nagoreமடையன் மாதிரி உளரக் கூடாது....
Rate this:
Cancel
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
28-ஜூலை-201804:03:15 IST Report Abuse
Mahesh இந்த 'பாவ மன்னிப்பு' ஒரு முட்டாள்தனமானது ஏனெனில் அது அடுத்த மனிதரிடம் செய்வது.... பாவ மன்னிப்பு கோர வேண்டியது கடவுளிடம்...
Rate this:
Jeyakumar Jeyakumar - Madurai,இந்தியா
30-ஜூலை-201813:36:13 IST Report Abuse
Jeyakumar Jeyakumarகடவுளின் ஏஜென்ட் தான் இந்த பாதிரியார் pola...
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
28-ஜூலை-201804:00:49 IST Report Abuse
meenakshisundaram பாவ மன்னிப்பு என்ற ஒன்று கிடையாது. செய்த பாவம் மனச்சாட்சி உள்ளவர்களை உருத்திக்கொண்டுதானிருக்கும். இதற்க்கு ஹிந்து மத வழக்கங்களின் படி 'பிராயச்சித்தம் 'ஒன்றே வழி.ஏதாவது நல்ல காரியங்களை அவர்கள் செய்தால் இந்த மன உறுத்தல் சற்றே குறைய வழியுண்டு,இதை மனதில் கொண்டே ஹிந்துக்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டு உய்வுறார்கள். மேலும் தீர்க்க முடியாத கஷ்டங்கள். துன்பங்களை 'கர்மா வினை'என்றே கூறி அவற்றை தாங்கிக்கொள்கிறார்கள். இந்த கோட்பாடே இறுதியில் மனிதனுக்கு வேண்டிய மனோ பலத்தையும் ஆறுதல் களையும் தருகிறது.இதன்றி எந்த ஒரு மனிதனாலும் அடுத்தவனின் பாவத்தை போக்க இயலாது.கிறிஸ்தவ அன்பர்கள் இதை முதலில் நன்கு அறிந்து கொண்டு தனி மனிதன் வாழ்வில் உய்வு பெற முயலவேண்டும்.கூட்டாக கூடி 'அற்புதங்கள்' என்று கூறி வியாதிகளை நீக்குவதாக எந்த முயற்சியும் செய்தல் சுத்த ஏமாற்று வேலையே.நமது பகுத்தறிவு வாதிகள் இதை கண்டுகொள்ளமாட்டார்கள்.பாதிரிமார்களும் நவீன வசதிகளை கொண்ட ஆடம்பர இருப்பிடங்களில் வசிப்பது சகஜமாகிவிட்டது. எளிய வாழ்வு வாழ அவர்கள் பழகிக்கொள்ளவேண்டும்.ஆண்டவனை அடைய வழி காட்டுபவனென்றால் ஏனிந்த ஆடம்பர வாழ்வு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X