நட்பு நாடுகளுக்கு இந்தியா உதவி: பிரதமர்

Added : ஜூலை 24, 2018 | கருத்துகள் (12)
Advertisement
பிரதமர், மோடி, ருவாண்டா,

கிகலி: ருவாண்டா சென்ற பிரதமர் மோடி, தொழிலதிபர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், இந்தியா அதிவேகமாக வளர்ந்து வருகிறது. நாங்களும் வளர்ச்சி பெறுவோம். எங்களுடன் இருக்கும் நாடுகளும் வளர்ச்சி பெற உதவுவோம். இந்தியா ருவாண்டா இடையிலான பொருளாதார உறவை மேலும் ஊக்கப்படுத்த விரும்புகிறோம். இரு நாடுகளும் ஏராளமான பணிகளை செய்யலாம். ஊரக வளர்ச்சி மற்றும் சிறு குறு தொழில்துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்றார்.


பரிசு

முன்னதாக, ரூவாண்டா அரசு செயல்படுத்தும் கிரிங்கா திட்டத்தின் கீழ், புகுசேரா கிராமத்தில் 200 வீடுகளுக்கு இந்தியா சார்பில் 200 பசுக்களை பரிசாக வழங்கினார். ரூவாண்டா வழக்கப்படி, கிரிங்கா என்பது பல நூற்றாண்டு கலாசார வழக்கமாகும். அதில், ஒருவருக்கு காட்டும் மரியாதை நன்றி ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக, அவருக்கு பசு வழங்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
25-ஜூலை-201800:12:06 IST Report Abuse
Mani . V இப்ப மட்டும் என்ன வாழுதாம்? நட்பு நாடுகளும், நண்பர்களும் மட்டுமே வளப்பமாய் வாழ்கிறார்கள் - இந்தியர்களின் வியர்வையில்.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Kumar - coimbatore,இந்தியா
24-ஜூலை-201821:01:26 IST Report Abuse
Ramesh Kumar ஏழைநாடுகளுக்கு இந்தியா உதவி செய்து வருவது என்பது காலம்காலமாய் பின்பற்றப்பட்டு வரும் ஒரு ராஜ தந்திர நடவடிக்கை...அதேசமயம் இந்திய ஏழைகளையும் கொஞ்சம் கவனிங்க பிரதமரே....நீங்க எப்ப எங்க இருக்கீங்கன்னு தெரியவே மாட்டேங்குது...
Rate this:
Share this comment
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
24-ஜூலை-201820:29:46 IST Report Abuse
Palanisamy T பிரதமர் அவர்களே, உங்களின் அகராதியில் நட்பு நாடுகளென்றாலென்ன? - உங்களின் நட்பு நாடுகளின் பட்டியலில் இன்றும் இலங்கையுள்ளதா? - அன்று இலங்கை போர்க் குற்றங்கள் செய்யுமென்றுத் தெரிந்தும் இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவிகள் செய்தும், ஐநா வில் இலங்கைக்கு பாதுகாப்பும் கொடுத்தும், இன்றைக்கு நன்றிக் கடனாக சீனாவிற்கு 99 வருடக் காலத்திற்கு Hambantota துறைமுகத்தை குத்தகைக்கு கொடுத்து விட்டார்களே - ஏனென்று இன்னும் புரியவில்லை
Rate this:
Share this comment
வீர சொம்பு கேசரி - New Delhi,இந்தியா
24-ஜூலை-201820:55:05 IST Report Abuse
வீர சொம்பு கேசரிஅதெல்லாம் ராணுவ ரகசியம்.. மோடிஜியின் சாணக்கியம். உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. சொன்னாலும் உங்க ரிசர்வேஷன் மரமண்டைக்கு புரியாது....
Rate this:
Share this comment
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
25-ஜூலை-201801:34:52 IST Report Abuse
Palanisamy Tஇதிலெங்கிருந்து வந்தது ராணுவ கமுக்கச் சேதியும் (ராணுவ ரகசியம்), மோடிஜியின் சாணக்கியமும். -அவர்ச் சொல்லவேண்டிய அவசியமிராதுதான் - ஆனால் நீங்கள் தாராளமாகச் சொல்லலாம் - மேலும் கடந்தக் காலங்களில் நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவுக் கோள்கைகளென்றப் பேரில் நடந்த சிலவற்றை பொது மக்களென்றப் பார்வையில் மட்டும் சொன்னால் நன்றாயிருக்காது சாமி அவர்களே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X